Followers

Friday, July 25, 2008

வாழ்வியலும் மொழியும்

நடந்து முடிந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசிய முன்னேற்றுக் கட்சியும் எதிர்க்கட்சிகளும் செய்த கூத்துக்கள்,சேட்டைகள் போலவே எனது முந்தைய பதிவில் எப்படியாவது சதம் அடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கும்மிப்பதிவர்கள் கும்மு,கும்முன்னு கும்மி விட்டார்கள்.

தமிழ் சினிமாவுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கின்றது.ஒரு படம் கதாபாத்திரத்தின் காரணமாக வெற்றி பெற்று விட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லது நடிகருக்கு அதே மாதிரியான ஒரு முத்திரையை தயாரித்து விடுவார்கள்.அந்த மாதிரி நடிகர் நடிகைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

அப்படி ஒரு முத்திரையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சிவாஜி கணேசன்,கமல் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களை ஏற்க வேண்டும்.நான் அந்த மாதிரி நடிப்பில் மெழுகா உருகிப்போய் விட்டு அந்த பாலபாடங்களையெல்லாம் மறந்து விட்டால் என்னையும் கும்மிப்பதிவன் என்ற முத்திரை குத்தி விடுவார்கள் என்ற ஞானோதயத்தில் உருவான பதிவு இது.

தற்போது தமிழில் புகைப்படம் பதிவர் வட்டத்தில் சேர்ந்த பின் தெரிந்து கொண்ட விசய ஞானம் படங்களை எடுத்து சிறிது மெருகேற்றியதும் போட்டிக்கான கற்பனைகளுடன் பதிவிரக்கம் செய்து விடுகிறோம். ஆனால் எடுத்த படத்துக்கும் அப்பால் படங்களுக்கு மெருகூற்றுவது ,அந்தப் படங்களை எப்படிப் பேசவைப்பது ( பதிவுகளில் எதச்சொன்னாலும் மக்கள் நம்புறாங்கப்பாங்கிற வெட்டிப்பயலின் வாசகம் வருவதால் பேசுவது) என்பது அனிமேசன் எனக்கூறப்படும் படங்களின் நகர்வு, மேலும் குறுந்தகடுகளாவதற்கு முந்தைய எடிட்டிங் எனக்கூறப்படும் தணிக்கை இறுதியில் குறுந்தகடுகளாக மாற்றுவது எப்படி போன்ற தொழில் நுட்பங்கள் ஒழிந்து கிடக்கின்றன. பிரேம்ஜி போன்ற வித்வான்கள் இந்த நுட்பங்களை பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

அடுத்து கும்மிகள் - இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க உதவினாலும் பெரும்பாலான பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.பகிர்தல் என்ற கோட்பாட்டில் தமிழையும், அதற்கு உதவும் தமிழ்மணத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.முக்கியமாக இதன் தாக்கம் இன்னும் விரிவடைய வேண்டும். ஆறுகோடித்தமிழர்களில் எத்தனை பேருக்கு பதிவுகளின் தாக்கம் சென்றடைகிறதென்று தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நாவின் அறிக்கை : தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வரிகளை ஊக்கப்படுத்தும் படி இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கும் என்பது.எனக்கும் கூட பொதுப்புத்தி அறிவில் அது சரியாகத்தான் இருக்கும் எனப்பட்டது. அந்தக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக வாழ்வைத் தேடிப்போன இடத்தில் மொழி மறந்து போன சான்றாய் இன்றும் மொரிஷியஸ்,ஆப்பிரிக்கா,அய்ரோப்பா நாடுகளில் வாழும் சந்ததியினர் கூடவே சமீபத்து கென் பதிவில் ஒட்டவைத்த சாருவின் எழுத்துக்கள் போன்றவை இதனை உறுதி செய்தது.ஆனால் தமிழ்மணம் போன்ற அசாத்திய திரட்டிகளும் பதிவர்களின் ஆக்கபூர்வமான உழைப்பும் அந்தக் கூற்று தோற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.


