Followers

Tuesday, August 30, 2011

3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை!

நாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பேயில்லை என்ற வசனம் பிடிக்காதவர்கள் சுப்ரமணீயன் சுவாமி,சோ,என்.ராம்,ராம கோபாலன் போன்ற இந்துத்வாவாதிகள்.இந்த லட்சணத்தில் இவர்கள் இன்று போய் நாளை வா என்ற ராமயாண கலாட்சேப காதலர்கள வேறு.

விடுதலைப்புலிகள் மீதான கோபம் அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ,மசூதிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்ற இஸ்லாமியர்களுக்கோ இன்னும் சொல்லப்போனால் சோனியா குடும்பத்திற்கோ கூட இருக்க கூடும்.இந்துத்வா பெயரில் திரியும் இண்டலக்சுவல் உளவியல் தீவிரவாதிகளுக்கு என்ன கோபம் இருக்க முடியும்? ராஜிவ் காந்தியை நண்பேண்டா சொல்வேன் என்று சுப்ரமணியன் சுவாமி சொல்ல முடியாதபடி சோனியாகாந்தி பற்றிய உண்மைகளோ அல்லது அவதூறுகளோ உங்கள் உதடுகளில் உதிர்த்த முத்துக்களாகவும்,எழுத்தாகவும் இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கிறது.என்.ராம்க்கு லங்கா ரத்னா கழுதைக்கு குட்டி சுவர் பரிசே சாட்சி.

விடுதலைப் புலிகள் இல்லாமல் இலங்கை தமிழர்கள் பற்றி விவாதிக்க இயலாது என்ற போதிலும் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர் என்ற முகமூடியிலாவது சோ போன்ற பத்திரிகையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய இயலும்.இப்பொழுது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட விட்ட நிலையில் மக்க்ள மீதான மகத்தான அன்பு கொண்டவனாக இருப்பவன் அடக்குமுறைக்கு எதிர்த்து குரல் கொடுப்பவனாக இருப்பவனே உண்மையான பத்திரிகையாளன். போபர்ஸை வெளிக்கொண்டு வந்த ஆர்வம் இலங்கைத் தமிழர்களின் துயரங்களில் காட்டாமல் போனதன் காரணம் என்ன?இதோ தமிழகத்தில் நிகழும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கும் போது மூவரின் மரணதண்டனையை ரத்து செய்வதை எதிர்த்து  உங்களின் ஒட்டு மொத்த குரல் ஒலிப்பதன் காரணம் என்ன?

கலைஞர் கருணாநிதி அவரது சுயநலத் தேவையின் கணங்களில் மட்டுமே உதிர்க்கும் தமிழன் பார்ப்பனன் என்ற பிரிவினை உங்கள் ரத்த நாளங்களிலும் ஊறிக்கிடக்கிறதா?கமல்,ஞாநி,வாலி போன்றவர்கள் பூணூல் துறந்த மகத்தான மனிதர்களாக வலம் வரும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எந்த சம்பந்தம் இல்லாமல் அடுத்தவன் உயிர் போவதில் உள்ள மரணத்தின் மீதான பற்றுக்கு காரணமென்ன?ஜெயேந்திரர் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப் பட்டு இந்து மதத்திற்கான இழுக்கு என்ற பெயரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்படும் நேரத்திலும் மரணதண்டனைக்கு எதிரான நிலையில் உங்கள் குரல் வெளிப்படுமா?

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலார்”

இந்த பதிவை இன்னும் நீட்டி முழக்கும் எண்ணம் இல்லை.

12 comments:

சார்வாகன் said...

நண்பரே,
இந்த இராமகோபாலன் & கோ விற்கு எந்த கொள்கையுமே கிடையாது.அதனால்தான் தமிழ்நாட்டில் யாரும் கண்டு கொள்வதில்லை.இந்து மத பாதுகாவன என்ற போர்வையில் உயர்சாதி ஆதிக்கவாதிகள் என்று கூறலாம்.தமிழன் என்ற சொல்லே இவர்களுக்கு ஒவ்வாமை ஆகிவிடும். இவர்களின் ஈழம் பற்றிய கருத்தியல் படித்தால் எரிச்சல்தான் வரும்.
கண்டு கொள்ளாதிர்கள்!!!!!!!!!.
இது அதற்கான சமயம் அல்ல என்பதால் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை!!!!!!!!
____________

மரண தன்டனை என்பதே நாகரிகமற்ற செயல்.அதிலும் இந்த அப்பாவிகளுக்கு அளிப்பது முறையற்றது.நம்பிக்கையோடு குரல் கொடுப்போம்!!!!!!
நன்றி

ராஜ நடராஜன் said...

