Followers

Monday, April 26, 2010

லங்கன் விழா கலாட்டா

பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாமலே அமிதாப்பச்சன் IIFA பற்றியும்,எங்க பிரச்சினைய கவனிக்கவே நேரமில்லை,ஊர் சுத்துறவங்களுக்கு ஓட்டு போடறதுதான் ஒரு குறையான்னு நவின் சாவ்லா கேட்கிறாரே என்று வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமைன்னு இரண்டு இடுகை போட்டாச்சு.எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்கி எழுந்து வடிச்சு கொட்டிகிட்டு நேரா ஐ.பி.எல் மேட்ச் பார்க்க போயிட்டாங்க.பெரும்பாலோர் போட்டி மும்பய்ங்கிறதால சச்சின் அணிதான் ஜெயிக்கும்ன்னு காசு கட்டியிருப்பாங்க.அப்புறம் சீட்டு போடறவனுக்கு என்ன மதிப்பு?சென்னை கிங்க்சா பின்ன ஜங்சா.சென்னை கிங்க்ஸ் ஜெயிச்சு முடிஞ்ச கையோட லலித் மோடிக்கு கடிதாசி கொடுத்துட்டாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்கிறவங்களுக்கு தெரியாத ஒரு கதை சொல்லப் போறேன்.

தற்போது ஐ.நா மனித உரிமை கழகத்தின் முதல்வர் நவி பிள்ளை வளைகுடா சுற்றில் உள்ளார்.

முதல் நாள்
UN raps Gulf on Worker's rights,GCC urged to end sponsor system,lift curbs on women
என்று அறிக்கை கொடுத்தாச்சு.

அடுத்த நாள்
Pillay Sees rights 'advances' in Gulf
என்று ஒரு பத்திரிகை செய்தி வந்துச்சு.

அதற்கும் அடுத்த நாள்
Pillay Chides Gulf over women's employement
என்று இன்னுமொரு செய்தி.

மேல்மட்டப் பேச்சு வார்த்தைகள் இப்படி ஒரு புறம் நிகழ இனி இங்கே நிகழ்ந்த லங்கா விழாவை பற்றி லங்காவின் டெய்லி மிரர் வளைகுடா செய்தியை சுட்டு விட்டு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

Kuwaitis disrupt lankan event

A massive Sri Lankan celebration in Kuwait was interrupted after angry Kuwaitis claimed it violated Islamic rules. More than 5,000 Sri Lankans, including K.S.C. Dissanayake, Sri Lankan ambassador to Kuwait, had to leave the Jahra stadium after Kuwaiti Islamists invaded the field and pressed organisers to suspend the celebration and threatened to escalate the tense situation.

Negotiations between the event organisers, the police and the angry Kuwaitis failed to reach a compromise. The protesters said that the presence of men and women at the stadium and the playing of music on a Friday afternoon made the celebration “unacceptable” for not respecting Islamic values.

The ambassador, seeking to end the deadlock peacefully, urged his compatriots to cancel the celebrations two hours before schedule and to vacate the premises.

The police said that the Sri Lankans had all the necessary permits and did not break the law. Sri Lanka is organising on Monday a “Sri Lanka Culture Week” in Kuwait to help promote the country as a tourist and cultural destination. The event is hosted by Kuwait’s National Council for Culture, Arts and Letters and co-sponsored by the Sri Lanka Tourism Promotion Bureau and the Sri Lankan Airlines.

A28-member cultural troupe will perform 'Sri Lak Rangana', a fusion of historical and contemporary dance forms.

The week will also feature a handicraft exhibition of products, bronze items, masks, gems, jewellery and other ornaments while a food festival will introduce Sri Lankan cuisine to Kuwait residents. (Gulf News)

இனி உண்மைகள் என்னவாக இருக்குமென்று பார்ப்போம்.