ஒளி ஊடகங்கள் மக்களின் ரசனைகளை மென்மைப்படுத்தியிருக்கலாம்.கமல்கூட சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தார்.ஆனால் திரைப்படம் சின்னத்திரையின் பலங்களை அழித்து தமிழ்வாழ்வின் பல அங்கங்களைச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் வந்து சிம்மாசனம் போட்டுக்கொண்டது. இதனூடே சின்னத்திரைகள் நமது வாழ்வைப் பிரதிபலிக்கின்றனவா அல்லது அதனது லயத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றனவா எனத்தெரியவில்லை.காரணம் சின்னத்திரையின் தாக்கம் இன்று நம்மிடம் அதிகமாகவே உள்ளது.தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் பேசும் முறைகள் நம்முடைய மொழி பேசும் முறையை ஏளனம் செய்கிறது.

இரண்டு சகாப்தங்களையும் கடந்தும் ஈழத்துப்பிரச்சினை முடிந்தபாடில்லை.அதற்கான நமது தார்மீக உணர்வுகளையும் எழுத்துக்களாய் நாம் வெளிப்படுத்த வேண்டும்.உணர்ச்சிகளுக்கும் மேலாய் மனிதம் வெளிப்படவேண்டும்.விடியலுக்குக் காத்திருப்போம்.

23 comments:

பரிசல்காரன் said...

கமலஹாசனே எந்தவொரு சீரியஸான படத்துக்குப் பின்னும், ஒரு ஹ்யூமரைக் கொடுப்பார். ஆகவே, கும்மிப் பதிவர்களும் வலைப்பதிவு வாசகர்களை உயிர்ப்போடு வைத்திருக்கவே உலா வருகின்றனர் என்பது என் எண்ணம்.

இதுபோல கும்முபவர்களுக்கும் உலகியல் பார்வை இருக்கும். எனினும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை சபை முன் வைத்து அதிகமாக வாதாடுவதில்லை. காரணம் கும்மிப்பதிவர்களின் மனம் கொஞ்சம் லேசானது. தனிப்பட்ட கருத்தை வைக்கும்போது வரும் கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்களாய் பெரிதாகுமோ என்ற அச்சமே காரணம்! (விதிவிலக்குகளும் இருக்கலாம்)

//இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க உதவினாலும் பெரும்பாலான பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.//

மாற்ற முயற்சியுங்கள்! நல்ல படைப்புகளைத் தாருங்கள். கை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்!!!

(கமல்ஹாசன் சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தாரா? நான் படித்த/கேள்விப்பட்டவரை `விஞ்ஞான வளர்ச்சி தவிர்க்க இயலாதது... ஆனால் சினிமாவை நாம் கொண்டுசெல்லும் விதத்தின் மூலமாகத்தான் மக்களை திரையரங்கங்களுக்கு இழுக்கவேண்டும். எந்த வடிவமும், இன்னொரு வடிவத்தை அழிக்க முடியாது' என்று அவர் சொன்னதாக நினைவு!)

பிரேம்ஜி said...

வணக்கம் நடராஜன். புகைப்படங்களுக்கு மெருகூட்டும் வித்தைகள் பலவும் பிட் தளத்திலேயே பிட் நண்பர்களால் சிறப்பான முறையில் பல பதிவுகள் இடப்பட்டுள்ளது.அதை விட வேறு பாடங்கள் தேவையில்லை என்பது என் கருத்து.
நீங்கள் சொல்லியுள்ள மற்ற தொழில் நுட்பங்கள் பற்றி என் சிற்றறிவுக்கு எட்டியவரை தர முயற்சிக்கிறேன்.

தமிழ் பொறுக்கி said...

பல தளங்களையும் தொட்ட பதிவிற்கு பாராட்டு...
தமிழ் வலைகள் பெருகினால் தமிழ் வாழும்..உண்மை தான் நண்பரே..
அதே போல் தமிழ் அகராதியும் மென்பொருள் எழுதியில் வர வேண்டும்..
அப்போது நீங்கள் சொன்ன ப் , சந்தி பிழைகள் குறையும்...
இறுதியாக காசி அனந்தன் கவிதை நினைவிற்கு வருகிறது...
அடக்கம் செய்யபடுகிறோம்
இரண்டு பெட்டிகளில்
ஒன்று சவப் பெட்டி
மற்றொன்று தொலைக்காட்சி பெட்டி...

