Followers

Saturday, January 31, 2009

நாகேஷ் நினைவாக

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அசலாகவும் ,திரையுலகம் மூலமாகவும் மனதை நகைச்சுவை கொண்டு நிறைய பேர் குதுகலப்படுத்தியிருக்கிறார்கள். திரை உலகின் நகைச்சுவை நாயகர்களாக நிறைய பேர் வந்து போய் விட்டார்கள்.என்.எஸ்.கிருஷ்ணன்,டணால் தங்கவேல்,சந்திரபாபு போன்றோரின் சிரிப்பின் அறிமுகம் தற்போதைய தொலைக்காட்சிகள் வாயிலாகவே கிடைத்தது. அமராவதி நீரில் முங்கி விட்டு நாகேஷின் பிறந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்த மனிதனின் பரிணாமங்கள் தெரியவில்லை.அதன் பின் புரிந்தும் புரியாமலும் முதல் முறையாக மனதில் வந்து ஒட்டிக்கொண்ட சிரிப்பு முகம் நாகேஷ்.


படம் போட்டால் பக்கத்து சீட்டிலோ,முன் சீட்டிலோ யார்,என்ன நடக்கிறதென்று யார் கவனிக்கிறா?கூட்டாளிகளோடு நாகேஷின் நகைச்சுவையில் மூழ்கிப் போய் இஃகி!இஃகி ன்னு விடாமல் சிரித்து அவரது மனைவியைத் தான் கிண்டல் செய்கிறோமென்று நினைத்து முன் சீட்டில் இருந்தவர் சண்டைக்கு வந்து சண்டை சமாதானம் ஆகி 5 நிமிடம் வாய் மூடிகளாய் இருந்து விட்டு முடியாமல் மீண்டும் இஃகி!இஃகி தொடர்ந்தது.உடல் சேட்டைகள்,நடனம் இவற்றுடன் டைமிங் என சொல்லப்படும் வசனங்கள் அனைத்துக்கும் மேலாக நகைச்சுவையின் பரிமாணங்கள் இவரது காலத்துடன் வேறு திசை நோக்கி போய் விட்டது.

சில பழைய படங்களை தொலைக்காட்சிகளில் இப்பொழுது பார்க்கும் பொழுது இயக்குநர் பாலசந்தர் நன்றாகவே நாகேசின் திறமைகளை பட்டை தீட்டியுள்ளார் எனத் தெரிகிறது.அந்தப் பரிமாணத்தை நிகழ்காலத்துக்கும் கொண்டு வந்ததில் கமலின் பங்கு நிறையவே உண்டு.இருந்தும் நகைச்சுவையின் சிகரமாக திருவிளையாடல் தருமி சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டார்.

சிரிப்பைக் கற்றுத் தந்த நகைச்சுவை என்ற நினைவிற்கு விதை தூவிய நாகேஷின் நினைவாக இந்தப் பதிவு சமர்ப்பணம்.

10 comments:

கிரி said...

நாகேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கடைசி வரை அவருக்குரிய மரியாதையை அரசுகள் கொடுக்கவில்லை என்பது என் வருத்தம்

ராஜ நடராஜன் said...

//நாகேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கடைசி வரை அவருக்குரிய மரியாதையை அரசுகள் கொடுக்கவில்லை என்பது என் வருத்தம்//

தமிழ் திரை உலக வரலாற்றில் நாகேஷின் பங்கும் மகத்தானது கிரி.

பழமைபேசி said...

நகைச்சுவைத் திலகத்தை என்றும் போற்றியவர் கமல். அவருக்கும், இரசிகர்களாகிய நமக்கும் வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் அவர். ஏழேழு விருதுகள் வந்தாலும் அவர் நடிப்பை ஈடு கட்ட முடியாது என்பதே நிதர்சனம். அவர் புகழ் என்றும் நிலைக்கும்! யாருக்காவது தெரியுமா? யார் யார் பத்மபூடணம் என்று? ஆனால், நாகேசு என்ற பெயர்?! அதுதான் மகோன்னதம்! விருது கிருது கொடுத்து அவமானப் படுத்தாதீங்கடே!!

