Followers

Monday, December 28, 2015

,முதலமைச்சர் கனவு ஆவுறதில்ல

நமக்கு சாடை பேசுறது ஆவாதுன்னு பொது அறிவு,இலக்கியம் குறைந்த பட்சம் ஒரு சினிமா இந்த மாதிரி தேடலுக்கு போகலாம்ன்னு பார்த்தா .ஆவுறதில்ல!கவிஜ சொல்லி பார்த்தாச்சு ! சிரிக்கிறதுக்கு ஆள காணோம்! விடுகதை  சொல்லி பார்த்தாச்சு கண்டுக்கவே ஆள காணோம்

ஒன்று பதிவு போட நேரமில்லப்பா! நா ரொம்ப பிசின்னு இருக்கனும். இல்ல அப்பப்ப வந்து ஏதாவது ஹலோ சொல்லிட்டு போகனும். ரெண்டும் கெட்டான அது என்ன தேர்தல் நேரம் பார்த்து மட்டும் அரசியல் ஜோக்கராவது!

தேர்தல் வேற எப்ப வருதுன்னு தெரியலையே! இன்னும் எத்தனை ஸ்லிப்பர்களை சமாளிக்க வேண்டியிருக்குமோ!

வி செயகாந்து பேசிகிட்டிருக்கும் போது பூச்சி ஏதோ வாயில் போனதுக்கு தூன்னு துப்பினதுக்கும் கூட வெளக்கவுரை தர்றாங்கப்பா! அரசியல்வாதி தா ன்னாலும் தப்பு தூ ன்னாலும் தப்பு தும்மினாலும் தப்பு கும்மினாலும் தப்பு ன்னா அப்புறம் எப்படிதான் அரசியல் நடத்துவது:)

சாதி கிறுக்கன்களையெல்லாம் கூட்டம் சேத்திகிட்டா? 

ரொம்ப டேஞ்சர்பா! பேஜாருபா


வர்ணமும் தெரியாம ஆசிரமும் தெரியாம போடுவது  பட்டை! தொண்டனெல்லாம் மட்டை..சொல்வதென்னவோ ருத்ராட்ச கொட்டை

கார்ட்டுன் போட்டாலும்,குட்டிக்கரணமே சேர்த்து போட்டாலும் இந்த தேர்தல்ல ஊத்திக்கும்ன்னு ஒபாமாவுக்கு சி.அய் ஏ  சொல்லிருச்சாம் .அய்யாவுக்கு கடிதாசி வரலையோ!

போன தேர்தல் எடிட்டுங்ல கொட்டு வாங்குனவனே மோதிர கொட்டாக்கும்ன்னு  புல்லா ஆங்கிதமா புளகாங்கிதமாம்

முன்னமாதிரி தினத்தந்தி மாலைமுரசு சொல்றதுதான் செய்தின்னு இல்லாம இப்ப யூட்யூப்பு டூப்புகளையெல்லாம் நல்லாவே காமிக்குது. ஒரு தூ வுக்கு மூணு தூ போடுறாங்கப்பா:) எடிட்டுங்க்கு ஹாலிவுட்ல தேடுறாங்க!பாலிவுட்ல தேடுறாங்க!அனிருத்துக்கு சோடியா கனடாவுல தேடுறாங்க 

இதுலருந்து இன்னா தெரியுது பார்ட்டி செட்டாவுலன்னு தெரியுது. அப்ப பிசேபி கூட்டணி அம்பேல்ன்னு தெரியுது.






2 comments:

தவறு said...

முதல்வர் கனவா...அப்படி ஒரு வாய்ப்ப தமிழ்நாட்டு சனங்க கொடுத்துருவாங்களா வி.கா வுக்கு கிட்டத்துல்ல ராஜநட...

ராஜ நடராஜன் said...

கன்பீசா இருக்கே! நான் எதுக்கோ பீ பீ ஊதுனா நீங்க எதுக்கோ மத்தளம் கொட்டுறீங்களே! அவ்வ்வ்வ்

சரி அத விடுங்க! நேற்று ஒட்டகசிவிங்கி நீச்சல் போட்டியை நாலைந்து குழந்தைகளை கூட்டு வச்சு போட்டுக்காண்பித்தேன்.சும்மா இருக்குற கார்ட்டூனுக்கே பொங்கல் கொண்டாடுபவர்கள் உயிருடன் ஒட்டகசிவிங்கி குதிச்சா சும்மா விடுவார்களா ஏக குசிதான்.