ராஜ நடராஜன் said...

//ஆகவே, கும்மிப் பதிவர்களும் வலைப்பதிவு வாசகர்களை உயிர்ப்போடு வைத்திருக்கவே உலா வருகின்றனர் என்பது என் எண்ணம்.//

//இதுபோல கும்முபவர்களுக்கும் உலகியல் பார்வை இருக்கும். //

பரிசல்காரன்:)நேற்றைய எழுத்துக்கும் இன்றைய எழுத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தீர்களா? ஒரே மனதின் இரு முகங்களில் இந்த முகமே எனக்குப்பிடித்திருக்கிறது.எனக்கு மட்டுமென எல்லாருக்கும் இந்த முகம் நிச்சயம் பிடிக்கும்.நமது கும்மிகள் அதாவது பரவாயில்லை அதற்கும் அப்பாலும் பதிவர்கள் காட்டும் முகங்கள் பதிவர்கள் என்றாலே ஒரு விதம் என்ற தோற்றத்தை தமிழ் ஆர்வம் கொண்ட பதிவுக்கு அப்பால் உள்ளவர்களை நினைக்க வைக்கிறது.காரணம் நாம் காட்டும் முகம்.நம்மிடம் உள்ள ஆயுதமே இந்த தட்டச்சுதான்.நாம் தட்டும் எழுத்துக்கள் சமுதாயத்திற்கும் ஈழம் போன்ற பிரச்சினைகளுக்கும் வரலாற்றுக்கும் வலுவூட்ட வேண்டும் என்ற பார்வை எனக்கு உண்டு.பிளாக் என்பதே ஈமெயிலின் அடுத்த பரிமாணம்.சொல்வதற்கும் பகிர்தலுக்கும் நிறைய உள்ளது.உங்களது அழகான இந்த முகத்திற்கு எனது மரியாதைகள்.மீண்டும் காண்போம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//கமல்ஹாசன் சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தாரா?//

சின்னத்திரையின் துவக்கத்தில் அவரது பார்வை அப்படித்தான் இருந்தது.

ராஜ நடராஜன் said...

//மாற்ற முயற்சியுங்கள்! நல்ல படைப்புகளைத் தாருங்கள். கை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்!!!//

முயற்சிப்போம்.தருவோம்.தயாராக இருப்போம்:)

rapp said...

என்னமோ போங்க, எல்லாக்காலத்திலையும் இப்படியேதான் சொல்றாங்க, ஆனா எதுவும் அத்துமீறி போனதில்லை. அது பதிவுலகமா இருந்தாலும் சரி டிவியா இருந்தாலும் சரி. எங்க தாத்தா காலத்தில் சரோஜா தேவியவர்கள் பேசிய தமிழால் தமிழழிஞ்சிடுச்சா, அதுப்போல இப்பவும் டிவி தொகுப்பாளினிகளோட தமிழால் எந்த பெரிய தாக்கமும் ஏற்படாது. அப்பப்போ வர்ற மாற்றங்களை தீங்கில்லாத(சட்டத்துக்குட்பட்டு) அளவுல மத்தவங்க பயன்படுத்தும்போது இது உபயோகமானது, அது உபயோகமில்லாததுன்னு சொல்றதே ஒரு விதண்டாவாதம்.

//கமல்ஹாசன் சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தாரா? நான் படித்த/கேள்விப்பட்டவரை `விஞ்ஞான வளர்ச்சி தவிர்க்க இயலாதது... ஆனால் சினிமாவை நாம் கொண்டுசெல்லும் விதத்தின் மூலமாகத்தான் மக்களை திரையரங்கங்களுக்கு இழுக்கவேண்டும். எந்த வடிவமும், இன்னொரு வடிவத்தை அழிக்க முடியாது' என்று அவர் சொன்னதாக நினைவு//

நானும் அப்படித்தான் படிச்சும் கேட்டும் இருக்கேன்

ராஜ நடராஜன் said...

