இனியொரு தளம் CWG விளையாட்டு நிறைவினை ராஜபக்சே தலைமையில் செய்தி வந்துள்ளதாக மொட்டையாக இடுகையிட்டதைப் பார்த்து மனம் பகீர் என்றது.இது உண்மைதானா என்ற தேடலில் டெக்கான் ஹெரால்ட் செய்தி அதனை உறுதி செய்கிறது.
விளையாடா விட்டாலும் விளையாட்டின் தின வர்ணனைகளை பதிவில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் கல்மாடியின் கலாட்டாக்கள் ஒரு நாள் நிகழ்வைக் கூட பார்க்க இயலாமல் ஒப்புக்கு சப்பாணியா எத்தனை தங்கம்,வெள்ளி,பித்தளை என்ற கணக்கில் மட்டும் பார்வையிட்டு விட்டு ஓடிப் போகும் மனநிலையே இருந்தது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரத்தக் கறைத் துண்டு ராஜபக்சேவுக்கு இறுதி நாள் வரவேற்பு.
Just disgusting!No more to say.
29 comments:
அண்ணே வர வர நாம காமெடி பண்றது கூட நிஜமா ஆகுது பாருங்க ...
//அண்ணே வர வர நாம காமெடி பண்றது கூட நிஜமா ஆகுது பாருங்க ..//
உங்க தலைப்பை கொஞ்சம் கடனா தர்றது:)
அண்ணே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தான் அது.
இங்கேயும், இங்கேயும் பாருங்க.
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ...
//உங்க தலைப்பை கொஞ்சம் கடனா தர்றது:)//
கடனா இல்லை, உரிமையாய்...
போங்கடா வெண்ணைங்களா :(
சுடும் நிஜங்கள்!
பேயரசாட்சி செய்தால்...!
நடா....பாவம்....அந்த மனுசனை எதுக்கும் இழுக்காம இருக்கமாட்டீங்க !
என்னையும் சேர்த்து எல்லாரும் மானங்கெட்டவிங்க :((
இந்தியா தன்னோட ராஜ தந்திரத்தை காமிக்கிதாம்... அப்படியே சோனியாவையும் குளிரவைக்கிதாம் - என்னமோ செஞ்சிட்டு இருக்கோம் இதுக்கெல்லாம் பதில் எந்த வகையில சொல்லுற மாதிரி வருதோ!! அதான் ஒரே திகிலா இருக்கு ...
கல் மாடி
ஆமாம் பேரே சரியாத்தான் இருக்கு,
மேலே மூளைக்குப் பதில் கல் இருந்தால்(?)
அப்புறம் ஊருல வாத்தியார் அசிங்கமா ஒரு பழமொழி சொல்லுவாரு. எப்ப தெரியுமா? ரேங்க் அட்டை கொடுக்கும் போது(?)
இப்ப அந்த பழமொழியை நீங்க எங்க வேண்டுமானாலும் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
" போங்கடா..... அவன் மூத்திரத்தையாவது வாங்கி குடிங்க..... அப்பயாவது உங்க எல்லாருக்கும் புத்தி வருதான்னு பார்க்கலாம்........"
என்னுடைய பார்வையில் ராஜபக்ஷே ரொம்ப நல்லவரு. திறமையானவரும் கூட. அவரு இல்லாவிட்டால் இங்கு பல பேரின் உண்மையான முகத்தை நாம் கண்டறிய முடியாது.
ரொம்ப உணர்ச்சி வசப் பட்டு விட்டேனோ(?)
//அண்ணே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தான் அது.
இங்கேயும், இங்கேயும் பாருங்க.
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் //
கும்மி ன்னு பேர் வச்சிகிட்டு நெஞ்சு பொறுக்குதில்லையே உணர்ச்சி கவிதையின் வீச்சை வீசியதற்கு நன்றி.
இந்திய விளையாட்டுக் களத்தின் மதிப்பைக் குறைத்ததும் அல்லாமல் விளையாட்டுக்குள்ளும் அரசியலைப் புகுத்துவது வெறுப்பையே தருகிறது.
அரசு கட்டிலில் தவறுகளைச் செய்பவர்களைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே!