//மரண தன்டனை என்பதே நாகரிகமற்ற செயல்.அதிலும் இந்த அப்பாவிகளுக்கு அளிப்பது முறையற்றது.நம்பிக்கையோடு குரல் கொடுப்போம்!!!!!!
நன்றி //

நீங்க சொல்லும் அடிப்படையில்தான் மனிதநேயம் உள்ள யாரும் சிந்திக்க முடியும்.ஆனால் சொல்லி வச்சமாதிரி இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அல்லாமல் மரணதண்டனையை ரத்து செய்வதற்கு எதிராகவும் கேஸ் போடுவேன் என்று மனநிலையை என்ன சொல்வது?

Very bad hindutva people.

rajamelaiyur said...

Final question super

Samy said...

No one question if anything happen to tamils.Thats why CHO and group dance.samy

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Final question super//

A day will come and we will see how these fellows react.

ராஜ நடராஜன் said...

//Samy said...

No one question if anything happen to tamils.Thats why CHO and group dance.samy//

The fault is with us Tamils.The cause is one but the echoing of the voice is in group formative.It is an advantage for the anti tamil sentiment guys.

அருள் said...

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html

ராஜ நடராஜன் said...

//அருள் said...

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html//

அருள்!உங்கள் தளத்தில் சட்ட நுணுக்கங்களின் இருபக்கங்களை சுட்டிக்காட்டியதைப் பார்வையிட்டேன்.நன்றி.

நிரூபன் said...

பாஸ்,
புலிகள் இருக்கும் போது சரி,
தற்போதும் சரி தமிழ் மக்கள் பற்றிய, ஈழப் போர் பற்றிய சரியான புரிதலற்ற கூட்டமாகத் தான் சோ முதலியோர் இருக்கிறார்கள். சுறனையற்ற இன உணர்வற்றோர் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களை மக்கள் மூலமாகவே விரட்ட வேண்டும் பாஸ்,

ஜோதிஜி said...

நிரூபன்

மேலே கீழே உள்ள பாஸ் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பார்த்தால் நடாவுக்கு கொடுத்துள்ள விமர்சனம் மிகச் சரியானதே.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

பாஸ்,
புலிகள் இருக்கும் போது சரி,
தற்போதும் சரி தமிழ் மக்கள் பற்றிய, ஈழப் போர் பற்றிய சரியான புரிதலற்ற கூட்டமாகத் தான் சோ முதலியோர் இருக்கிறார்கள். சுறனையற்ற இன உணர்வற்றோர் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களை மக்கள் மூலமாகவே விரட்ட வேண்டும் பாஸ்,//

தமிழன்,பார்ப்பனன் என்ற வேறுபாடுகள் அற்று மொழியின் அடிப்படையில் ஒற்றைக்குடையில் நாம் எதிர்காலத்தை நோக்கவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு.ஆனால் இவர்கள் செத்த மொழி சம்ஸ்கிருதத்தை முன்னிறுத்துவதோடு மனித நேயத்துக்கு எதிரான மனிதர்களாகவே காணப்படுகிறார்கள்.தனித்தனி தீவுகளாக இவர்கள் குரல் கொடுத்தாலும் ஒட்டுமொத்த கருத்துக்களை இணைக்கும் போது மண்ணுக்கு மரியாதையற்ற மனிதர்களாகவும்,மனிதம் இழந்தவர்களாவே காணப்படுகிறார்கள்.

சாதியம் கடக்க இவர்களை விமர்சனம் செய்வது அவசியமாகிறது.

ராஜ நடராஜன் said...

//JOTHIG ஜோதிஜி said...

நிரூபன்

மேலே கீழே உள்ள பாஸ் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பார்த்தால் நடாவுக்கு கொடுத்துள்ள விமர்சனம் மிகச் சரியானதே.//

சகோ!நிரூபன்!உங்களை நோக்கிய பின்னூட்டம்.நான் எஸ்கேப்:)