Followers

Wednesday, May 9, 2012

வளைகுடாவில் பணிபுரிவோர் பிரச்சினைகள்!

 வளைகுடா நாடுகளில் அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்கள்,மற்றும் வாகன ஓட்டுநர்கள்,ஏனைய பணியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரேபிய நாடுகளுக்கான மனித உரிமை பற்றிய விமர்சனங்களும் அரேபிய நாடுகளின் விமர்சனங்களில் ஒன்றாக  எழுகிறதென நினைக்கிறேன்.

இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பணிப்பெண்களும் அதிலும் குறிப்பாக இலங்கை,பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் எனலாம்.அனைத்தும் உடல் ரீதியான அத்துமீறல்களா என்றால் இல்லையெனலாம்.பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாக விளங்குவது மொழி எனலாம்.கடந்த மாதம் உடன் பணி புரியும் செக்ரட்டரி புதிதாக தனது வீட்டுப்பணிக்கு சேர்த்த பெண்னுக்கு மொழி தெரியவில்லையென்றும் சொல்வதையும் விளங்கிக் கொள்வதில்லை யென்றும் சொல்லி திலானா என்ற பெண்ணிடம் பேச சொல்ல,திலானா தான் சிங்களப்பெண் என்றும் தமிழ் கதைக்கத் தெரியுமென்றும் தமிழில் சொல்லியது அந்தப் பெண்.தான் இலங்கையிலிருந்து வந்தே சில தினங்கள் என்றும் சிங்களம்,தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது என்றும் செக்ரட்டரி வீட்டில் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை என செக்ரட்டரி அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை திலானாவிடம் சொல்ல சொல்ல நான் மொழி பெயர்த்து சொன்னேன்.

இரண்டு நாள் கழித்து செக்ரட்டரி அந்தப் பெண்ணுக்கு சொல்வதும் புரிவதில்லை,வேலையும் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது வாங்கின இடத்துலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று சொல்ல மொழி பிரச்சினையென்றால் ஏன் பிலிப்பைன்ஸ் பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் கேட்க பிலிப்பினோவுக்கு காசு சம்பளம் அதிகமாக தரனுமில்ல என்று செக்ரட்டரி சொல்ல மேற்கொண்டு நான் ஒன்றும் சொல்ல வில்லை.அதன் பின் என்னிடம் மொழி பெயர்க்க உதவிக்கு வராத காரணத்தால் திலானா இன்னுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக விற்கப்பட்டிருக்க கூடும். என நினைக்கிறேன்.

எனவே சிங்கள மொழி மட்டும் பிரச்சினையல்ல.பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அரபிக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிரச்சினைதான்.சில வீடுகளில் தமது கலாச்சாரத்தோடு மேற்கத்திய நடை,உடை,பாவனைகளை கடைப்பிடிப்பவர்கள் ஆங்கில அறிவு கொண்டவர்களாக இருப்பதால் பிலிப்பைன்ஸ் பெண்களின் பணி புரியும் முறை பிடித்துப்போவதாலும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாத பெண்களும் பணிபுரிகிறார்கள்.இன்னும் சிலருக்கு மொழி பிரச்சினையில்லையென்றாலும் கூட வாகன ஓட்டுநர்,பணிப்பெண்களுக்கு நீண்ட நேர பணிநேரம் என்ற குறைகளும் உண்டு.

எனவே உடல் ரீதியான அத்துமீறல்கள்,மொழிப் பிரச்சினை,நீண்ட வேலை நேரம்,குறித்த தேதியில் சம்பளம் கிட்டாமை மற்றும் குறைந்த சம்பளம்,ஓரிரு வருடங்கள் பணிபுரிந்தாலும் சம்பள உயர்வு இன்மை என்ற பல காரணங்களால் பணிப்பெண்கள் தனது பாஸ்போர்ட்டைக் கூட அரபிகளிடமிருந்து வாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவதோ அல்லது தமது தூதரகத்தில் தஞ்சம் புகுவதோ அல்லது சரியான டாகுமென்டேசன் இல்லாமல் போலிசிடம் சிக்கிக்கொள்வதோ தொடர்ந்து நிகழும் ஒரு சம்பவமாக உள்ளது.இதில் இந்திய தூதரகமும் விதி விலக்கு அல்ல.