//கடனா இல்லை, உரிமையாய்...
போங்கடா வெண்ணைங்களா :(//
அப்படியா சொல்றீங்க!
போங்கடா வெண்ணைங்களா:(
//சுடும் நிஜங்கள்!//
சித்ரா மேடம்!தமிழனுக்கு என்று பாரம்பரியம்,மொழி,கலாச்சாரம் போன்ற விழுதுகளும் இந்திய ஜனநாயகத்தில் ஆழமாக ஊன்றி விட்ட காரணம் கொண்டும்,பலமுறை சொல்லி சொல்லி அலுத்துப் போன மூட்டையிலிருந்து சிதறும் நெல்லிக்காய் மாதிரி தமிழக அரசியல் களம் இருப்பதாலும்,நவீன கலாச்சாரமாக தொலைக்காட்சி மூழ்கடித்தலும் இருப்பதன் காரணம் கொண்டு தமிழர்கள் என்ன செய்வதென்று அறியாதிருக்கிறார்கள்.
//நடா....பாவம்....அந்த மனுசனை எதுக்கும் இழுக்காம இருக்கமாட்டீங்க !//
ஹேமா!அந்த ஆளை என்ன செய்தால் தகும்?
தீவிரவாதம் ஒழிக்கிறேன் பேர்வழின்னு ஒரு கலாச்சாரத்தை சிதைக்கும் பாவிகளின் குடும்பம்.
இலங்கை மண் என்ற உரிமையில் செய்யும் அக்கிரமங்கள் ஒரு நாள் திசை மாறும்.
நான் எழுத்தில் கூட வரம்புகளை மீறுவதில்லை.ஆனால் இவர்கள் தவறுகள் செய்தும் தங்களை நியாயப் படுத்துவதும் அதற்கான தண்டனைகள் இல்லாமல் தப்பிப்பதும் அதற்கு இந்தியா துணை போவதும் வெறுப்பை எழுத்தில் உமிழ வைக்கிறது.
//என்னையும் சேர்த்து எல்லாரும் மானங்கெட்டவிங்க :((
இந்தியா தன்னோட ராஜ தந்திரத்தை காமிக்கிதாம்... அப்படியே சோனியாவையும் குளிரவைக்கிதாம் - என்னமோ செஞ்சிட்டு இருக்கோம் இதுக்கெல்லாம் பதில் எந்த வகையில சொல்லுற மாதிரி வருதோ!! அதான் ஒரே திகிலா இருக்கு ...//
தெகா!மானமும் உணர்வும் இருப்பதால்தான் எழுத்திலாவது நமது உணர்வை கொட்டுகிறோம் என நினைக்கிறேன்.
I wish bureaucratic and RAW wings should come across the bloggers opinionated views.
//கல் மாடி
ஆமாம் பேரே சரியாத்தான் இருக்கு,
மேலே மூளைக்குப் பதில் கல் இருந்தால்(?)
//
ஜோதிஜி!கல்மாடிய குறை சொல்லி என்ன பயன்?
”இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அதன் கண் விடல்” என்ற ஆராய்வு திறமையற்ற பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ரிமோட் கண்ட்ரோல் சோனியாவுக்கும் எனது கண்டனங்கள்.
என்ன சொன்னீங்க?ராஜபக்சே ரொம்ப நல்லவரா?கிழிஞ்சது கிருஷ்ணகிரி.
//ரொம்ப உணர்ச்சி வசப் பட்டு விட்டேனோ(?)//
இதுலயெல்லாம் உணர்ச்சிவசப்படாம இருந்தாத்தான் தப்பு.
//பேயரசாட்சி செய்தால்...!//
கோபத்துல உங்க பின்னூட்டம் விட்டு விட்டேன் விந்தை மனிதன்.
உலகறிய இவர்கள் ஒரு Moral ethics இல்லாமல் இத்தனை செய்யும் போது Back channel diplomacy ன்னு ஒண்ணு வெச்சிருக்காங்க.அதில் எத்தனை தகிடுதத்தம் செய்வார்கள்?
