Followers

Saturday, July 26, 2008

காமிரா அனுபவம்

நண்பர் ஒருவர் மூலமாக காமிராவும் காமிரா உபகரணங்களும் ஒருவரிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக ஒரு வாரம் போன்முயற்சி செய்து நேற்று மீண்டும் அவரது நேரடித் தொடர்பு கிட்டியது.

நானோ சுதந்திரமாக ஒருத்தரை சந்திக்க நினைத்தமாத்திரத்தில் கால அவகாசத்துக்குத் தகுந்த மாதிரி அனுசரித்து சந்திக்கும் பழக்கம் உடையவன்.அவரோ நேரம் தவறாமையினை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் என்பது அவரது தொலைபேசி மூலமான நேரம் குறிப்பில் தெரிய வந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை சரியாக மாலை 6.00 மணிக்கு இருவரும் சந்திப்பதாகக் கூறி என்னை அவர் தங்குமிடத்திற்குப் பக்கத்தில் வந்து விடுமாறு சொன்னார்.நானும் நகரின் தெருக்களையெல்லாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் திமிரில் 4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு அவர் சொன்ன இடத்துக்குப் போனேன்.வாகனப் பாதையின் ரவுண்ட் அபவுட் எனும் ஒரு சுற்று வட்டின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் சொன்னபடியே யாரும் நிற்காத வட்டத்துக்குள் நமது ஊர் கான்ஸ்டபிள் போலிஸ் மாதிரி அவருக்காக காத்திருந்தேன்.

வந்தவர் சுமார் 60 வயதுக்கும் மேலானவர்.கண்ணாடி அணிந்திருந்தார். இருவரும் கைகுழுக்கிய சம்பிராதயத்துக்குபின் என்னை அழைத்துக்கொண்டு ஒரு புராதனமான பாழடையும் நிலையிலுள்ள பழையதோர் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் நேரே வாசலுக்கு இடது புறமான ஒரு கதவைத் திறந்தார்.திறந்த கதவின் உள்ளே நுழைந்ததும் ஒரு வித்தியாசமான இடத்துக்கு வந்த உணர்வு ஏற்பட்டது.காரணம் பழைய கட்டிடமும் அதற்கேற்றார் போன்றே நெரிசலான முன் அறையின் பொருட்களின் ஆக்கிரமிப்பும்.முன்னறைக்குப் பதிலாக நேரே படிப்பு படுக்கையென இருநிலை கொண்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆல்ஃப்ரட் ஹிட்சாக் மற்றும் ஆங்கில திகில் படத்துக்கு இணையாகவும் நமது திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் எந்தவித செட் எனப்படும் அமைப்புகளுக்கு தேவையில்லாமல் காமிராக் கோணம் அமைக்கவும் உகந்த இடம்.கதவுக்குப் பக்கத்தில் ஒரு யமாஹாப் பியானோ,இன்னும் காமிராவையும் கண்ணையும் நகர்த்திக் கொண்டு வந்தால் சின்னச் சின்ன அறைகள் கொண்ட அடுக்கில் புத்தகங்களும் காகிதங்களும்.இன்னும் கண்ணை நகர்த்தினால் ஒரு இரும்பினாலான மேசை இரு அடுக்குகள் கொண்டது.மேல் அடுக்கில் ஒரு சில புத்தகங்களும்,கீழ்த் தட்டில் தூசு தட்டாமல் நிக்கான் FG எழுத்துக்களுடன் காமிராவும் அதன் பக்கத்தில் லென்ஸ் ஒன்றும் அதன் முகமூடியும் அதையும் ஒட்டி ஒரு பொலராய்ட் காமிராவும் அடுத்து மமியா C220 எனும் நெற்றிப்பொட்டுடன் இன்னொரு காமிராவும் இன்னும் பொருட்கள் உள்ளே ஒளிந்து எட்டிப்பார்த்துக்கொண்டுள்ளது.இதன் அருகில் எனக்கு அவர் இருக்கை தந்தார்.



வழக்கமாக இருவர் சந்திக்கும்போது உள்ள லதானந் சித்தர் கூறுவது மாதிரியான break the ice சங்கடங்களை நான் நேர் கொள்வதில்லை.ஒன்று எதிரில் இருப்பவரை அவர் பேச்சைத் துவக்கட்டுமென அவரது கண்களை உற்று நோக்குவது மனுசன் சங்கோஜப் பேர்வழி மாதிரி தெரிந்தால் ஸ்டார்ட் மீசுக் சொல்வதுதான் எனது வழக்கம்.ஆனால் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை அவர் தராமல் அவரே உரையாடலைத் துவங்கினார்.

பேச்சு துவக்கமாக ஒரு நாள் இடது கண் எதை நோக்கினாலும் சிவப்புக் கலரில் தெரிந்ததாகவும் அதனால் அவரது இடது கண் கார்டியாக் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிப் போனதாகக் கூறினார்.இரவு நேரங்களில் வெளியே போக வேண்டுமென்றால் தெரு விளக்குகளுடன் டார்ச் விளக்கின் ஒளியும் கூடுதலாகத் தேவைப்படுகிறதென்றார்.

இங்கே மருத்துவர்கள் சரியில்லையென்றும் இந்திய மருத்துவரே அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை என்றார்.தான் கிறுஸ்துவ வழிமுறை வாழ்ந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களுக்குள் பார்வை கிட்டியதாகவும் சொன்னார்.தற்போது யாரும் இறப்புக்குப் பின் கடவுளுக்குப்பதில் சொல்லவேண்டிய பயமில்லாமல் வாழ்வதாகவும் சொன்னார்.

மண்ணின் மைந்தர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.நான் இங்கும் வாழ்வியலை மதம் சார்ந்த ஒழுங்கியலோடு வாழ்பவர்கள் உள்ளார்கள் என்றேன்.தனக்கு அப்படிப் படவில்லை என்றும் மேலும் எனக்குப் பேசுவதற்கு எந்தப் பங்களிப்புமில்லாமல் கிறுஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து துவங்கி அப்போதைய காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்.

அவரது பழைய ஏற்பாட்டின் பேச்சு கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நீண்டது.இவர் எப்பொழுது காமிரா விசயத்திற்கு வருவார் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவரது இன்னொரு அலமாரியின் புத்தகங்களைப் பார்வையிடுகிறேன்.ஒரு ஆங்கில டிக்சனரியும்,ஆங்கில தெலுங்கு மொழிபெயர்ப்பும் தவிர பெரும்பாலோனவைகள் பைபிள் புத்தகங்கள் என்று தோற்றம் தரும் கருப்புக் கலர் முகம் கொண்ட புத்தகங்கள்.எனது பார்வை பைபிளில் சென்றதும் பல மொழி பைபிள்களை ஒவ்வொன்றாய் சோதித்து விட்டு தான் கனடா,லண்டன்,இஸ்ரேல்,சிரியா,எகிப்து,லெபனான்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சுற்றி வந்துள்ளதாகவும் பின் என்னிடம் தமிழ் பைபிள் ஒன்றை நீட்டினார்.நான் வலது கையில் வாங்கி விட்டு இடது கையில் மேசை மேல் வைத்தேன்.அவர் இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லையென்றும் அதற்கான தருணம் வரும் சமயத்தில் மாத்திரமே நான் பைபிளைத் திறப்பேன் என்றும் சொன்னார்.

நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டு அவரிடம் சொன்னேன்.இந்துவாகப் பிறந்து,அரசினர் பள்ளியிலும் பின் கிறுஸ்தவப் பள்ளியிலும் படித்து இப்போதைக்கு ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் நான் மத எல்லைகளைக் கடக்கும் மனப்பக்குவம் வந்து விட்டதால் எந்த மதத்தையும் வெறுப்பதுமில்லை அணப்பதுமில்லையென்றேன்.நான் இங்கு வந்ததே உங்களிடம் காமிரா பற்றிப் பேசத்தான் என்றேன்.

அவர் மேசையினுள்ளே கையை விட்டு 35MM பிலிம்காமிரா ஒன்றையும் அதனுடன் ஒட்டிய பிளாஷ் இணைப்பையும் காட்டினார்.காமிரா பெயர் நிக்கான் F3, பிளாஷ் பேனாசோனிக்.தன் வாழ்வின் பெரும்பங்காக இந்த காமிராக்களும் இசையும்தான் பொருளாதார ஆதாரம் என்றார்.ஒரு மணி நேரத்துக்கு KD 5/= (சுமார் ரூ750)இசைக் கற்றுக்கொடுக்க பணம் வாங்குவதாகக் கூறினார்.என்கையில் நிக்கான் F3 யைக் கொடுத்துவிட்டு தன்னிடம் இன்னுமொரு நிக்காமேட்டிக் காமிரா இருப்பதாகவும் சொன்னார்.என்னடா மனுசன் நிக்கான் FG,பொலராய்ட்,மமியா,நிக்காமேட்டிக்ன்னு இத்தனைக் காமிராவை வைத்திருக்கிறாரே என்று பார்வையை சுவர்ப்பக்கம் திருப்புகிறேன்.

சுவற்றில் சின்ன வெள்ளைப் பலகையில் பைபிளின் வாசகம் ஏதோ ஆந்திர மொழியில் எழுதி வைத்துள்ளார்.அதற்கும் கீழே யமாஹா கீ போர்டு.அதற்கும் அடுத்து பேனாசோனிக் டெக்னிக்ஸ் என்ற பெரிய கீ போர்டு.எல்லாமே விற்பதாகக் கூறினார்.பரணில் கிடக்கும் வீடியோ லைட்டை எடுத்தார். அதே மாதிரி இன்னொன்று இருப்பதாகவும் அந்த ஜெர்மன் மாடல் தற்போது தயாராவதில்லையென்றும் சொன்னார்.சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் மற்ற நாட்டின் பெயர்ப்பலகைகளைக் காண்பது ரொம்ப அபூர்வம்.எனவே அவர் சொல்வது சரியெனப்பட்டது.

பின் வரலாறாகிப்போன பழைய தட்டச்சு மெசினைக் காட்டினார்.இத்தனைக்கும் நடுவில் அறையை அதிகமாக ஆக்கிரமிப்பது காகிதக் கட்டுகளும் பிளாஸ்டிக் பைகளில் மூடி மூடி வைத்திருக்கும் எனக்குத் தெரியாதப் பொருட்கள். முன்பு கடந்து வந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். வெளி ஹாலுக்குச் சென்று ஒரு நீண்ட ஏணியைக் கொண்டு வந்து பரண்மேல் ஏறினார்.அங்கேயிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை ஏணியிலிருந்தவாறே என்னிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினார்.

கீழே வந்து வெளிநாட்டில் புகைப்படமே கதியாகக் கிடக்கும் புகைப்படக்கலைஞர்கள் உபயோகப் படுத்தும் டோம் என்று சொல்லப்படும் போட்டோ ஸ்டியோவில் உபயோகப்படுத்தும் ரிஃப்ளக்டர் எனப்படும் விளக்குச் சாதனங்கள்.தயாரிப்பு பிரிட்டன்.அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை தேறும்.சின்ன டிஷ் ஆண்ட்டனா மாதிரியான அதன் பின்பாகம் இரண்டு பெரிய பெட்டிகளில் பரண்மீது தூங்குவதைக் காண்பித்தார்.

அப்பொழுதுதான் கவனித்தேன்.அவர் நிறுத்திய ஏணிக்கு அப்பால் தொலக்காட்சிப் பெட்டி இருந்தது.அதன் பக்கத்தில் VHS காலத்து வீடியோக் காமிரா ஒன்று பேனாசோனிக் M3000 முத்திரையுடன்.நான் அவரிடம் இப்பொழுது எல்லாமே கணினி மயமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டதாலும் இந்த மாதிரிப் பொருட்களை இபே பொன்ற தளங்களில் குறைந்த விலையில் வாங்கிவிடலாமென்றும் மனுசனை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தேன்.அவரோ அசருகிறப் பாட்டைக் காணோம்.

எனது கண்ணும் மனக்கணக்கும் எப்படியாவது அவரிடம் ஒரு காமிராவையும் விடியோ மற்றும் காமிரா விளக்கையும் வாங்கி வந்து சி.வி.ஆரிடம் ஒரு நல்ல பெயர் வாங்கிவிடவேண்டுமென்பது:) ஆனால் பெருசு ஒன்றும் விலை அசைக்கிறப் பாட்டைக்காணோம்.தொட்டதுக்கெல்லாம் சும்மா குத்து மதிப்பா ஐம்பதியாயிரம் கணக்கு சொல்கிறார்.

அப்புறம் இவ்வளவு நேர உரையாடலில் அவரது பேச்சின் பங்கே பெரும்பான்மையாக இருந்தாலும் நான் களைப்படைந்ததாக நினைத்து சமையல்க் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக சமையல்க் கட்டு.எல்லாமே ஒரு நேர்த்தியுடன் தான் பொருட்கள் இருக்குது.ஆனாலும் அந்தப் பெண்ணியப்பாங்கும் அழகுணர்ச்சியும் இல்லாமல் போனது.

உள்ளே போனதும் அவரது குளிர்சாதனப் பிரிட்ஜை திறந்தார்.உள்ளே வரிசையாக மூன்று தளங்களில் சின்னச்சின்ன பிளாஸ்டிக் வெள்ளை டப்பாக்கள்.அவையெல்லாம் தனது 3 மாதமாதத்திற்கான (கவனிக்கவும் மூன்று மாதம்)

சமைத்துக் குளிர்பதனப்பட்ட காலிபிளவர்,காரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட் போன்ற காய்றிகளின் கலவை மற்றும் எண்ணையிடப் படாத உப்புமாவும்.இந்தச் சின்னச்சின்ன டப்பா உணவுகளுடன் பக்கத்து வீட்டு அமீரகத்துக்காரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன கோதுமை குப்புஸும்தான் அவரது உணவு.மனுசன் மூன்று மாதத்திற்கும் ஒரே முறையாக சமைத்து வைத்துக்கொள்கிறாராம். இருபது வருடங்களுக்கு முன் கனடாவில் இரண்டு வருடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கதோசம் இதுவரை விடவில்லையாம்.அந்தப் பாழடைந்த கட்டிடத்திலேயே பதினெட்டு வருருச்த்துக்கும் மேலாக வாழ்கிறாராம்.அதே காரணத்தினாலும் அந்த பழைய கட்டிடம் காரணம் கொண்டும் துவக்கத்தில் கட்டிய வீட்டு வாடகை சுமார் 15000 இன்னும் தொடர்கிறதாம்.என்கிட்டேயெல்லாம் இரட்டிப்பாக 30000க்கும் மேல் பிடிங்கிக்கொள்கிறார்கள்:)

இவ்வளவு நேரம் தட்டச்சு செய்ததை கையில் விடியோக் காமிராக் கொண்டு போய் இருந்தால் நிகழ்வுகளை முக்கியமாக அந்த ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் அறையின் சூழலை படம் பிடித்து வந்திருக்கலாம்.முதல் சந்திப்பு என்பதாலும்,அப்படிப் பட்ட சந்திப்பில் காமிராக் கண்ணனாயிருப்பது இயலாத காரணத்தாலும் முடியவில்லை.இல்லையென்றால் பிரேம்ஜி,சின்னக்குட்டி ஸ்டைல்ல படம் பாருங்க சொல்லி சின்னக்குறிப்புகள் கொடுத்து பதிவின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

மீண்டும் ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை (குழந்தைகள் உட்பட) அவருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் முக்கியமாக அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)

டிஸ்கி: 25 வருடமாக அவர் இந்தியா செல்லாததற்கு நான் பொறுப்பல்ல.

38 comments:

ராஜ நடராஜன் said...

தமிழ்மணமே! எங்கே என் பதிவைத் தலைப்புப் பக்கத்தில் காணொமின்னு தாமிரா பஜ்ஜி சுடராறேன்னு அவர் கடைக்குப் போய் விட்டு வர்ரதுக்குள்ளே குடு குடுன்னு ஓடி நடுப்பக்கத்துக்கு வந்திடுச்சு:(

இதுக்கு அவ்வ்வ்வ் போடணுமா கூடாதா கும்மிக்கண்ணுகளா பதில் சொல்லுங்க?

பிரேம்ஜி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் தான்.:-))))

வித்தியாசமான மனுசரா இருக்கார். எல்லா விசயத்திலும் பத்து வருஷம் பின்னாடி இருக்கார்.சரி. பிலிம் கேமரா வாங்கி என்ன செய்ய உத்தேசம்??

chandru / RVC said...

மிக நுண்ணிய அவதானிப்புகளுடன் கூடிய நல்ல அனுபவ பதிவு நடராஜன்.(யப்பா, ஒரே லைன்ல அடிச்சுட்டேன்) உங்க அனுபவத்த என்னோட பின்னூட்டம் மறுமொழியிடப்பட்டவை பகுதிக்கு கொண்டுபோயிரும்.என்னாலான உதவி :)
பஜ்ஜி நல்லா இருந்துச்சா? :)

chandru / RVC said...

மிக நுண்ணிய அவதானிப்புகளுடன் கூடிய நல்ல அனுபவ பதிவு நடராஜன்.(யப்பா, ஒரே லைன்ல அடிச்சுட்டேன்) உங்க அனுபவத்த என்னோட பின்னூட்டம் மறுமொழியிடப்பட்டவை பகுதிக்கு கொண்டுபோயிரும்.என்னாலான உதவி :)
பஜ்ஜி நல்லா இருந்துச்சா? :)

ராஜ நடராஜன் said...

//பிலிம் கேமரா வாங்கி என்ன செய்ய உத்தேசம்??//

பிரேம்ஜி! காமிரா மீது ஆர்வமில்லை.ஆனால் அந்த டோம் மாதிரியான பொருட்கள் இப்ப இங்கே கிடைப்பது கடினம்.கண் அதன் மேல்தான்.ஆனால் யானை விலை சொல்கிறார்.

அழகாயிருக்கிறது விலை பயமா இருக்கிறது:)

ராஜ நடராஜன் said...

//உங்க அனுபவத்த என்னோட பின்னூட்டம் மறுமொழியிடப்பட்டவை பகுதிக்கு கொண்டுபோயிரும்.என்னாலான உதவி :)
பஜ்ஜி நல்லா இருந்துச்சா? :)//

மெய்யாலுமா?போய்ப் பார்க்கிறேன்.

ஆமா! நான் தாமிரா கடையில்தானே பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.உங்களுக்கு எப்படித் தெரிந்தது?

அந்தக்கடையில மொக்க பஜ்ஜி சூடாவே கிடைக்குது:)போய் சாப்பிட்டுப் பாருங்க.

துளசி கோபால் said...

தொடர்பிலே இருங்க. ஒரு வீக் மோமெண்டிலே விலை குறைச்சுக்குவார்.

அப்புறம் நம்ம சிவிஆர் அதை 'ஆசீர்வதிக்கட்டும்'

குசும்பன் said...

//4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு //

வணக்கம் பெரிய ஆபிசர்!

குசும்பன் said...

//ஊர் கான்ஸ்டபிள் போலிஸ் மாதிரி அவருக்காக காத்திருந்தேன்.//

அப்ப ஆபிசருக்கு பெரிய தொப்பையோ!!!

ராஜ நடராஜன் said...

துளசி மேடம்! நமக்கும் பேரம்பேசினோம்ங்கிற திருப்தியும் அதே நேரத்தில் விற்பவரை ஏமாற்றாத வியாபார பேரம்தான் எனக்குக் கைவந்த கலை.இருந்தாலும் அவர் அதற்கெல்லாம் அனுசரிக்கற மாதிரி மனுசனாத் தெரியல.அவருக்கு ரெண்டு மூணு வாண்டுகளை மியூசிக் கிளாஸ்க்கு சிபாரிசு செய்துட்டுத்தான் இதப்பத்தி யோசிக்கணும்.

நம்ம சி.வி.ஆர் தானே.மாசா மாசம் " ஆசிர்வாதத்துல " நம்முடைய வரிசையும் ஒருநாள் வராமலாப் போகுது:)

குசும்பன் said...

//கதவுக்குப் பக்கத்தில் ஒரு யமாஹாப் பியானோ,இன்னும் காமிராவையும் கண்ணையும் நகர்த்திக் கொண்டு வந்தால் சின்னச் சின்ன அறைகள் கொண்ட அடுக்கில் புத்தகங்களும் காகிதங்களும்.இன்னும் கண்ணை நகர்த்தினால் ஒரு இரும்பினாலான மேசை இரு அடுக்குகள் கொண்டது.மேல் அடுக்கில் ஒரு சில புத்தகங்களும்//

இது எல்லாம் எதுக்கு மெயின் மேட்டருக்கு வாரும்... அவர் வீட்டு கஜானா எங்கு இருக்கிறது???

குசும்பன் said...

//அவர் பேச்சைத் துவக்கட்டுமென அவரது கண்களை உற்று நோக்குவது //

மெட்ராஸ் ஐ இப்படிதான் பரவுகிறதாம்!!!

குசும்பன் said...

//மண்ணின் மைந்தர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.//

மண்ணின் மைந்தர்கள் ரொம்ப பழய படமாச்சே அதை ஏன் இப்பொழுது விமர்சனம் செய்தார்?

குசும்பன் said...

//காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்///

அவ்வ்வ் இதுக்கு பின்நவீனத்துவ கவிதையே புரியும் போல் இருக்கு!

குசும்பன் said...

//புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்றார்///

ஒரு குடும்பதை உருவாக்க சொன்னா ஒரு நாட்டையே உருவாக்கி தந்தார் எங்கப்பா...தந்தானே தந்தானே

குசும்பன் said...

//சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் //

நம்ம சீனா தாத்தா அவ்வளோ பெரிய ஆக்கிரமிப்பாளரா? அவ்வ்வ் ஏதோ பேங்கில் வேலை செய்வதாக சொன்னார்.:(((

குசும்பன் said...

//பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் //

மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்... பெணீய பதிவர்கள் அடிக்க வந்தாலும் வருவார்கள் ஆகையால் ஆண்கள் அங்கு சமயலே செய்யாததால் சுத்தமாக இருக்கும் என்று சொல்லவந்தேன் என்று சொல்லி எஸ் ஆகிறேன்.

குசும்பன் said...

//ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை//

எனக்கு இசை மேல் அலாதி பிரியமுங்க ஆனா ஷகிரா போன்ற மாரியாத்தாக்கள் பாடுவது மட்டும்தான் பிடிக்கிறது. ஆகையால் தாத்தா ரிஜெக்ட்டட்.

குசும்பன் said...

//அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)//

காசு கொடுக்காமலேயே சுட ஒரு ஐடியா இருக்கு...நீங்க மீசைய மட்டும் ஷேவ் செஞ்சிட்டீங்க எப்படியும் ஒரு 40 வயசு கம்மி ஆயிடுவீங்க... பின் தாத்தாவிடம் இசை படிக்க போய் அவர் எழுந்து எங்கேயும் போகும் பொழுது சுட்டு கொண்டு வந்துடவும்.

Thamira said...

நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக்குன்னு பதில் போடுறது? கைதேர்ந்த நாவல் எழுத்தாளர்களைப் போல அழகாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

அப்படியே நம்ப கடைக்கு சிபாரிசு செய்யும் உங்கள் பேரன்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

குசும்பன் said...

//ஆனால் யானை விலை சொல்கிறார்.//

இப்ப குதிரை,கழுதை விலை எல்லாம் கூட ரொம்ப ஏறி போச்சு அதுக்கு எல்லாம் இந்த IT மக்கள் தான் காரணம்.

ஆமாம் கேமிராவுக்கு விலை கேட்டா ஏன் அவரு யானைக்கு விலை சொல்கிறார்? கொஞ்சம் காது மந்தமோ!!!

குசும்பன் said...

//ராஜ நடராஜன் said...
அவருக்கு ரெண்டு மூணு வாண்டுகளை மியூசிக் கிளாஸ்க்கு சிபாரிசு செய்துட்டுத்தான் இதப்பத்தி யோசிக்கணும்//

உங்க போதைக்கு இந்த வாண்டுகளை ஊறுகாயாக ஆக்கிவிட போகிறீர்களே:(((
அவங்களாவது அழகான மியுஜிக் டீச்சரிடம் படிக்கட்டும்!!!

கிரி said...

//தாமிரா said...
நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக்குன்னு பதில் போடுறது? கைதேர்ந்த நாவல் எழுத்தாளர்களைப் போல அழகாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்

ராஜ நடராஜன் said...

// நடராஜன் இவ்ளோ .:பாஸ்டா பதிவுகளை போட்டீங்கன்னா எதுக்குன்னு பதில் போடுறது? //

அது வேற ஒண்ணுமில்லை.வாரக்கடைசியாவும் போச்சு,மனுசன சும்மா இருக்கவிடாம ஏதாவது ஒரு செய்தி கண்னுல மாட்டுது.

ராஜ நடராஜன் said...

////4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு //

வணக்கம் பெரிய ஆபிசர்!//

குசும்பு நீங்க வறுத்த முந்திரியும்,தவள மாதிரி லாலிபாப்ஸும் சாப்பிடாம இங்க என்ன செய்யறீங்க?

வெய்யில்ல வெளியே போனா உடம்பு கருத்துப் போறதால தங்கச்சி பதிவர் சந்திப்புக்கெல்லாம் விட மாட்டீங்குதாக்கும்.எனக்கெல்லாம் அந்தக் கவலையே இல்லை.வெயில்,மண்காத்து,மழை (அதுதான் ஆடிக்கொரு தடவையாச்சே)எல்லாத்துக்கும் சவால் விடற கலரு.

ராஜ நடராஜன் said...

// இது எல்லாம் எதுக்கு மெயின் மேட்டருக்கு வாரும்... அவர் வீட்டு கஜானா எங்கு இருக்கிறது???//

திருடா!திருடா!திருட்டுப்பயலே:)

ராஜ நடராஜன் said...

// மெட்ராஸ் ஐ இப்படிதான் பரவுகிறதாம்!!! //

மெட்ராஸ் ஐ நம்ம காலத்து தோஸ்த்து.இப்பவெல்லாம் டிங்குவும்
சிக்கன் குனியாவும்தான் அதிரடி ஆட்டத்தில்.

ராஜ நடராஜன் said...

//மண்ணின் மைந்தர்கள் ரொம்ப பழய படமாச்சே அதை ஏன் இப்பொழுது விமர்சனம் செய்தார்?//

படத்துக்கெல்லாம் பரிட்சை வெச்சா இப்பவும் 100 மார்க்குத்தான்.குசும்புக்கு 100 மார்க் தனி:)

ராஜ நடராஜன் said...

//காசு கொடுக்காமலேயே சுட ஒரு ஐடியா இருக்கு...நீங்க மீசைய மட்டும் ஷேவ் செஞ்சிட்டீங்க எப்படியும் ஒரு 40 வயசு கம்மி ஆயிடுவீங்க... பின் தாத்தாவிடம் இசை படிக்க போய் அவர் எழுந்து எங்கேயும் போகும் பொழுது சுட்டு கொண்டு வந்துடவும்.//

குசும்பு அந்தமாதிரி பெருசா இருந்தா காபி போட சமயலறைப் போறப்பவே கனவு பலிச்சிருக்குமே. என்னையும் கூடவேயில்ல 3 மாச "டிஸ்ப்பிளே" உப்புமாவக் காண்பிக்கிறமாதிரி கூட்டிகிட்டிப் போயிட்டாரு:(

அதுக்கெல்லாம் அமீரகத்துல ஆள் இருந்தா சொல்லுங்க.டிக்கட் எடுத்துட்டு வந்திடறேன்.இப்ப என்னமோ பக்கத்துவீட்டுகளுக்குப் போறதுக்கெல்லாம் விசா கடைக்குப் போகவேண்டாமாம்.

ராஜ நடராஜன் said...