வீடுகளில் வேலை செய்பவர்கள் தவிர நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் கூட விசாவை புதுப்பிக்காமல் தங்குவதும்,நிறுவனத்தில் பணிபுரியாமல் சுயமாக சில அரபிகளுக்கு பணம் தந்து விசா வைத்துக்கொண்டு சட்டத்துக்கு விரோதமாக டாக்சி ஓட்டுவதும் போன்றவை நிகழ்கின்றன.மேலும் வளைகுடா நாடுகளுக்கு பணிக்குப் போனால் அந்த நாட்டு சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காமல் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது,தாய்லாந்து லாட்டரி,அங்கீகாரமில்லாமல் துணிமணிகள்,வாட்ச்,பெர்ஃப்யூம்,திருட்டு டிவிடி விறபனை செய்து போலிஸில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு.

ஒரு புறம் ஆசிய நாடுகளிலிருந்து வளைகுடாவில் பணிபுரிபவர்களின் குறைபாடுகள்,இன்னுமொரு பக்கம் பெண்களுக்கான மனித உரிமை மீறல்கள் என ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே வ்ளைகுடாவின் உழைப்பாளர் வர்க்கத்தின் பிரச்சினைகள் உள்ளது.முன்பே  ஆசிய நாடுகளின் தூதரகங்கள் செய்ய தவறும் கடமைகள் பற்றியெல்லாம் பதிவாகவோ பின்னூட்டமாகவோ கருத்து வெளியிடூ செய்தாகி விட்டது.அம்னெஸ்டி போன்ற மனித உரிமை கழகங்கள் ஐ.நாவுக்கான ஆண்டு அறிக்கை தந்தாலும் கூட வளைகுடா மாற்றங்கள் ஆமை வேகத்திலோ அல்லது உறக்க நிலையிலேயே காணப்படுகின்றது.

சரி பிரச்சினைகள் இருந்தும் ஏன் தமது நாட்டுக்குப் போக மறுக்கிறார்கள் என்றால் முதலாவதாக பொருளாதார ரீதியாக அனைத்து ஆசிய நாடுகளும் கவிழ்ந்து விடுகின்றன.மேலும் நம்மூரில் செய்யத் தயங்கும் துப்புரவு வேலைகளை இங்கே செய்து விட முடிகிறது.ஆடு,ஒட்டகத்தை மேய்த்தாலும் உழைப்புக்கான ஊதியம் ஆசிய நாடுகளின் விகிதாச்சாரத்தை விட அதிகம்.ஒப்பீட்டளவில் சிறந்த திறந்த சந்தைப் பொருளாதாரம், நிர்வாகம், கட்டமைப்புக்கள்  போன்றவைகள் முக்கிய காரணங்கள்.

மேலும் புரிதலுக்கு...

இந்த பதிவுக்கான கரு இங்கே

http://news.kuwaittimes.net/2012/05/08/govt-repatriates-240-sri-lankan-domestic-workers-domestic-labor-law-key-to-resolving-issues-in-kuwait/

18 comments:

கோவை நேரம் said...

இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் கடைசியில் அவர்கள் எதிர்பார்ப்பது பெரும் சம்பளம் தான்,

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

வளைகுடாவில் நிகழும் மொழிப் பிரச்னையினால் எழும் விளைவுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஒரு இலங்கை தமிழ் பெண்ணுக்கு சில காலம் வீட்டுக்கு கடிதம் எழுதி கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு. அந்த பெண்ணுக்கு தமிழ் மொழியும் எழுதப் படிக்கத் தெரியாது.

இவ்வளவு சிக்கல்களையும் தாங்கிக் கொண்டு இங்கிருப்பதற்கு காரணம் சொந்த நாட்டை விட ஓரளவு அதிக சம்பளம் கிடைக்கிறதே என்பதும் எந்த வேலை செய்தாலும் நம் சொந்தங்கள் பார்த்து விட மாட்டார்கள் என்ற முன் எச்சரிக்கையும்தான் என்றால் மிகையாகாது. நமது நாட்டு பொருளாதாரம் சிறப்படையும் பட்சத்தில் இங்கு வீட்டு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையலாம்.

ராஜ நடராஜன் said...

கோவை நலமா:)

சம்பளத்துக்குத்தானே ஊர் உறவுகளை விட்டு திரவியம் தேடுகிறார்கள்.கிடைப்பவர்கள் திருப்தி கொள்கிறார்.சிலர் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த பதிவுக்கு வளைகுடாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா? என்றே தலைப்பு வைத்தேன்:) பின்பு நான் உங்களைப் பார்த்து வான் கோழி ஆகி விடக்கூடாதென்பதாலும்,பிரச்சினைகளை சொல்லும் போது சிலருக்கு தவறான புரிதல்களை தந்து விடுமோ என்று நேரடியான தலைப்பையே வைத்து விட்டேன்.

சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக நான் கருதுவது தொழில் சார்ந்த கல்வியின் அடிப்படையில் வராமல் வெளிநாடு போனால் சம்பாதித்து விடலாமென்று 1 லட்சம்,இரண்டு லட்சம் பணமாவது ஏஜண்டுகளுக்கு கொடுத்து பின் இங்கு இருக்கும் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியாமல்,வாங்கிய கடனையும் கட்ட இயலாமல் போய் விடுகிறது சிலருக்கு.

தினமும் நான் குட் மார்னிங் சொல்லிக்கொள்ளும் இஸ்லாமிய சகோதரர் ஒருவர் பி.காம் படித்த தன் மகனைக் கூட எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என விசிட்டிங்க் விசாவில் கொண்டு வர முயற்சி செய்தார்.பின் சிங்கப்பூருக்கு விசா கிடைத்து அங்கே அனுப்பி விட்டார்.

ஏஜண்டுகள் மூலமே வளைகுடா வர இயலும் என்பது ஒரு பெரும் குறை.
போன வாரம் நடிகர் விவேக் குவைத் வந்தார்.டாக்டர் அப்துல் கலாமின் கனவான 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்று கனா காண்பதில் விவேக்கும் ஒருவர்.கலாமின் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு அது சாத்தியமான ஒன்றே என்ற போதிலும் நடைமுறை யதார்த்தங்கள் கனவுக்கு மாறுபாடாகவே இருக்கிறது.எனவே நீங்கள் சொல்லும் இந்திய பொருளாதாரம் சிறப்படையும் காலம் என்பது மதில் மேல பூனையே இன்னும்.வளைகுடா பண சேமிப்பும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு காரணம்.எல்லோரும் திரும்ப இந்தியா போய் விட்டால் வேலை இல்லா திண்டாட்டம்,அந்நிய செலவாணி போன்றவைகளை தீர்மானிப்பது எப்படி:)

பலரும் விமர்சனம் செய்கிற படி வளைகுடா வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமில்லை.ஆனால் பணிப்பெண்கள்,வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாது.குடியுரிமை தேவையில்லை என்ற போதிலும் கூட ஏனைய சம உரிமைகள்,மனித உரிமைகளில் வளைகுடா இன்னும் கவனம் செலுத்துவது அவசியம்.

Unknown said...

எப்படி இருந்தாலும் உள்ளூரில் வாழ்வதே சிறப்பு!என் கருத்து இதுவே



புலவர் சா இராமாநுசம்

ராஜ நடராஜன் said...

புலவர் அய்யா! ஒரு காலத்தில் பண மாற்று விகிதாச்சாரத்திலும் நம்மூரில் ஒரு பெப்சி கூட வாங்க இயலாத சூழலில் வளைகுடா செல்வது இந்திய பொருளாதாரத்தில் சிறந்த முடிவாகவே இருந்தது.பின்பு ஏஜண்டுகளின் தரகு போன்றவையும் வளைகுடாப் போரும் இந்தியாவின் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாகவும் வளைகுடா வாழ்க்கையை யோசிக்க வைக்கவே செய்கிறது.தொழில் நுட்ப ரீதியாகவும்,ஏஜண்டுகளுக்கு பணம் தராமலும் வளைகுடாவில் சில வருடங்கள் பணி புரிவது தவறில்லையென்றே நினைக்கின்றேன்.

இப்போதைய நிலையில் நம்மூர் போல வருமா எனபது உண்மையென்ற போதிலும் 25000 வேலைக்கு ஒரு லட்சத்துக்கும் மேலான விண்ணப்ப படிவங்கள் வரும் நிலையிலேயே இன்னும் வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது.சுய முயற்சியில் வளைகுடா செல்பவர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தைக் குறைக்கிறார்கள் என்ற மாற்றுப் பார்வையும் இருக்கிறது அல்லவா?ஆசிய நாடுகளில் பணிக்கு ஆட்கள் தேடுவது அரேபிய நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக சிக்கனமானதும் அதே நேரத்தில் இன்னும் முன்னேறாத நிலையில் இருக்கும் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கின்ற்ன.இந்தியா தனது கடனை திரும்ப கட்டியதில் வளைகுடாவில் வாழ்பவர்களின் பங்கும் இருக்கிறது.

