Followers

Thursday, August 11, 2011

அப்சல் குருவின் தூக்குத்தண்டனை

வாஜ்பாய் அரசின் பி.ஜே.பி காலத்து சம்பவங்களில் பொக்ரான் அணுகுண்டு சாதனைக்கு மாற்றாக ஜனநாயக தோல்விகளில் முக்கியமானவைகளில் இரண்டு தலிபான்களால் December 24, 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814  ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதும்,13 December 2001ல் இந்திய பாராளுமன்றத் தாக்குதலும் எனலாம்.

இந்திய பாராளுமன்றத் தாக்குதலில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2004ம் வருடம் உச்சநீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் எனும் அப்சல் குரு மரண தண்டனை October 20, 2006ல் நிறைவேற்றப்பட்டு  அவரது மனைவியின் கருணை மனு ஜனாதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது.இதில் இந்திய உள்துறையின் உள்குத்து வேலையில் முக்கியமானது என்னவென்றால்  June 23, 2010ல் ஜனாதிபதிக்கு அப்சல் கருணை மனுவை ஏற்கவேண்டாம் என்ற சிபாரிசை January 7, 2011ல் விக்கிலீக்ஸ் மாதிரி indianleaks.in வெளிப்படுத்திய அப்சல் குருவின் பைல் ஜனாதிபதியிடம் வந்து சேரவேயில்லையென்பதைக் கண்டு பிடித்த பின் நம்ம சிதம்பரம்  Feb 23, 2011ல் அது உண்மைதான் என ஏற்றுக்கொண்டார்.இப்பொழுது மீண்டும் August 10, 2011ல் மீண்டும் சிதம்பரம் தலைமையிலான உள்துறையே ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்துகிறது.இதே போன்ற உள்குத்து வேலைகள் நளினியின் தண்டனைக்காலம் முடிந்தும் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக உள்துறையால் செயல்படுத்தப்பட்டது என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் அரசு செலவில் பாதுகாத்த பின்பும் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது காலம் கடந்த செயலாகவே கூறலாம்.அரசியல் சார்ந்த இதுபோன்ற மரண தண்டனைகள் காந்தி-கோட்சே போன்ற லெகசியை மட்டுமே எதிர்காலத்தில் பதிவு செய்யும்.

கருணை மனுவை ஏற்று அப்சல் குரு விடுவிக்கப்படுவது எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கும்,அதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பான முன்மாதிரியாகவும் அமைந்து விடக்கூடும்.


இரண்டுமே சரியானதல்ல எனும்பட்சத்தில் வாழும் வரை அரசு செலவிலே இருந்து விட்டுப்போகட்டும் என்பதும் குற்றங்கள் செய்து சிறை நிரப்பும்!!! நிகழ்வாகவே அமைந்து விடும்.

மேற்கூறிய காலம் கடந்த மரணதண்டனை,கருணை மனு,வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற மூன்று நிலைகள் மிகவும் சிக்கலானவை.இவற்றிற்கு குற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உச்சநீதி மன்றம் மூன்று நிலைகளில் எது சரியானது என்ற தீர்ப்பை வழங்க முடியும்.

ஒரு மனிதன் செய்த குற்றத்திலிருந்து இன்னொரு மனிதன் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றமே முன்வைக்கப் படுவதாலா என்பதும் குற்றம் செய்தவரின் மனக்குரலையும் சரியாக பதிவு செய்து வைக்காமல் போகும் மனபாவங்களும் ஒருவரின் குற்றத்திலிருந்து ஆளும் அரசோ அல்லது சமூகமோ பாடங்களைக் கற்றுக்கொள்வதுமில்லை.இப்போதைய நிலையில் அப்சல்,நளினி போன்றவர்களின் மனநிலைகள் எப்படியிருக்குமென்ற உண்மைகள் எதுவும் சமூகத்திற்கு வெளிப்படுவதேயில்லை.

காந்தியின் துப்பாக்கி சூடு முன்வைக்கப் ப்ட்ட அளவுக்கு கோட்சேயின் பக்கத்து நியாயம் என்ன என்பதெல்லாம் சுதந்திர இந்தியாவில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் இணைய தள தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்பே கோட்சேயின் குரலும் கூட கேட்க ஆரம்பிக்கின்றன.அதே போல் அப்சல்,நளினி போன்றவர்களின் குரலும் கூட காலம் கடந்தே கேட்கப்படுமா என்ற கேள்வியும் வருவதை தவிர்க்க இயலவில்லை.

