Followers

Tuesday, April 27, 2010

கமலஹாசனின் தேடித் தீர்ப்போம் வா!

பாமா பதிப்பகம் வெளியீட்டில் கமலஹாசனின் கருத்தாக தொகுக்கப்பட்ட சிறிய நூல்.பாமா பதிப்பகத்தினிடம் அனுமதி பெற்று இந்த புத்தகத்தை கணினியில் ஏற்றி விடலாமென்று பார்த்தால் அவர்களது இமெயில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.முழு புத்தகமுமே 96 பக்கங்கள் என்பதால் ஒவ்வொரு தலைப்பையும் ஒவ்வொரு இடுகையாக போட்டு விடலாம்.உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு வாசிப்பின் இனிமை கிடைக்கும் என நினைக்கிறேன்.இதனால் காப்புரிமை பிரச்சினைகள் ஏதாவது வருமா என புத்தகம் பதித்த பதிவர்கள் மற்றும் ஏனைய சட்டமறிந்தவர்களின் ஆலோசனையை வேண்டுகிறேன்.இருந்தாலும் தற்போது பாமா பதிப்பகம் S.பாஸ்கர் அவர்களின் முகவுரையை இடுகைக்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

இனி தேடித்தீர்ப்போம் வா முகவுரை:

இந்தியனே!

தேடினால்தான் விடை கிடைக்கும்.ஆனால் அந்த தேடலுக்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் இன்றைய நிலை.ஆனால் திரு.கமல் அவர்கள் அதில் கொஞ்சம் வித்தியாசமானவர்,எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது அவருக்கு உடன்பாடான பட்சத்தில் வெளிப்படையாக மற்றவர்களுக்குக் கூறி அதில் ஒரு சதவிகிதமாவது அவர்களை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்(Seems to be green signal is on my way)

"தேடித் தீர்ப்போம் வா" என்ற இந்த கட்டுரைத் தொகுப்பில் பல நல்ல விசயங்களை,பல பயனுள்ள நிகழ்ச்சிகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.சராசரி தமிழனாக இல்லாமல் சிறந்த 'இந்தியனாக' இருந்து நமக்குப் பலவகையிலும் பெருமை தேடித்தந்த சிறப்பு திரு.கமல் அவர்களைச் சேரும்

நாம் எச்சில் துப்புவதாலா அசுத்தம் ஏற்படுகிறது என ஒவ்வொருவரும் நினைத்து துப்ப ஆரம்பித்தால் சாக்கடைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழும் நிலை வரும்.எனெவே எச்சிலை விழுங்க கற்றுக்கொள்ளுங்கள்.இது நம்மைச் சுற்றி ஏற்படும் அசுத்தத்தை சுத்தப்படுத்தும் முதல்படி எனப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் வேகம் திரு.கமல் போன்றவர்களிடம் மட்டுமே இருக்கிற திறமையாகும்.

இந்த சிறந்த அற்புதமான புத்தகத்தை வெளியிடும் உரிமையைக் கொடுத்த திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்றென்றும் அன்புடன்

S.பாஸ்கர்

பாமா பதிப்பகம்.

(Courtesy Bhama pathippagam)


பின்னூட்டங்களின் ஆலோசனை மற்றும் திரு.பாஸ்கர் தொடர்பிலான யாராவது கருத்துரையின் படி தொடர்வது தொடரும்.நன்றி.

9 comments:

PRINCENRSAMA said...

ரொம்ப மகிழ்ச்சி நண்பரே! நான் படித்திருக்கிறேன்.. நன்றாக எழுதியிருப்பார். ஆரிய- திராவிடம் தொடர்பான அவரது புரிதல், எம்.ஜி.ஆர் மறைவு குறித்த கட்டுரை, நின்னுக்கிட்டே ஒன்னுக்கு அடித்தல் பற்றிய அவரது பார்வை போன்றவை பாராட்டுக்குரியது. அவரது அன்றைய பார்வையையும், இன்றைய வளர்ச்சியையும் நாம் ஒப்பு நோக்கலாம்.. பெண்ணுரிமையையும், திருமணத்தையும், நாத்திகத்தையும் கொஞ்சம் குழ்ப்பிக் கொண்ட கட்டுரை ஒன்று கூட அதில் உண்டு. பதிவு செய்யுங்கள்.. நானும் கட்டுரை குறித்த என்னுடைய பார்வையை எனது தளத்தில் பதிவு செய்கிறேன்.

பதிப்புரிமை கமல் அவர்களிடம் தான் இருக்கும். அவரே தனது மய்யம் இதழை இணையத்தில் தொடங்கபோவதாக அறிவித்திருக்கிறார்.
http://www.andhraroundup.com/fn.php?id=7055

எனவே பதிவு செய்யுங்கள்.. சிக்கல் வரும் வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்

கபீஷ் said...

முன்னாடி அனுமதி வாங்கணும் to reproduce in any form. ஒவ்வொரு பகுதியாக வெளியிட.

நசரேயன் said...

ஓசியிலே அனுப்பி வையங்க படிக்கிறேன்

ராஜ நடராஜன் said...

வாங்க பிரின்ஸ்!நீண்ட நாட்களாக இணையம் பக்கம் காணவில்லை.மய்யம் இணைய இதழ் துவங்குவதாக இருந்தால் அதில் கூட பேசித் தீர்ப்போம் வா வருவது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.பொறுத்திருந்து பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//முன்னாடி அனுமதி வாங்கணும் to reproduce in any form. ஒவ்வொரு பகுதியாக வெளியிட.//

இதுவே சரியான பார்வை.

ராஜ நடராஜன் said...

//ஓசியிலே அனுப்பி வையங்க படிக்கிறேன்//

நசரேயன்:)

Chitra said...

It is copyright violation.

வவ்வால் said...

Raj, unga anpirkku mikka nanri.sila samayam unga blog padipathundu comment poda mudiyatha nilai ,no tamil typing,coz mobile net than ipo ,type panrathukulla thavu theeruthu!seekiram jothila aikiyam aga try panren. Thodarnthu jamaika vazhthukal.

ராஜ நடராஜன் said...

//Raj, unga anpirkku mikka nanri.sila samayam unga blog padipathundu comment poda mudiyatha nilai ,no tamil typing,coz mobile net than ipo ,type panrathukulla thavu theeruthu!seekiram jothila aikiyam aga try panren. Thodarnthu jamaika vazhthukal.//

Really glad to hear from you sir!