Followers

Monday, April 12, 2010

எகிப்திய முபாரக்கும் எல்பராடியின் அரசியல் கருத்துக்களும்

மத்திய கிழக்கின் நாகரீக தொட்டிலாகவும்,புராதன பிரமிடுகளின் வரலாற்றையும் தன்னகத்தே அடக்கிக் கொண்ட எகிப்து முந்தைய ஜனாதிபதிகளான நாசருக்குப் பின்னும்,சதாத்தின் இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு பின்னும் 1981ம் ஆண்டு முதல் இன்றைய 2010 வரையிலுமான இரும்பு பிடிக்குள் சிக்கி ஜனநாயக மூச்சையே இழந்து போனது.ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு வந்த துவக்கம் முதல் அரசியல் கட்சிகள் அமைப்பதோ,5 பேர் கூடி பேசுவதோ தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எகிப்தியர்கள் ஒரு புறம் ஓரளவுக்கு படித்தவர்களின் விகிதாச்சாரம்,அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவாகவும்,படிப்பறிவில்லாதவர்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும் இருப்பது மாதிரியான தோற்றமே வளைகுடாக்களில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும் போது தெரிகிறது.இதற்கான காரணங்களாக மூச்சிழந்த ஜனநாயகம் காரணமாக இருக்கலாம்.நிலையான அரசு என்பதும் முன்னேற்றம் என்பதும் ஒரு பத்தாண்டு காலத்துக்குள் நிகழ்த்தி முடிக்கப்பட வேண்டியவை.அதற்கும் மிஞ்சிய காலத்தில் ஒரே அமைப்பின் ஆட்சி நிலைப்பது, ஊழல்கள் பெருகுவதற்கும்,ஏதோ ஒரு வடிவில் சர்வாதிகாரம் வேர் ஊன்றுவதற்கும் வழி வகுக்கும்.

முந்தைய அணு ஆயுத தடுப்பு நிறுவனத்தின் தலைவரும்,நோபல் பரிசு பெற்றவருமான எல்பராடி,இவ்வளவு காலம் உழைத்தோம்,இனி நாற்காலிய போட்டு பத்திரிகை படித்தோம்,பேஸ்புக்கில் கதையடித்தோமென்றில்லாமல் எகிப்தில் மாற்றங்கள் வேண்டும் என்று டிவிட்டரில் எகிப்தியர்களுக்கு இலை மறை காயாக அறிக்கையளிக்க வார இறுதியில் மீன் பிடித்துக் கொண்டோ,கால்பந்தாடிக் கொண்டோ,காயலாங்கடை சுத்திக் கொண்டோ இருந்த குவைத்தில் வசித்த சில எகிப்தியர்கள் எல்பராடிக்கு ஆதரவாக வாங்கய்யா இந்த வெள்ளிக்கிழமை இத்தனை மணிக்கு ஒன்றாக கூடி "சங்கம்" அமைப்போமென்கிற மாதிரி இணையத்தில ஒரு அறிக்கை விட வெள்ளிக்கிழமை கூடிய கூட்டத்தில் 17 முதல் 20 பேர் வரையிலான எகிப்தியர்களை குவைத் உள்துறை கைது செய்து அடுத்த நாளே பொட்டிய கட்டி எகிப்துக்கு அனுப்பி விட்டது.

குவைத் உள்துறை அமைச்சகம் சொல்வதென்னவென்றால் நீ காசு சம்பாதிச்சு புள்ள குட்டிகளை மட்டும் கவனிக்கற வேலையைப் பாரு எங்க ஊர்ல இருந்து அரசியல் கூட்டங்கள்,சங்கம்,அமைப்புகள் நிகழ்த்தக் கூடாது என்கிறது.எகிப்தில் இருக்கும் முபாரக்குக்கு எதிரா முணுமுணுக்கும், ஒளிந்து கொண்டிருக்கும் அமைப்புகள்,ஏனய்யா எங்க ஊர்ப்பிரச்சினைக்குத்தானே நாட்டாமை தேடுகிறோம் உங்க ஊர் அரசியலில் நாங்க தலையிட்டோமா என்று எகிப்தில் குரல் எழுப்புகிறது.