அது சரி(18185106603874041862) said...

எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்...காமெடி, குணச்சித்திரம், வில்லன் ரோல்....அவர் செய்யாத, செய்ய முடியாத வேஷம் என்ன?? அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஆஸ்கர் வாங்கியிருப்பார்...

அபூர்வ சகோதரர்களில் அவர் வில்லன் ரோல் பார்த்தீங்க இல்ல..

//
அமராவதி நீரில் முங்கி விட்டு நாகேஷின் பிறந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்த மனிதனின் பரிணாமங்கள் தெரியவில்லை.
//

அமராவதி??? அது கரூர் பக்கம் வர்ற ரிவர்னு ஞாபகம்...அப்ப அவர் அங்கயா பிறந்தாரு???

ராஜ நடராஜன் said...

//அமராவதி??? அது கரூர் பக்கம் வர்ற ரிவர்னு ஞாபகம்...அப்ப அவர் அங்கயா பிறந்தாரு???//

வாங்க அதுசரி.அமராவதி நதி முன்பேயெல்லாம் காவிரியிலிருந்து பிரிந்து நீங்க சொல்றமாதிரி கரூர்,தாராபுரம் ன்னு சுத்திகிட்டி ஓடிச்சின்னு நினைக்கிறேன்.பாலத்துக்கு இந்தப் பக்க கரை தாராபுரம்,கரையோரத்து அக்ரகாரத்தில் அவர் பிறந்த வீடு இருந்தது.பாலத்தை தாண்டி கொஞ்சம் கரும்புத் தோட்டங்களையெல்லாம் கடந்து அந்தப் பக்கம் போனால் கரூர்.

ராஜ நடராஜன் said...

//நகைச்சுவைத் திலகத்தை என்றும் போற்றியவர் கமல். அவருக்கும், இரசிகர்களாகிய நமக்கும் வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் அவர். ஏழேழு விருதுகள் வந்தாலும் அவர் நடிப்பை ஈடு கட்ட முடியாது என்பதே நிதர்சனம். அவர் புகழ் என்றும் நிலைக்கும்! யாருக்காவது தெரியுமா? யார் யார் பத்மபூடணம் என்று? ஆனால், நாகேசு என்ற பெயர்?! அதுதான் மகோன்னதம்! விருது கிருது கொடுத்து அவமானப் படுத்தாதீங்கடே!!//

எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க பழமை.இனி நான் என்ன சொல்வது!

வருண் said...

உங்கள் பதிவைப்பார்த்துதான் இந்த விசய்த்தை தெரிந்துகொண்டேன் ராஜ நடராஜன்! :(

நானும் சில வரிகள் இவரைப்பற்றி/இவர் நடித்த படங்கள் பற்றி எழுதுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//உங்கள் பதிவைப்பார்த்துதான் இந்த விசய்த்தை தெரிந்துகொண்டேன் ராஜ நடராஜன்! :(

நானும் சில வரிகள் இவரைப்பற்றி/இவர் நடித்த படங்கள் பற்றி எழுதுகிறேன்.//

பதிவுக்காக காத்திருக்கிறேன் வருண்.

வருண் said...

என் பதிவு இந்தப்பின்னூட்டமிடும் போதே பதித்துவிட்டேன், திரு நடராஜன்.

இன்னொரு விசயம், நான் உங்க பதிவின் லின்க் என் பதிவில் கொடுத்தவுடன், உங்கள் பதிவில் ஆட்டோமேடிக்காக அந்த பேக் லின்க் உண்டாகிவிட்டது.

It is not that I came in your blog and made that link. I just want to let you know that I did not do anything other than giving your url in my post. When you allow back links, it just automatically does something in your blog. Of course when you dont allow, it goes off.

I am telling this in order to avoid any misunderstanding!

You dont have to publish this response! I just wanted to let you know how the back link started automatically in your blog. I did not know until then, that this is how it works! If you knew that already it is fine. Take it easy!

பழமைபேசி said...

அண்ணே, உங்களுக்கு சிங்கியடி காத்திருக்கு...நம்ம பக்கம் வாங்க...இஃகிஃகி!