ஒவ்வொரு நாட்டு கலாச்சார விழாக்கள் உள்துறையின் அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட அரங்குகளிலோ அல்லது பொது வெளிகளிலோ நிகழ்கின்றன.இந்தியர்கள் அதிகம் வாழும் இடமான ஜிலிப் என்ற இடத்தில் பொதுவெளிகளில்(Garden) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட நடிகை ரேவது மேடம் சில முறை கலந்து கொண்டிருக்கிறார்.எனக்கு தெரிந்தும்,சில நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்த அனுபவம் கொண்டும் வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்,உள்துறையில் ஒருவர் தவிர எந்த குவைத் குடிமகனும் வந்து எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்வதுமில்லை.வந்து கலாட்டாக்கள் செய்வதுமில்லை.பொது வெளி நிகழ்ச்சிகளுக்கும் கூட ஒன்று இரண்டு வாலிபர்கள் வந்து அவர்களுக்குள்ளேயே ஊமக்குசும்பு செய்து விட்டு விலகி விடுவார்கள்.மொழி தெரியும் பட்சத்தில் இவர்களையும் சிரித்து சமாளித்து விட இயலும்.

சில லங்கா விழாக்கள் கூட முந்தைய கால கட்டங்களில் ஓட்டல்களில் நிகழ்த்தப்பட்டதுண்டு.அதற்கென்று குறுகிய கூட்டம் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள்.இதுவரையிலுமில்லாத வகையில் இந்த முறை 5000 பேர் திரளும்படியான திட்டத்தில் பல வீட்டுப் பணிப்பெண்களையும்,ஏனைய பணியாளர்களையும் திரட்டியதற்கு லங்கா புது வருட விழா கொண்டாட்டம் என்பது காரணமா என தெரியவில்லை.விழாவிற்கான ஸ்டேடியம் நகரை தாண்டிய ஒதுக்குப்புறமான இடம் என்பதால் உள்துறையும் அனுமதி வழங்கியிருக்க கூடும்.ஆனாலும் ஊரின் எல்லைப்புறமாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் மதிய நேரத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டியதும், இசையென்ற சப்தம் மைதான வெளியில் சிலரின் கவனத்தை ஈர்த்திருந்திருக்கலாம்.கலாச்சார விழாவாக இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது கொஞ்சம் ரிலாக்ஸாகிக் கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பம் நிகழாமல் இவர்கள் கலைந்து போனது வருத்தத்திற்குரியது.லங்கா தூதரகம் விழா கொண்டாடாத இத்தனை வருடங்களில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பணிபுரியும் பெண்களும், ஆண்களும் தனித்தனியாகவோ நண்பர்கள் கூட்டமாகவோ சில மணி நேரங்கள் நகரின் மத்தியில் சர்ச், போஸ்டாபிஸ், நகைக்கடை, துணிக்கடை, பஸ் ஸ்டாண்ட், ஓட்டல், மைதானம் என கலந்துரையாடி பிரிகிறார்கள். வெள்ளிக்கிழமை கூடும் கூட்டமென்பதால் காவல்துறை வாகன, கூட்ட நெரிசல்களை தவிர்க்க மட்டுமே உதவுகிறார்கள்.

லங்கா கைவினைப்பொருட்கள்,பித்தளை,வெண்கலம்,மற்றும் ஆபரணங்கள் இந்திய கலாச்சாரப் பொருட்களைப் போன்றே லங்கா பொருட்களும் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை.சென்னையில் பாயாவும்,இடியாப்பமும் ஜோடிங்கிற மாதிரி இடியாப்பமும்,மிளகாய் கரைச்சலும் ஏகப் பொருத்தம் லங்காவுக்கு.காரம் சாப்பிடும் நாமே அலறி அடிச்சுகிட்டு ஓடும் போது இந்த ஊர்கார மக்களுக்கு லங்கா உணவு சிபாரிசு செய்யறாங்களாம்:)

10 comments:

கபீஷ் said...

//எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்கி எழுந்து வடிச்சு கொட்டிகிட்டு நேரா ஐ.பி.எல் மேட்ச் பார்க்க போயிட்டாங்க//

நான் மேட்ச் பாக்கல. ஆனா என்ன கமெண்ட் பண்றது தோணல, போன ரெண்டு இடுகைகளுக்கு. படிச்சிட்டு போயிட்டேன். இதுக்கும் அதே. எனவே இதை ஆஜர் பின்னூவாகக் கொள்ளவும் :-)

கபீஷ் said...