பிரேம்ஜி!வருகைக்கு நன்றி.பிட் படம் என்பது வலைக்குள்ளேவோ அல்லது அதனை அச்சிட்டு வரவேற்பறையில் அழகிடுவது.ஆனால் அந்தப் படத்தை அனிமேசன் எனும் நகர்த்தலுக்கும் அந்த நகர்வை குறுந்தகட்டுக்கும் கொண்டும் செல்லும் முயற்சி.வீட்டுக்கு பிரேம்ஜி வந்தால் வரவேற்பறையில் உட்காரச்சொல்லி சுவற்றை உற்றுப் பார்க்க வைக்கவோ
அல்லது இத்தனை நாட்கள் உருவாக்கிய பிட் படங்களை இதோ இந்த குறுந்தகட்டைப் பார்த்துக் கொண்டிருங்கள்.காபிக்கு சர்க்கரையில்லை இரண்டு நிமிடத்தில் வாங்கி வந்து விடுகிறேன் எனச்சொல்லி உங்களை தனிமையிலிருந்து விடுவிப்பது.

(உடனே கும்மிகள் திரைப்பட குறுந்தகட்டைப் போட்டுக்காட்ட வேண்டியதுதானே எனக் கூவ வேண்டாம்.திரைப்படக் குறுந்தகடு என்பது வாடகை வீடு மாதிரி.நாம் உருவாக்கிய குறுந்தகடு நாமே கட்டிகிட்ட வீடு மாதிரி:)

ராஜ நடராஜன் said...

// தமிழ் வலைகள் பெருகினால் தமிழ் வாழும்..உண்மை தான் நண்பரே..
அதே போல் தமிழ் அகராதியும் மென்பொருள் எழுதியில் வர வேண்டும்..
அப்போது நீங்கள் சொன்ன ப் , சந்தி பிழைகள் குறையும்...
இறுதியாக காசி அனந்தன் கவிதை நினைவிற்கு வருகிறது...
அடக்கம் செய்யபடுகிறோம்
இரண்டு பெட்டிகளில்
ஒன்று சவப் பெட்டி
மற்றொன்று தொலைக்காட்சி பெட்டி...//

மீண்டும் ஒரு அழகான பார்வை ஆனால் தமிழ்ப்பொறுக்கி என்ற அயர்னியுடன்.காசி அனந்தனே பெயரை விரும்ப மாட்டார்.

கவிதை தந்தமைக்கு நன்றி.காசி அனந்தன் கவிதைக்கு மகுடம் சூட்டுவதே "தமிழா!நீ பேசுவது தமிழா".

ராஜ நடராஜன் said...

//எல்லாக்காலத்திலையும் இப்படியேதான் சொல்றாங்க, ஆனா எதுவும் அத்துமீறி போனதில்லை. //

அத்து மீறுவது நமக்கே தெரியாது ராப்.இந்த விலைவாசி உயர்வுன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?எரிபொருள் விலை ஏறுவது தீ போல பரவும்.ஆனால் மற்ற உணவுப்பொருட்களின் விலை மாற்றத்தைக் கவனித்து இருக்கிறீர்களா?

இங்கே விலைவாசி எப்படி ஏறுகிறதென்றே தெரியாது.வீட்டுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் சூப்பர் மார்க்கட் என்னும் உயர் அங்காடியில் வாங்கி விடலாம்.அனைத்துக்குமே விலை முத்திரைதான்.உதாரணத்திற்கு வீட்டுக்கு சமையலுக்கு எண்ணை வேண்டுமென்றால் வாங்கும் திறன் காரணமாக KD 1.350 என்று போடப்பட்டிருக்கும் குப்பியை அப்படியே வாங்கி வந்துவிடுவோம்.ஆனால் அதன் விலை சில தினங்களுக்கு முன்தான் KD.1.250 ஆக இருக்கும்.பொருளை எடுக்கும்போது தெரியாத விலை உயர்வு காசைக் கொடுக்கும்போதுதான் மூளைக்கு உறைக்கும்.எதுவுமே மெல்லிய நகர்ச்சிதான்.அதன் தாக்கங்கள் மெதுவாகத்தான் தெரியும்.முன்பு பேசுவது ஒன்று சுத்த ஆங்கிலமாக இருக்கும்.அல்லது ஆங்கிலம் தெரியாமல் தமிழில் படித்த காரணத்தால் தமிழ் மட்டுமே பேச்சு வழக்கில் இருக்கும்.இப்போது அப்படியில்லை.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று யாராலாவது சொல்ல முடியுமா?ஆனாலும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