குற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே. 




 

9 comments:

Unknown said...

வன்முறை எப்போதும் எமது ஜீன்களில் பதிந்தே இருக்கிறது. அப்போ அப்போ எமது காட்டு வாழ்கையின் எச்சங்களை நினைவுறுத்தி கொள்(ல்)கிறோம் :)

Chitra said...

குற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.


..... சிந்திக்க வேண்டிய விஷயம் தான். பதிலும் விரைவில் கிடைக்கும் .

Unknown said...

அப்சல் குருவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இன்னும் ஏன் கெட்டவனுக்கு மரியாதையை தட்டில் வைத்து தருகிறார்கள் என்று தெரியவில்லை.
(இது கசாப்புக்கும் பொருந்தும்)

karthickeyan said...

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.

ராஜ நடராஜன் said...

//சாய் பிரசாத் said...

வன்முறை எப்போதும் எமது ஜீன்களில் பதிந்தே இருக்கிறது. அப்போ அப்போ எமது காட்டு வாழ்கையின் எச்சங்களை நினைவுறுத்தி கொள்(ல்)கிறோம் :)//

அழகாய் சொன்னீங்க சாய் பிரசாத்!சாருவின் தேகம் புத்தக வெளியீட்டில் எஸ்.ராமகிருஷ்ணன் வன்முறை குறித்தும் வன்முறை செய்வதற்கான சூழ்நிலைகளை நமது அன்றாட வாழ்க்கையில் இயல்பாய் செய்கிறோம் என்பதை அழகாய் சொல்லியிருக்கிறார்.காணொளி காணுங்கள்.கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//Chitra said...

குற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.


..... சிந்திக்க வேண்டிய விஷயம் தான். பதிலும் விரைவில் கிடைக்கும் .//

வன்முறைகள் மேலை நாட்டின் ஊற்று எனலாம்.ஹாலிவுட் படங்கள் கூட வன்முறை கலாச்சாரத்தின் ஒரு பகுதியே எனலாம்:)

ராஜ நடராஜன் said...

//பாரத்... பாரதி... said...

அப்சல் குருவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இன்னும் ஏன் கெட்டவனுக்கு மரியாதையை தட்டில் வைத்து தருகிறார்கள் என்று தெரியவில்லை.
(இது கசாப்புக்கும் பொருந்தும்)//

சில குற்றங்கள் வெளிப்படையாகவே தெரிகிறது.அதற்கு பின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் மரணதண்டனையை நீட்டிப்பதிலும்,கருணை மனுவை ஆறப்போட்டு தண்டிப்பதும் மரணத்தை விட அவஸ்தையான விசயம்.ஒரு வேளை அதற்காக வேண்டித்தான் கருணை மனு காலங்கள் நீட்டிக்கப்படுகிறதோ?

குற்றங்கள் இல்லாத குறைந்த பட்சம்... குற்றங்கள் குறைந்த சமூகம் தேடுவோம்.

100 நாள் ஜெயலலிதா ஆட்சி மதிப்பீட்டில் 99வது நாளே இறங்கிட்டீங்க போல தெரியுதே?நாமெல்லாம் 100 நாள் சரியா கணக்கு வச்சு பீல்டுல இறங்குவோமில்ல:)

ராஜ நடராஜன் said...

//karthickeyan said...

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.//

உங்கள் கருத்துக்கு நன்றி.திரும்ப வந்தீங்கன்னா ஜெயாவின் 100வது நாள் புதுப்படம் ரிலிஸாகியிருக்குது.பார்த்துட்டுப் போங்க.நன்றி.

Unknown said...

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை தடுக்கப்பட வேண்டும் என்று என்னும் "தமிழன்" என்னும் மனநிலை..,
நாடு விட்டு நாடு வந்து, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை மன்னித்து விட்டு விட தயங்குகிறது. (இங்கே இந்தியன் என்னும் மனநிலை தடுக்கிறது)


நான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம் எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை.