Followers

Sunday, July 27, 2008

அகமதாபாத்தின் முந்தைய பக்கம்.



வழக்கம்போலவே நாமும் நமது கோபங்களை பதிவு செய்து விட்டு வாழ்க்கையினை எதிர்கொள்ளப் போய்விடுவோம்.அரசின் அங்கங்களும் டிடெக்டர் எனப்படும் கருவிகளையும் குண்டுவெடிப்புக்களை கண்டு பிடிக்கும் நாய்களின் உதவி கொண்டு ஏதாவது நூல்சிக்கல்களை அவிழ்க்க இயலுகிறதா என்றும் பார்த்துவிட்டு அதற்குள் புதியதாக வரும் சற்றுமுன் செய்திகளின் பின் ஓடி விடுவார்கள்.அதற்குள் மக்களும் முந்தைய சம்பவங்களை மறந்து விட்டிருப்பார்கள்.

முந்தய சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் புதியதாக தீவிரவாதத்துக்கு உரம்போடவோ அல்லது இந்தமாதிரி தீவிரவாதம் நிகழ்வது தப்பே இல்லை என்ற எண்ணத்தில் தங்கள் கண்முன் ஏதாவது சமூக அநியாயங்கள் நிகழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் எதற்குமே சம்பந்தப்படாமல் பிரச்சினை நடக்கும் பகுதியில் வாழும் ஒரே குற்றத்துக்காக அவர்களின் எதிர்காலம்,அன்பு,உறவு எப்படி மாறிவிடுகிறது என்பதையும் மக்கள் அனைவரும் நுனிமூக்கு கோபத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மனிதநேயம் என்னவென்பதை சாட்சிப்படுத்துகிறது இந்தப் பதிவு.

அகமதாபாத்தின் தற்போதைய குண்டுவெடிப்பு இரண்டாவது அத்தியாயமாக அங்கு வாழும் மக்களுக்கு ஆகிவிட்ட இந்த சமயத்தில் ஆறு வருடங்களுக்கு முந்தைய இனக்கலவரங்களில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் முகமது சலீம் சேக் என்பவரும் அவருடைய மனைவி ஜெபுன்னிசா என்ற தாயும் தங்களது மகன் முசாபர் என்ற சிறுவனை கலவர வேகத்தில் கண்டுபிடிக்க முடியாமல் தனிமைப் படுத்தப்பட்டார்கள்.

இரண்டே வயதுடைய சிறுவன் தெருவில் சுற்றுவதைப் பார்த்த மீனா பட்னி என்ற தாய் முசாபரை விவேக் பட்னி என்ற பெயர் சூட்டலுடன் தனது மகனாக்கிக் கொண்டார்.தனது மகனைக் கண்டு பிடித்த முகமது சலீம்,ஜெபுன்னிசா தங்கள் மகனை தங்களிடம் ஒப்படைக்கவேண்டுமெனக் கூறவும் ஆறு வருடங்களில் தனது மகனாகிப்போன விவேக் பட்னி யை பிரிய மனமில்லாமல் மீனா பட்னி மறுத்துவிட்டார்.பிரச்சினை நீதிமன்றம் சென்றது.

தற்போது ஒன்பது வயதில் நிற்கும் முசாபர் விவேக் பட்னி தான் மீனா பட்னியுடன் வாழ விரும்புவதாகச் சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் அகமதாபாத்தின் நீதிமன்றம் விவேக் பட்னி மீனா பட்னி க்குச்சொந்தம் என்று தீர்ப்பளித்தது.


பையன் அழகாக துருதுருன்னு இருக்கிறான்.யாருக்குத்தான் விட்டுப்பிரிய மனசுவரும்?

12 comments:

ராஜ நடராஜன் said...

பசிக்குது.கொட்டிக்கிட்டு வாறேன்.யாராவது பொட்டிக்கடைக்கு வந்தீங்கன்னா பழைய பக்கத்த மேஞ்சுகிட்டு இருங்க.சீக்கிரம் வந்துடறேன்:)

புதுகை.அப்துல்லா said...

இதப் படிச்ச பிறகாவது நாலு நாய் திருந்துச்சுன்னா சந்தோஷம்

சின்னப் பையன் said...

முதல் பாராவில் சேர்க்கவேண்டியது:

அரசியல்வாதிகள் இது வெளினாட்டு சதி என்று அடுத்த 'பெட்டி' தேட போய்விடுவார்கள்.

Darren said...

//ராஜ நடராஜன் said...
பசிக்குது.கொட்டிக்கிட்டு வாறேன்.யாராவது பொட்டிக்கடைக்கு வந்தீங்கன்னா பழைய பக்கத்த மேஞ்சுகிட்டு இருங்க.சீக்கிரம் வந்துடறேன்:)

July 27, 2008 1:14 AM///

ஹலோ..இதெல்லாம் ஓவராத்தெரியல....என்ன live comment moderate பண்றீங்களா...haha..

பிரேம்ஜி said...

ரொம்ப நெகிழ்ச்சியான செய்தி...எல்லாரும் ஒற்றுமையா இருக்கத்தான் ஆசைப்படறாங்க. ஆனா பிரித்தாளும் சக்திகள் விடுவதில்லை.

ராஜ நடராஜன் said...

//அரசியல்வாதிகள் இது வெளினாட்டு சதி என்று அடுத்த 'பெட்டி' தேட போய்விடுவார்கள்.//

ச்சின்னப் பையன்! நீங்க பாராளுமன்றத் தமாசுகளப் பார்க்கவில்லையா?

இப்பவெல்லாம் பிளாஸ்டிக் பேக்தான் ட்ரெண்டாம்.ஒரு கோடிய அப்படியே பைக்குள்ள அமுக்கிடலாம்.

ராஜ நடராஜன் said...

பொட்டிக்கடைக்கு வந்தீங்கன்னா பழைய பக்கத்த மேஞ்சுகிட்டு இருங்க.சீக்கிரம் வந்துடறேன்:)

தரண்!எனக்கெல்லாம் சானியா மிர்சா,ரபேல் ஓவர்கள்தான் தெரியும்:)

ராஜ நடராஜன் said...

//இதப் படிச்ச பிறகாவது நாலு நாய் திருந்துச்சுன்னா சந்தோஷம் //

அப்துல்லா அண்ணோவ்! சந்தோசப்படாதீங்க.கூடிய சீக்கிரம் இன்னும் நாலு நாய் குண்டு மோப்பம் பிடிக்க வரும்:(

rapp said...

நானும் படித்தேன், நெஞ்சை நெகிழச் செய்யும் நிகழ்வு

ராஜ நடராஜன் said...

//நானும் படித்தேன், நெஞ்சை நெகிழச் செய்யும் நிகழ்வு//

கவிதாயினி!எப்படி போகுது உங்க குழுவோட ராப்?

rapp said...

//கவிதாயினி!எப்படி போகுது உங்க குழுவோட ராப்?
//

எங்க மன்றத்தை நீங்க குழுங்கர சின்ன வட்டத்துக்குள் சுறுக்க பாக்கறீங்களா? உங்க எல்லாருக்கும் எங்க மன்றத்தின் சார்பாக ஒன்னே ஒன்னு சொல்ல்லிக்கறோம், 2016 இல் நாங்க ஆட்சிக்கு வரும்போது உலகமே அதிரும் பாருங்க.

இங்ஙனம்
இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே. ரித்தீஷ் மன்றம்

கோவை விஜய் said...

மனிதம் இன்னும் வாழ்கிறது.
நெஞ்சை நெகிழவைக்கும் உருக்கமான பதிவு.
ஜாதி,மத,இன வேறுபாடு முற்றிலும் நீங்கும் நாள் தான் நாம் முழுமையான சுதந்திரத்தை அடைந்ததற்கு அர்த்தம் என நல்ல சான்னறோர்களின் கருத்து இங்கு ஒப்பு நோக்கக் தக்கது.

ஒரே ரத்தம்
ஒரே இனம்

சுவசிக்கும் காற்று பொதுவானது
குடிக்கும் தண்ணிர் பொதுவானது
வாழும் பூமி பொதுவானது
பரந்த ஆகாயம் பொதுவானது.
பஞ்ச பூதங்களால் உருவான
மனிதன் மட்டும் ஏனோ?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com