எப்போ பாத்தாலும் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், ### பண்றதுனு இப்படி வரணும்

ப.கந்தசாமி said...

எல்லா ஊர்களிலும் சில ரௌடிகள் பெரும் கூட்டத்தையும் கலைத்துவிடுவார்கள் போலும்.

ராஜ நடராஜன் said...

//நான் மேட்ச் பாக்கல. ஆனா என்ன கமெண்ட் பண்றது தோணல, போன ரெண்டு இடுகைகளுக்கு. படிச்சிட்டு போயிட்டேன். இதுக்கும் அதே. எனவே இதை ஆஜர் பின்னூவாகக் கொள்ளவும் :-)//

:)

கபீஷ்!இரண்டாவது பின்னூட்டம் புரியல.மறுபடியும் சொல்லுங்க:)

ராஜ நடராஜன் said...

//எல்லா ஊர்களிலும் சில ரௌடிகள் பெரும் கூட்டத்தையும் கலைத்துவிடுவார்கள் போலும்.//

ஐயா!உங்கள் வருகைக்கு நன்றி.சில விசயங்களை பின்னூட்டத்துல சொல்ல நினைத்து இடுகையில் விட்டு விட்டேன்.

இவங்க கூட்டம் நடத்திய இடம் ஜாரா எனப்படும் ஊர் கடைசி.பிதுன்கள் என்றழைக்கப்படுபவர்கள் அதிகம் வசிக்கும் இடம்.கொஞ்சம் மத உணர்வுகளும் அதிகம் உள்ள மக்கள் வசிக்குமிடமென நினைக்கிறேன்.

இங்கே பணிபுரிபவர்கள் எல்லோரும் வார விடுமுறையான வெள்ளிக்கிழமை நகரின் மத்தியிலே கூடுவது வழக்கம்.அப்படி நகரின் மையத்தில் எங்காவது ஒரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடந்திருந்தால் அதுவே பெரும்பாலோருக்கு போக்குவரத்துக்கும் வசதியாகவே இருந்திருக்கும்.வெள்ளிக்கிழமை தவிர்த்து வீட்டில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ள இயலாது என்ற எண்ணத்திலும் ஸ்டேடியம் அனுமதி வாங்கியதாலும் எங்க ஏரியா உள்ளே வராதே பாட்டு நிகழ்ச்சியாளர்களுக்கு தெரியவில்லை.

கபீஷ் said...

//நான் மேட்ச் பாக்கல. ஆனா என்ன கமெண்ட் பண்றது தோணல,//

முதல் பின்னூல பண்றது வரக்கூடாது, பண்றதுன்னு வரணும்னு தெளிவா புரியாத மாதிரி ரெண்டாவது பின்னூல சொல்லியிருக்கேன்.

அது சரி(18185106603874041862) said...

//
Negotiations between the event organisers, the police and the angry Kuwaitis failed to reach a compromise. The protesters said that the presence of men and women at the stadium and the playing of music on a Friday afternoon made the celebration “unacceptable” for not respecting Islamic values.
//

There goes the myth of so called religious tolerance!

And thats what my take on Middle East is. That part of the world lags behind some 1000 years.

நசரேயன் said...

// வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமைன்னு இரண்டு இடுகை போட்டாச்சு//

ஒட்டு போடா எனக்கு 10000 ரூபா வேணும்

ராஜ நடராஜன் said...

//There goes the myth of so called religious tolerance!

And thats what my take on Middle East is. That part of the world lags behind some 1000 years.//

I think saudi's shadows are spread among other GCC countries, but there are liberals,family value guards plus religious fundamentalists too.

Dont we have religious fanatics?
This part of the world lags behind 1000 years is a myth:)

Gulf is slowly changing into cosmopolitan cities due to various cultures are cross walking.I hope it will contribute to their future values too.

ராஜ நடராஜன் said...

//ஒட்டு போடா எனக்கு 10000 ரூபா வேணும்//

தலிவா!உறுப்பினர் அட்டைய சீக்கிரம் எடுங்க!