முப்பது வருடம் எகிப்தை தனது இரும்பு பிடிக்குள் வைத்துள்ள ஹோஸ்னி முபாரக் தனது 81வருட முதுமையில் தனது மகனை நம்மூர் ஸ்டைலில்:) அரியணை ஏற்றி விடவேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்.எல்பராடி மூலம் எகிப்தில் மாற்றங்கள் வருமா அல்லது ஹோஸ்னி முபாரக்கின் வாரிசு அரசியல் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பழைய உலக நிகழ்வுகளை மறக்க நினைத்தாலும் சில நிகழ்கால நிகழ்வுகள் பழையவற்றை மீண்டும் தோண்ட வைக்கின்றன.பதவிக்காலத்தின் 4 அல்லது 8 வருட காலங்களில் ஒரு தேசத்தையே சீர்குலைத்து விட்டு காலணி வீச்சிலும் தப்பித்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளில் இதோ ஜனநாயகம் தழைக்கிறது,நான் ஓய்வெடுக்க செல்கிறேன் என்று காணாமல் போய் விட்டார் ஜார்ஜ் புஷ்.அமெரிக்காவின் கெட்ட பெயரை மீள கட்டியமைப்பதே தனது புதியமாற்ற வெளியுறவு கொள்கை என்று ஒபாமாவும் முட்டை மேஜையில் தின நிகழ்ச்சி நிரல்களில் மூழ்கியுள்ளார்.

உண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களாட்சி அமைவதென்பது F16களாலோ,அமெரிக்க ஆக்கிரமிப்புகளாலோ நிகழாது.சிறிய குரலாக ஒலிக்க முயன்ற,நாடு கடத்தப்பட்ட முகம் தெரியாத எகிப்தியர்கள் போன்றவர்களால் மட்டுமே மக்களாட்சி மலருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இதற்கெல்லாம் குரல் கொடுக்க அமெரிக்க பெரியண்ணன் வரமாட்டாரே!


கணவனும் மனைவியும் பக்கத்து பக்கத்து அலுவலகங்களில் வேலை செய்தால் ஒரு போன் போட்டு இன்னைக்கு "Honey!Shall we eat steak medium done with sauted baby carrots and potato with redwine at Le Bernardin?"ன்னு கேட்கறத விட்டுட்டு unix ல செய்தி அனுப்பனா போகுமா DOS ல Hi சொல்லிப் பார்க்கறதுன்னு சின்ன சின்ன செய்திகளா அனுப்பி நேற்றைக்கு ஒரு மாற்றம்,இன்றைக்கு ஒரு மாற்றம்ன்னு தொழில் நுட்பம் வளர்ந்து இப்ப இருக்குற நிலைமையில் இணையத்தால சிலருக்கு எவ்வளவு சிரமங்கள்.மனித பரிணாமத்தை ,மக்கள் சிந்தனையை எல்லோரும் வரவேற்பதில்லை,ஏனென்றால் அவை சில அடிப்படை சுய நம்பிக்கைகளை தகர்ப்பதுடன் நீண்ட சுய கட்டமைப்புகளாய் உருவாக்கியவைகளுக்கு சவாலாகவும் அமைகிறது.

2 comments:

vasu balaji said...

/அவை சில அடிப்படை சுய நம்பிக்கைகளை தகர்ப்பதுடன் நீண்ட சுய கட்டமைப்புகளாய் உருவாக்கியவைகளுக்கு சவாலாகவும் அமைகிறது./

இதானே பிரச்சனையே:)

ராஜ நடராஜன் said...

//இதானே பிரச்சனையே:)//

இலை மறை காயா சொன்னதை புடிச்சிட்டீங்க நீங்க:)

தற்போதைய உலகில் இரண்டு விசயங்கள் கொதி நிலையில் இருக்கின்றன.ஒன்று புவி வெப்பம்.இன்னொன்று எரிமலை லாவா மாதிரி உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகள்,இஸ்ரேல்,ஈரான் உட்பட.