Followers

Monday, May 21, 2012

வருண்!வாங்க சங்மாவை ஆதரிப்போம்!

ஒரு திரைப்படத்தின் கதையின் முடிச்சை முன்னாடியே சொல்லி விட்டு பின் தொடர்ந்து கொண்டு போவது ஒரு வகையான கதை சொல்லும் நுட்பம்.இன்னுமொன்று கதையை மெல்ல நகர்த்தி விட்டு க்ளைமாக்ஸில் சொல்வது இன்னுமொரு வகை.மற்றுமொரு வகை கதை தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் போது ஒரு விதமாகவும் பின் படம் எடுக்கும் கால அவகாசத்தில் கால்ஷீட்,பட்ஜெட் இன்னும் பல காரணங்களால் கதை மதுரை தெருக்கள் மாதிரி நீண்ட வரிசையில் இல்லாமல் சென்னையின் அவரவர் கற்பனைக்கு தகுந்த மாதிரியான குறுக்கு சந்தில் புகுந்து விட்டாப் போதுமடா சாமின்னு படத்தோட கதையை சொல்லி முடிப்பது.இந்த பதிவின் தலைப்பும் கூட  மூன்றாவதாக சொன்ன மாதிரிதான்..

சங்மா பற்றி நேரா சொல்லாமல் வருணை ஏன் வம்புக்கு இழுக்குறேன் என்று சிலருக்கு தோன்றும்.ஆனால் நம்ம வருண் எனக்கு அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ஜெயலலிதாவிடம் கேட்காமலே சிபாரிசு செய்வதற்கென்றே நான் அரசியல் பதிவு போடாவிட்டாலும் கூட ஓடி வருவதாலும் நேர் கொண்ட பார்வையும்,,நிமிர்ந்த நன்னடையும் கொண்ட எமக்கு ஓ.பன்னீர்செல்வம் கோணல் முதுகெல்லாம் சரிப்பட்டு வராது என்பதாலும் தலைப்புக்கான விளக்கம் சொல்லி இப்ப பதிவுக்குள்ளே போகலாம்.

என்னை தொடர்பவர்களுக்கும் அல்லது தொடராமலே பின்னோக்கி சில பதிவுகளை மேய்பவர்களுக்கும் ஓரளவுக்கு அனுமானம் வந்து விடுமென்பதால் பொருளாதார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் செய்தி நோட்டம் பார்க்கும் போதே எனக்கு திக் என்றது.அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சண்டையிருக்க முடியும் என்பது போலவே கலைஞர் கருணாநிதிக்கும் அப்துல்காதருக்கும் என்ன சண்டையிருக்க முடியும் என்பதும் கூட இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.விஞ்ஞானி,முன்னாள் ஜனாதிபதி,அனுபவஸ்தன் இவற்றை விட நம்மூர்க்காரனாச்சே என்ற உணர்வும் கூட இல்லாமல் பிரணாப்புக்குத்தான் தி.மு.க ஓட்டு என்றதும் பஜகவும் வாய் மூடிய நிலையில்  ஜனாதிபதி மாளிகை வெளிகேட்டு வரை பிரணாப் நடந்து வந்து விட்டாரென்றே நினைத்தேன்.

ஜெயலலிதாவும்,ஒடிஸா முதல்வர் ஜூனியர் பிஜு பட்நாயக் இருவரும் இணைந்து சேர்ந்து அறிக்கை விடும்போதே முன்பு சபாநாயகராக இருந்த பின் இருந்த இடமே தெரியாமலிருந்த சங்மாவை முன்னிறுத்தும் அரசியல் தந்திரம் கூட புரியாமலே இருந்தேன்.அன்சாரியும்,அப்துல் கலாமும் இல்லாத சூழலில் பிரணாப் முகர்ஜி என்ற ஹெவி வெயிட் சேம்பியனை வீழ்த்துவதற்கு நோஞ்சான் பயில்வான் சங்மாவை நிறுத்தியதன் பின்ணணியில் இந்தியா சார்ந்த நலன்கள் உள்ளதால் சங்மாவை ஆதரிப்பது சரியான முடிவு என கருதுகிறேன்.

