Followers

Tuesday, August 9, 2011

டைம்ஸ்க்கு அடுத்த ஹெட்லைன்ஸ் வாக்கெடுப்பு.

பதிவர்களே! ஆங்கில ஊடகங்கள் இலங்கை குறித்த பார்வையை செலுத்துவது வரவேற்க தக்கது. டைம்ஸ் பத்திரிகைக்கான வாக்கெடுப்பு சந்தர்ப்பத்திற்கு பின் நமக்கு ஹெட்லைன்ஸ் ஒரு அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடேயின் முகப்பின் இடது புறத்தில் பெரிய கேள்வி -THE BIG QUESTION  என்ற பெயரில்  இந்த இணைப்பில்   வாக்கெடுப்பு க்ளிக் உள்ளது.
Should the Rajapakse brothers be tried for war crimes? என்ற வாக்கெடுப்புக்கு இது வரை 4124 மொத்த வாக்காளர்களில் 96.85% Yes என்ற நிலையில் உள்ளது.கணினி உபயோகிப்பாளர்கள் இந்தியாவிலும்,உலக அரங்கில் ஹெட்லைன்ஸ் டுடே பார்வையிடுபவர்களும் இன்னும் அதிகம்.டைம்ஸ் போல் அல்லாது நியாயமான முறையில் ராஜபக்சே சார்பு நிலையாளர்களும் கூட வாக்களிப்பதை வரவேற்கிறேன்.

அதிக எண்ணிக்கை மூலமும் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் மட்டுமே இணையம் சார்ந்த ராஜபக்சே சார்பு/எதிர் நிலைகளைக் கணிக்க இயலுமென்பதோடு தமிழீழம் குறித்த விழிப்புணர்வுக்கும் இதனை கொண்டு செல்லும்.உங்கள் வாக்குகளை க்ளிக் செய்யுங்கள்.இயன்றவர்கள் ஆங்கில பின்னூட்டங்களையும்  இங்கே  மற்றும் இங்கே  பின்னூட்டமிடுங்கள்.நன்றி.

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

Oops ! Page not found ! என்று வருகிறது..

ராஜ நடராஜன் said...

//யூர்கன் க்ருகியர் said...

Oops ! Page not found ! என்று வருகிறது..//

ஹெட்லைன்ஸ் ஓட்டுப் பெட்டி தற்போது வேறு வாக்கெடுப்புக்காக மாற்றப்பட்டு விட்டது.தகவலுக்கு நன்றி.

Bibiliobibuli said...

Raaja Nada, I get the same message. Error on page. Page not found. :(

Did you watch the video by Headlines Today?

ராஜ நடராஜன் said...

//Rathi said...

Raaja Nada, I get the same message. Error on page. Page not found. :(

Did you watch the video by Headlines Today?//

Rathi! It's not an error.The Voting page is replaced with something else.

I have watched the video plus links to all plus comments.