ஒரு வேளை பணிக்கு ஆட்கள் அனுப்ப இந்தியா மறுத்தாலும் இலங்கை,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தயாராக இருக்கின்றன.இலங்கை,பிலிப்பைன்ஸ் மறுத்தாலும் சீனா,தாய்லாந்து,நேபாளம் என்று மாற்று இருப்பதால் வளைகுடாவின் வீட்டுப் பணிக்கு ஆட்களுக்கு குறைவில்லை.எனவே தூதரகங்களின் பங்கோ சார்க் மாநாடு போன்றவை வளைகுடா பணியாளர்களைப் பொறுத்த வரை ஹம்பக் மட்டுமே.ஒரு வசதி என்னவென்றால் கடவுச்சீட்டை புதுப்பிக்கவோ,முத்திரை குத்தவோ இந்தியாவில் நிற்பது போன்று நீண்ட க்யூவில் கால்கடக்க நிற்க வேண்டியிருக்காது.இடைத்தரகர்களை நாட வேண்டிய தேவையில்லை.

ஒரு வரிப்பின்னூட்டத்துக்கு இத்தனை கடியா:)

Unknown said...

ஸலாம்

"வளைகுடாவில் பணிபுரிவோர் பிரச்சினைகள்!"

இக்கரைக்கு அக்கறை பச்சை ....

நல்லதொரு பதிவு ...........

நீங்கள் பதிவு எழுதும் அளவை விட பின்னூட்டம் எழுதும் அளவு அதிகம் ...

//ஒரு வரிப்பின்னூட்டத்துக்கு இத்தனை கடியா:)//

அடுத்த பதிவுக்கு கண்டிப்பா வருவார் அவர் ... இறைவன் நாடினால் ...

Salahudeen said...

nice

ராஜ நடராஜன் said...

சிந்தனை!எனக்கு மாலிக்கம் ஸலாம் சொல்வதிலோ வணக்கம் சொல்வதிலே ஆட்சேபணையே இல்லை.மொழியின் அடிப்படையில் அனைவரையும் அணைத்துக்கொண்டு இணைந்து செல்லவே விரும்புகிறேன்.

இக்கரைக்கு அக்கரை பச்சைக்கான காரணம் 1990க்கும் முந்தைய இந்தியாவின் சோசலிஸ கொள்கைகளும் புலவர் அய்யாவுக்கு சொன்ன மாதிரி பெப்சி கூட குடிக்க முடியாத காரணம் என்பதோடு வெற்றிக்கொடி நாட்டு படத்தில் வடிவேலுவின் அலட்டல்கள் மாதிரி ரேடியோ,ரெகார்ட் பிளேயர்,கூலிங் கிளாஸ்,மைனர் செயின்,தங்க கலர்ல வாட்ச்சுன்னு ஒரு போங்கா லீவுல சுத்துன காரணமும் கூட:)

நான் என்னங்க செய்வேன்.ஏதாவது ஒன்றைத் தொட்டு இன்னுமொரு சொல் கோர்வையா வந்து சேர்ந்து கொள்கிறது:)

இவனோட கடைல உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதை விட நாலஞ்சு கடை சுத்திட்டு வந்திடலாமுன்னும் கூட நிறைய பேர் பின்னூட்டப் பக்கம் வர மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.ஆனால் வந்த வரைக்கும் லாபம்ன்னு வருகிறவர்களை ஒரு வழி பண்ணாமல் போவதில்லை.

இதோ இப்ப உங்களுக்கு சொல்வதையெல்லாம் எழுதி வச்சிகிட்டா சொல்றேன்.அதுவா ஒரு புளோவுல வர்றதுதான்:)

கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

Salahudeen!That's a good one nice word.Thank you

கோவி.கண்ணன் said...

//வளைகுடாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா? என்றே தலைப்பு வைத்தேன்:) //

அப்படியெல்லாம் வைக்க முடியாது, காப்புரிமை இருக்கு :)

MANO நாஞ்சில் மனோ said...

நிதர்சனமான உண்மைகளை சொல்லி இருக்கீங்க மக்கா....!!!

ராஜ நடராஜன் said...

கோவி.இதனை சகோ.சுவனப்பிரியன் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்:)அந்த சொற்களுக்கான காப்புரிமை அவருக்கு இருக்கிறது.அதனை பதிவுலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர் அவரே.நீங்க எல்லாம் எசப்பாட்டுதான் பாடுறீங்க:)

ராஜ நடராஜன் said...

மனோ!நலமாக இருக்கேளா?

தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை மட்டும் பார்வையிடுவதால் சிலரின் பதிவுகள் காணாமல் போவதை கவனிக்கத் தவறி விடுகிறேன்.நட்புக்காக நீங்களும் தமிழ்மணத்தின் பதிவுகள் இடுவதில்லை என்பதை நான் அறிந்திருந்த போதிலும் நேற்று சேட்டுப்பையன் எடக்கு மடக்கு பதிவில் பின்னூட்ட பகுதி போகும் போதே சிபியும் தமிழ்மணத்தில் இல்லையென்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழகத்தில் இருப்பவர்களுக்கு டேபிளில் உட்கார்ந்தால் இட்லி தோசை வந்து விடுவது மாதிரி நமக்கெல்லாம் வாசிப்புக்கான சந்தர்ப்பங்கள் இல்லை.சில தகவல்களை சிபி,உண்மைத்தமிழன் போன்றவர்கள் காபி பேஸ்ட் செய்தாலும் கமெண்டாகவோ அல்லது தனது கருத்தையும் சேர்த்தே வெளியிடுகிறார்கள்.அவர்களது பதிவுகளைப் பார்த்தும் கூட செய்திகள் அறிந்து கொண்டது உண்டு.

என்னமோ போங்க மனோ!எனக்கு இந்த பதிவுலக அரசியலே புரியமாட்டேங்குது.

இப்ப பதிவின் கருத்துக்கு வந்து விடலாம்.வளைகுடாவின் மனித வளம் கொடுக்கல் வாங்கல் என்ற இரண்டு நிலைகளில் செயல்பட்டாலும் கொடுப்பவர்களான ஆசிய நாடுகள் வாங்கும் வளைகுடா நாடுகளிடம் பணிந்தே போய் விடுகிறார்கள்.இதுல இன்னொன்றைக் கவனித்தால் ஆசிய நாடுகளின் மனித வளத்தின் சில தவறான மீறல்களை மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்து பணிபுரிபவர்களிடம் காட்டுவதில்லையென்பதோடு அவர்களிடம் பம்மியும் விடுகிறார்கள் என்பது கண்கூடு.இதற்கான முதற்காரணம் அனைத்து ஆசிய முதுகெலும்பில்லாத பீரோகிராட்டிக் தூதரகங்களும் அதனை விட சார்க் என்ற ஒப்புக்கு சப்பாணி அமைப்புமே.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறை பற்றி சொல்ல வயலார் ரவி என்ற ஒரு துறையும் உள்ளது.இது எப்படி செயல்படுகின்றதென்று எனக்கு தெரியாது.ஆனால் சேட்டன்கள் இதுகுறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது ஆசியாநெட்டின் கல்ஃப் நியுஸ் மூலமாக அறிய முடிகிறது.

வந்ததுக்கு உங்களுடனும் கதைத்தாச்சு:)

சசிகலா said...

சொந்தம் பந்தங்களை விட்டுச் சென்று அவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கனும்மா பிறந்த ஊரிலேயே பிழைப்பை தேடலாமே ..

ராஜ நடராஜன் said...

வணக்கம் சகோதரி சசிகலா! நீங்க அந்த சசிகலா இல்லையே:)

இந்திய சூழலில் பிறந்த ஊரிலேயே பிழைக்க இயலாத சூழலே இன்னும் நிலவுகிறது.வளைகுடா செல்பவர்கள் தொழில் சார்ந்த கல்வியோடு பணிபுரிய செல்பவர்களுக்கு பிரச்சினை இல்லை.நான் இலங்கைப் பணிப்பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.இலங்கையின் பொருளாதாரத்தையும் தாங்கிப் பிடிப்பதில் வளைகுடா பணிப்பெண்களின் பங்கும் முக்கியம் என்பதால் இலங்கைக்கு கூட சொந்த ஊரில் பிழைப்பு எனபது சாத்தியமில்லாத ஒன்றே.பதின்ம வயதில் சில பெண்களை ஏஜண்டுகளின் அலுவலகங்களில் கண்ட போது மனம் கலங்கவே செய்தது.

எனது பார்வையில் ஆசிய தூதரகங்கள் இணைந்து செயல்பட்டால் இதற்கான தீர்வுகளை கொண்டு வந்து விடலாம்.

கோவி.கண்ணன் said...

//மனோ!நலமாக இருக்கேளா?//

அட நான் தான் அப்படியா மற்றவர்களும் அப்படியே படிச்சாங்களான்னு தெரியவில்லை

மன நலமாக இருக்கேளா....

:)

ராஜ நடராஜன் said...

கோவி!இதென்ன வில்லத்தனம்:)

மனோ நம்ம பக்கத்து வீட்டுப்பங்காளி.அப்படியெல்லாம் சொல்லப்படாது.நிலையா பின்னூட்டம் போடுற ஒண்ணு ரெண்டு ஆட்களையும் துரத்தி விட்டுடுவீங்க போல இருக்குதே:)