சரோஜாதேவி தமிழ் பேசும் முறையில்தான் வித்தியாசம் இருந்ததே ஒழிய அவர் இடைச்செறுகல்களாக இங்கிலிபீசு எங்கே செய்தார்?நேரம் கிடைக்கும்போது ராஜ் டிவி தொகுப்பாளர் தொகுப்பாளினி தமிழ் கேட்கவும்.நாளை மறுநாளை ஞாயிறு.ஐயா அப்துல் ஹமிது எங்காவது சின்னத்திரையில் தென்படுவார்.அவரது தொகுப்பையும் கவனிக்கவும்.

//டிவி தொகுப்பாளினிகளோட தமிழால் எந்த பெரிய தாக்கமும் ஏற்படாது.//

என்னத்த சொல்றது?மொழி என்பதே கேள்வி ஞானம்ங்க.ஆனால் அதனை எழுத்து என்ற ஆயுதம் அது எனக்குரியது என வாழ்க்கைப் பத்திரம் எழுதிக்கொள்கிறது.அதுவே இலக்கியம்,கலாச்சாரமாகிப் போய்விடுகிறது.

சின்னப் பையன் said...

ஏகப்பட்ட மேட்டரை சொல்லிருக்கும் அருமையான பதிவு...

1. புதுசு புதுசா வர்ற பதிவர்கள் - ஆரம்பத்திலே சொந்தக்கதை, மொக்கைகள், அனுபவங்கள் இப்படின்னு ஆரம்பிப்பாங்க. போகப்போக அவங்க மாறணும்னு எதிர்பார்க்கறது நியாயம்தான். ஆனா, அந்த சமயத்திலே வேறே யாராவது புதுசா வந்து மொக்கை போட்டுட்டிருப்பாங்க. அதனாலே, எந்த காலத்திலும் வலைப்பதிவுகள் முழுக்க சீரியஸ் பதிவுகளா இருக்கணும்றது எதிர்பாக்கமுடியாது!!!.

2. மொக்கையிலும், நகைச்சுவையிலுமே பலப்பல சீரியஸ் மேட்டர்களை சொல்லமுடியும். அந்த காலத்தில் நம்ம கலைவாணரும், இந்த காலத்தில் சின்ன கலைவாணருமே நாம் காணும் சாட்சி. அதனால், சமுதாய பிரச்சினைகளை சொல்லும் பதிவுகள் பயங்கர சீரியஸாத்தான் இருக்கணும்னு கிடையாதுன்றது என் கருத்து...

3. பிரச்சினை என்னவென்றால், பதிவுலகத்திலும் 'அரசியல்' புகுந்து விளையாடுவதுதான். நீங்கள் ஈழப்பிரச்சினைகளைப் பற்றி என்ன கருத்து கூறினாலும், அதை அரசியல் சம்மந்தப்பட்டவர்கள் திசை திருப்பிவிடுவார்கள் - அப்போ நீ அதை செய்யலியா, அங்கே நடக்கலியா என்று. எங்கள் கட்சியின் தவறு என்று யாரும் ஒப்புக்கொண்ட மாதிரியே நான் பார்த்ததில்லை. அதனால், இந்த கட்சிகளையெல்லாம் தாண்டி ஒரு சமுதாயத் தாக்கத்தை பதிவுகள் செய்யவேண்டியிருக்கும். அதுக்கு இன்னும் நிறைய நாட்களாகும் என்பது என் கருத்து.

Thamira said...

என்ன ஒரேடியா சீரியசாக போய்கிட்டிருக்குது போலருக்குதே?.. மே ஐ கமின்?