அட!விளையாட்டில் கூட கவுரவம் இல்லையே இவர்களிடம்.இந்த ஆளை விட்டு ஒருத்தர் கூடவா விழாவுக்கு தகுதியற்றுப் போய் விட்டார்கள் மொத்த உலகில்.
எப்படியோ தமிழர்களுக்கு புறமுதுகில் கத்தி என்பது மட்டும் நிச்சயமாகிறது.
இந்த லட்சணத்துல ஆட்சியில் பங்கு,அன்னை சோனியாஜி சொல்படி கேட்போம் என தமிழக காங்கிரஸின் அலட்டல் அறிக்கைகள் வேறு காண சகிக்கல.
என்ன சொன்னீங்க?ராஜபக்சே ரொம்ப நல்லவரா?
//
ஆமாண்ணே.. ஆமாம்..
.
.
.
ஆனா..அது நம்ம அன்னை சோனியாவுக்கு....
.
.
.
ராஜபக்சே ரொம்ப நல்லவரு அண்ணே, சிலரையாச்சும் தடுப்புமுகாம்களிலே விட்டுவச்சுருக்காரில்லையா....
நல்லாச்சொன்னாரு விந்தைமனிதன், பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..
//என்ன சொன்னீங்க?ராஜபக்சே ரொம்ப நல்லவரா?
//
ஆமாண்ணே.. ஆமாம்..
.
.
.
ஆனா..அது நம்ம அன்னை சோனியாவுக்கு....//
பட்டு!இப்பத்தான் பதிவுலகத்துக்கு சம்பந்தமில்லாத நண்பர் ஒருவரிடம் பேசி விட்டு வருகிறேன்.நாமாவது எழுத்தில் கோபத்தைக் காண்பிக்கிறோம்.அவரு கலோக்கியலா கண்டமானியா திட்டுறார்.
//ராஜபக்சே ரொம்ப நல்லவரு அண்ணே, சிலரையாச்சும் தடுப்புமுகாம்களிலே விட்டுவச்சுருக்காரில்லையா....
நல்லாச்சொன்னாரு விந்தைமனிதன், பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..//
இது யாரு!சுருதிபேதம் நமக்கு தெரியாம புதுசா:)
நீங்களும் விந்தைமனிதனும் சொல்கிற மாதிரி பேய்கள் ஆட்சியோ என்னமோ?கண்ணுக்குத் தெரியாம காரியம் செய்கிறார்கள்.
கார்கில் வில்லன் முஷ்ரஃப் முந்தா நாள் வரைக்கும் இந்திய கோபத்தைக் காட்டி விட்டு லஸ்கர் தொய்பா போன்ற இயக்கங்களை நாங்கதான் ஊட்டி வளர்த்தோம் அதுக்கு இப்போ இன்னாங்கிறே என்று நேர்காணல் சொல்கிறார்.அடுத்த்த நாளே அது வந்து 1990ல.அந்த நேரத்துல நான் பிரிகேடியர்ன்னு ஜகா வாங்குறாரு.நீங்க ”ரா”வா அடிக்கிறீங்க,அதனால் நாங்க ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துறோம்ன்னு பந்தாவா சொல்றார்.
நாட்டுக்கு இளைத்தவன் தமிழன்.எனவே ராஜபக்சேவுக்கு விருந்து.மூஞ்சில குத்துவேன்னு சொல்லும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை.பேய்களின் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்களோடு
W. Somerset Maugham விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னும் அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறதென்று படிக்கும் போது புத்தகத்தில் சொன்னது இப்போது நிரூபணமாகிறது.
சுருதிபேதம்!உங்கள் பின்னூட்டத்தில் முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.ராஜபக்சே தன்னை நல்லவன் என்று நிரூபணம் செய்வதற்கு இறுதிக்கட்ட போருக்குப் பின் நிறைய கால அவகாசமும்,சந்தர்ப்பங்களும் கிடைத்தன.நெஞ்சில் குற்றமில்லாதவன்,மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவனின் செயல்பாடுகளை இந்த இரு ஆண்டு கால கட்டங்கள் நிரூபித்திருக்கும்.