இப்ப குதிரை,கழுதை விலை எல்லாம் கூட ரொம்ப ஏறி போச்சு அதுக்கு எல்லாம் இந்த IT மக்கள் தான் காரணம்.

நான் இந்த விளையாட்டுக்கு வரல.ஐ.டி மக்களா எல்லோரும் வந்து குசும்பன ஒரு மொத்து மொத்துங்க.

(இந்த மாதிரி ஐ.டி மக்களுக்கு முத்திரை குத்தி ஐ.டியா? வாங்க வாங்கன்னு நம்மூர்ல வீட்டு வாடகை
அதிகமாகப் போவது பாருங்க.

ராஜ நடராஜன் said...

ஆமாம் கேமிராவுக்கு விலை கேட்டா ஏன் அவரு யானைக்கு விலை சொல்கிறார்? கொஞ்சம் காது மந்தமோ!!!

காதெல்லாம் நல்லாத்தான் கேட்குது.கண்ணுதான் கார்ட்ராய்ட் கோளாறு.

எனக்கென்னமோ அவர் பேச்சைக்குறைத்தாலே அவரது கண்நரம்புகளுக்கு ஆறுதல் என நினைக்கிறேன்.

இன்னுமொன்னு சொல்லமறந்துட்டேனே!ஒருதடவை அவரிடம் பேசுபவர்கள் அடுத்த முறை அவரது இல்லத்துக்கு வருவதில்லையாம்.

நாமெல்லாம் யாரு?சிங்கமில்லே! வசனம் பேசுற ஆளுக்கிடையாது.வித்தியாசமான???? குசும்பு மாதிரி குணங்களுடைய ஆட்களத் தேடுற ஆளு.

ராஜ நடராஜன் said...

// அப்ப ஆபிசருக்கு பெரிய தொப்பையோ!!!//

தொப்பையில்லா ஆபிசருமுண்டோ:)

ராஜ நடராஜன் said...

//அவ்வ்வ் இதுக்கு பின்நவீனத்துவ கவிதையே புரியும் போல் இருக்கு!//

அவ்வ்வ்வ் வ எங்க இதுவரைக்கும் காணோமின்னு பார்த்தேன்:).நானும் ஒரு அவ்வ்வ்வ்வ் சொல்லிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//ஒரு குடும்பதை உருவாக்க சொன்னா ஒரு நாட்டையே உருவாக்கி தந்தார் எங்கப்பா...தந்தானே தந்தானே//

இந்த்ப்பக்கத்து வீட்டு சண்டைகளெல்லாம் முடியட்டும்.இஸ்ரேல்காரன்கிட்டச் சொல்லி உங்களப்பத்தி கோள் மூட்டுறேன்.

ராஜ நடராஜன் said...

// நம்ம சீனா தாத்தா அவ்வளோ பெரிய ஆக்கிரமிப்பாளரா? அவ்வ்வ் ஏதோ பேங்கில் வேலை செய்வதாக சொன்னார்.:((( //

சீனா ??? உங்களுக்கொரு நக்கல்.நான் அம்பேல்.

ராஜ நடராஜன் said...

// மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்... பெணீய பதிவர்கள் அடிக்க வந்தாலும் வருவார்கள் ஆகையால் ஆண்கள் அங்கு சமயலே செய்யாததால் சுத்தமாக இருக்கும் என்று சொல்லவந்தேன் என்று சொல்லி எஸ் ஆகிறேன்.//

வருத்தப்படாத வாலிபர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்று வருத்தப்படாத கணவர்கள் சங்கம் ( சங்கம் ஏதாவது இருக்கா இல்லை ஆரம்பிச்சுடலாமா?)கேட்டுக்கொள்கிறது.

ராஜ நடராஜன் said...

குசும்பரே! You are spontaneous! சொல்லி முடிச்சிக்கிறேன்.

கோடம்பாக்கத்துக்குத் தடம்பதிக்க வேண்டிய கால்கள் தடம்புரண்டு விமானமேறி அமீரகத்துச் சூட்டில் மாட்டிக்கொண்டதே:)

Tech Shankar said...



Hi. Different Post.

good.