முதலில் நடராஜனுக்கு ஒரு ஆமாம்! (அருமையான‌ டாபிக்)

அப்புறம் பரிசலுக்கு ஒரு ஆமாம்! ( நானும் உங்க கட்சி தல‌. ஏற்கனவே ஊரு, உறவு, உலகம்னு எல்லாத்தியும் பத்தி சிந்திச்சிகினுதான் இருக்கிறோம். அதை அல்லாத்தியும் அல்லார்கிட்டியும் சொல்லிக்கினு இருக்கமுடியாதுபா.. தேவப் படுமோது செய்வோம், நடந்துக்குவோம். இங்க வந்தது எதுக்கு? அத்தப் பாரு நீயி! நீயி சிலோன் பிரச்சினை பேசுனுங்கிறியா.. பேசு, இவன் கவுர்மெண்ட்ட‌ பத்தி பாடம் எடுக்கப்போறானா.. எடுக்கட்டும், அவன் பொட்டி தட்டுறதப் பத்தி பாடம் சொல்லித்தரப் போறானா.. பண்ணட்டும், நா கும்மியடிக்க வந்தேனா.. செஞ்சுட்டுப்போறேன். வுடுவியா?)

மேலும் ப்ரேம்ஜிக்கு ஒரு ஆமாம்! (//புகைப்படங்களுக்கு மெருகூட்டும் வித்தைகள் பலவும் பிட் தளத்திலேயே பிட் நண்பர்களால் சிறப்பான முறையில் பல பதிவுகள் இடப்பட்டுள்ளது//)

ராப்புக்கு ஒரு ஆமாம்! (//எங்க தாத்தா காலத்தில் சரோஜா தேவியவர்கள் பேசிய தமிழால் தமிழழிஞ்சிடுச்சா, அதுப்போல இப்பவும் டிவி தொகுப்பாளினிகளோட தமிழால் எந்த பெரிய தாக்கமும் ஏற்படாது.//)

இன்னாபா.. ஒரே ஆமாஞ்சாமி போட்டுக்கினுருக்கேன்! ச‌ரி வ‌ரேன்பா.!
(எம்மாம் பெரிசா எழுதிட்டே ராசா, த‌னி ப‌திவாவே போட்டுருக்க‌லாமே! மிஸ் ப‌ண்ணிட்டியேம்மா..)

பரிசல்காரன் said...

தமிழ்ப்பொறுக்கி & ராஜநடராஜன்...

அவர் காசி அனந்தன் அல்ல! காசி ஆனந்தன்! அவரது தமிழா நீ பேசுவது தமிழா-வின் முதல் வரிகள்...

அன்னையைத் தமிழ்வாயால்
`மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
`பேபி' என்றழைத்தாய்...
என்னடா தந்தையை
`டாடி'என்றழைத்தாய்..
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

ராஜ நடராஜன் said...

//எந்த காலத்திலும் வலைப்பதிவுகள் முழுக்க சீரியஸ் பதிவுகளா இருக்கணும்றது எதிர்பாக்கமுடியாது!!!.//


வணக்கம் தல.நேற்று வார இறுதியென்பதால் வீடு கூட்டுதல்,ஒரு புதிய அனுபவ மனிதர் சந்திப்பு என்று நேரம் போய் விட்டது.பின்னூட்டத்துக்குப் பதில் சொல்ல இயலவில்லை.

தலைசிறந்த சிந்தனையாளர்கள் நகைச்சுவைக் கலை அறிந்தவர்கள் என்பதை வரும் பின்னூட்டங்கள் உறுதி செய்கின்றன்.

ஒரே சீரியஸா பதிவுகள் எழுதுவது நல்லதல்ல என்பதே என் கருத்தும்.ஆனால் நகைச்சுவைக்குச் சேரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை சீரியஸான பதிவுக்கும் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.ஒருவேளை சீரியஸ் பதிவுகளையும் படித்து விட்டு கருத்துச் சொல்ல தயங்கிப்போய் விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//மொக்கையிலும், நகைச்சுவையிலுமே பலப்பல சீரியஸ் மேட்டர்களை சொல்லமுடியும். அந்த காலத்தில் நம்ம கலைவாணரும், இந்த காலத்தில் சின்ன கலைவாணருமே நாம் காணும் சாட்சி.//

நினைவில் நிற்பவர்கள்தான்.சந்தேகமேயில்லை.இந்தியா வந்த போது தங்கச்சி மகன் கோயம்புத்தூர் ஜங்சன்ல துவங்குன விவேக் வசனங்களை அசலா அப்படியே சொல்லி என்னையும் பக்கத்து சீட்டுக்காரர்களையும் சிரிக்க வைத்து சேலம் வரும் வரைக்கும் சொல்லி பின் ஒரு இடைவெளி விட்டு சென்னையில் வந்து முடித்தான்.சிரித்த அனுபவம்தான் இப்பவும் நினைவுக்கு வருகிறது.