மேற்கத்திய நாடுகள் போடாத சண்டைகளையா ஆசிய நாடுகள் போட்டு விட்டன?ஆனால் சண்டைக்கும் பின்பும் விழித்துக் கொள்வது எப்படி என்பதை இரு ஜெர்மனி நாடுகளின் இணைப்பும்,Euro என்ற பொருளாதார கட்டமைப்பும்,அவரவர் கலாச்சாரம் அவரவருக்கு என்ற புரிந்துணர்வும், திட்டமிடுதல் ஒழுங்குமுறையும்...
இவைகளையெல்லாம் எப்பொழுது இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகள் புரிந்து கொள்ளப்போகின்றன?அதற்கான சாத்தியங்கள் இல்லையென்பதற்கு ஒரு சின்ன அடையாளம்தான் தடுப்பு முகாமில் மனிதர்களின் அடைப்பு.
சிலரது கறைகள் வெளித் தெரிவதில்லை.
.நீங்க ”ரா”வா அடிக்கிறீங்க,அதனால் நாங்க ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துறோம்ன்னு பந்தாவா சொல்றார்
இதுக்கு பேரு தான் பின்னி பெடல் எடுக்குறதா?
சூப்பரே சூப்பரப்பூ
போருக்குப் பின் நிறைய கால அவகாசமும்,சந்தர்ப்பங்களும் கிடைத்தன.நெஞ்சில் குற்றமில்லாதவன்,மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவனின் செயல்பாடுகளை இந்த இரு ஆண்டு கால கட்டங்கள் நிரூபித்திருக்கும்.
199 வது பதிவு என்று வேர்ட் பிரஸ் முதல் வருட இறுதியில் உள்ள பதிவை படித்து இருக்கீங்களா?
அது ஒரு நண்பர் சொன்னது தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
இதை நினைத்து நினைத்து படித்து படித்து மண்டை காய்கிறது.
//சிலரது கறைகள் வெளித் தெரிவதில்லை.//
ராதாகிருஷ்ணன் சார்!ராஜபக்சேவுடையதெல்லாம் கறையா?குருதி படிந்த உடல் அல்லவா?
//.நீங்க ”ரா”வா அடிக்கிறீங்க,அதனால் நாங்க ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துறோம்ன்னு பந்தாவா சொல்றார்
இதுக்கு பேரு தான் பின்னி பெடல் எடுக்குறதா?
சூப்பரே சூப்பரப்பூ//
ஜோதிஜி!தலைவரே:) எங்கடா ஆளைக் காணோமுன்னு மறுபடியும் வந்திட்டீங்களாக்கும்:)வாரேன்!
//199 வது பதிவு என்று வேர்ட் பிரஸ் முதல் வருட இறுதியில் உள்ள பதிவை படித்து இருக்கீங்களா?
அது ஒரு நண்பர் சொன்னது தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
இதை நினைத்து நினைத்து படித்து படித்து மண்டை காய்கிறது.//
பின்னூட்டமும் போட்டு 199ன்னு கணக்கு பாடமும் எடுக்குறீங்களே!தேடிப்பார்க்கிறேன்.
பதிவெழுதியும் பின்னூட்ட மறுமொழி போட்டும் ஆறாம இன்றைக்கு NDTV பக்கத்துல இங்கே http://cwg.ndtv.com/commonwealth/article/id/spoen20100156380/type/latest/Sri-Lankan-president-guest-of-honour-Games-close.html
கமெண்ட்ஸ்ல புலம்பியது இனியும் யாராவது பின்னூட்டம் படிப்பவர்களின் பார்வைக்காக...
I am one of the regular viewer of NDTV.Eventhough NDTV broadcast unbiased programmes and news events, most of the Indian channels including NDTV have not brought to the Indian audience the plight of Srilankan Tamilians during the last phase of the Srilankan war.Not only that HRW and other rights groups are trying to prove the war crimes of Mr.Rajapakse & Co. the Indian government is inviting Rajapakse for a red carpet welcome which is against the sentiments of Tamilians and moral ethics of human society. My heartfelt regrets on Indian government's unsighted decision.Don't we got a genuine person on the whole earth?
Post a Comment