ராஜ நடராஜன் said...

// பிரச்சினை என்னவென்றால், பதிவுலகத்திலும் 'அரசியல்' புகுந்து விளையாடுவதுதான்.//

உண்மையிலேயே எனக்குப் பதிவுலக அரசியல் தெரியாதுங்க.பரிசல்காரன் கூட என்ன இவ்வளவு அப்பாவியா இருக்குறீங்க என்றார்.

ராஜ நடராஜன் said...

// நீங்கள் ஈழப்பிரச்சினைகளைப் பற்றி என்ன கருத்து கூறினாலும், அதை அரசியல் சம்மந்தப்பட்டவர்கள் திசை திருப்பிவிடுவார்கள் - அப்போ நீ அதை செய்யலியா, அங்கே நடக்கலியா என்று. எங்கள் கட்சியின் தவறு என்று யாரும் ஒப்புக்கொண்ட மாதிரியே நான் பார்த்ததில்லை. //

உண்மைதான்.இந்த மாதிரி கட்சி சார்பு அரசியல் கூட இந்தப் பிரச்சினை இவ்வளவு வளர்வதற்கு காரணம். காழ்ப்புணர்வு அரசியல் செய்யாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அழுத்தத்தால் இந்தப் பிரச்சினை ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

ராஜ நடராஜன் said...

// அதனால், இந்த கட்சிகளையெல்லாம் தாண்டி ஒரு சமுதாயத் தாக்கத்தை பதிவுகள் செய்யவேண்டியிருக்கும். அதுக்கு இன்னும் நிறைய நாட்களாகும் என்பது என் கருத்து.//

அப்படித்தான் தெரிகிறது.உங்கள் சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//என்ன ஒரேடியா சீரியசாக போய்கிட்டிருக்குது போலருக்குதே?.. மே ஐ கமின்?//

வாங்க ராமிதா:) பொண்ணுக கண்ணுலயும் கல்யாணமாகாமல் வருத்தப்படும் வாலிபர் சங்கத்துலயும் பேரு பிரபலமாகுதான்னுப் பார்ப்போம்:)

ராஜ நடராஜன் said...

// அப்புறம் பரிசலுக்கு ஒரு ஆமாம்! ( நானும் உங்க கட்சி தல‌. ஏற்கனவே ஊரு, உறவு, உலகம்னு எல்லாத்தியும் பத்தி சிந்திச்சிகினுதான் இருக்கிறோம். அதை அல்லாத்தியும் அல்லார்கிட்டியும் சொல்லிக்கினு இருக்கமுடியாதுபா..//

இப்பப் புரிஞ்சு போச்சுபா.

ராஜ நடராஜன் said...

//மேலும் ப்ரேம்ஜிக்கு ஒரு ஆமாம்! //

தலக்கு இன்னொரு ஆமாம் போடுங்க.அப்பத்தான் புது புது விசயமா சீக்கிரம் சீக்கிரம் சொல்வாரு.தமிழ்நாட்டுக்குள்ளயும்,தஞ்சாவூருப் பக்கமும் கண்டெடுக்க வேண்டிய தங்கமெல்லாம் அமெரிக்காப் பக்கம் போனாத்தான் ஜொலிக்குது.

ராஜ நடராஜன் said...

// ராப்புக்கு ஒரு ஆமாம்!//

என்னை ஹிட் லிஸ்ட்டுல சேர வாழ்த்துன தேவதையாச்சே:)

டிஸ்கி: கூடவே குசும்பனுக்கும் ஒரு ஆமாம் போட்டிருக்கலாம்.பரிசலுக்குத்தான் ஆமா போட்டிட்டேங்களே:)

ராஜ நடராஜன் said...

//(எம்மாம் பெரிசா எழுதிட்டே ராசா, த‌னி ப‌திவாவே போட்டுருக்க‌லாமே! மிஸ் ப‌ண்ணிட்டியேம்மா..)//

மிஸ் பண்ணுறதலேயே இருங்க:)