அது என்ன இந்தியா சார்ந்த நலன் என்றால் பல நொள்ளை நொட்டைகளை நாம் இந்தியனாக விமர்சித்தாலும் கூட அந்தப் பக்கம் ராணுவ ஆட்சி பூட்ட கேசு நிலை தோற்று ஜனநாயகத்துக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்,இந்தப் பக்கம் உலகமே கண்டுக்காமல் இருந்து இப்ப நானும்தான் ரவுடியாக்கும் என ஒரு புறம் சிவுப்பா கழுத்துல சுருக்கு ஜனநாயக முகமூடி மறுபுறம் ராணுவத்தின் பலத்தால் மட்டுமே ஆட்சி செய்யும் இலங்கை,இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் ராணுவ ஆட்சியிலிருந்து விடுபட்ட மியான்மார்,கருத்துரிமைக்கும் பிளாக்கரையும் விட ஒரு பார்வையற்றவருக்கே தடை போடும் சீனாவின் சித்தாந்தம்,மதம் என்ற சுழற்சிக்குள் சிக்கிக்கொண்ட ஈரான் மற்றும் வளைகுடாக்கள்,மால தீவு என்ற குட்டி தீவையும் கூட நிர்வாகிக்க முடியாத கூ என்ற பெரும்வட்டத்துக்குள் இந்தியாவை நோக்கினால் இரைச்சலான ஜனநாயகம் என்ற ஆணிவேரை வேருன்று இருக்கிறது.ஊழல்கள்,மனித உரிமை மீறல்கள்,காவல்துறை நண்பன ஆனால் சீர்கேட்டு நண்பன் என்ற குறைபாடுகள் உள்ளதை மறுப்பதற்கில்லை.ஆனால் பல இன,மத,கலாச்சார பண்புகளுக்குள் சண்டையும் போட்டுக்கொண்டு தீவிரவாதத்தையும் தாங்கிக்கொண்டு இந்தியா என்ற பெரும் பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம்.

தொடர்ந்து அரசியல் பதிவுகள் போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் பதிவர் காவிரி மைந்தன் பதிவொன்றுக்கு நண்பர் ஒருவர் இந்த ஜனாதிபதி பதவியில் ஏதாவது பயன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இந்திரா காந்தி ஜனாதிபதி ஆட்சி,கமிசன் போன்ற பூச்சாண்டியைக் காட்டியே தன் சொல் நயத்தால் தமிழகத்தை வளைத்துப் போட்ட கலைஞர் கருணாநிதிக்கு மூக்கணாங்கயிறு போட்டார். மேலோட்டமாக பார்த்தால் ஏதோ இங்கிலாந்து மகாராணிக்கான கௌரவ பதவி மாதிரி தோன்றினாலும் கூட மரணதண்டனையின் விநாடிகளை அணு அணுவாய் சந்திக்கும் ஒரு மரணதண்டனைக் கைதியின் உயிரை திரும்ப வரமளிக்கும் வல்லமை கொண்டது ஜனாதிபதி பதவி.

ஏதோ கொசு கடிச்ச மாதிரி இருந்ததே என்று தட்டிவிட்டு நகர்கிறது 2G இன்று.இந்தியாவின் பண மதிப்பு குறைந்து விட்டது கவலைக்குரியது என்கிறார் பிரணாப் இன்று.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று நாளை ஒரு 10 G ராகுல் காந்தி காலத்திலோ அல்லது ஏதோ ஒரு நிதியின் காலத்திலோ நிகழ்ந்து விட்டதென வைத்துக்கொள்வோம்.மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் கொடுக்கல் வாங்கலில் இழுபறின்னு வச்சுக்கலாம்.மத்திய அரசு ஜனாதிபதியை கிள்ளினால் மாநில அரசில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடும் பவர்புல் மனிதன்/மனுஷி ஜனாதிபதி. அங்குசம் யார் கையில் இருக்கிறதென்பதைப் பொறுத்தே ஜனாதிபதி யானை மிரளுமா தூங்குமா என்பது. DD என்ற தொலைக்காட்சி விஞ்ஞான வளர்ச்சியையும் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தை இரைச்சலுடன் பறை சாற்றிக்கொண்ட கால கட்டங்களில் எமபி குதிக்கும் எம்.பி மாணவர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படியென்ற கலையை நன்கு கற்று வைத்திருந்தார் சங்மா.

இந்தியா பலவிதமான ஜனாதிபதிகளை பரிட்சித்துப் பார்த்து விட்டது.சங்மாவின் தேர்வு இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும் விரும்பும் அடிப்படை வசதிகளற்ற மனிதர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

சுருக்கமாக சொன்னால் பிஜேபியின் அப்துல் கலாம் போல சங்மா ஜெயலலிதாவின் இந்திய ஜனநாயகத்தின் புதிய ஜனாதிபதிக்கான பரிட்சையாக இருக்க முடியும்.

இரண்டு வரிதான் சொன்னேன்!அதுக்குள்ள இவ்வளவு பெரிய ஜவ்வு மிட்டாயா?முடிச்சுடறேன்.

17 comments:

வருண் said...

***சங்மா பற்றி நேரா சொல்லாமல் வருணை ஏன் வம்புக்கு இழுக்குறேன் ***

இப்போ நான் போயி, சங்மா னா என்னனு தெரிந்துகொண்டு வரனும்! :(

ஏன் இப்படி வேலை கொடுக்குறீங்க!! :-)

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

நானும் இந்த பதிவர் வருணுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னையோ என்று தான் உள்ளே வந்தேன். வந்தால் ஜனாதிபதி தேர்வுக்கான கலக்கலான அரசியல் பதிவு. இது ஒரு அலங்கார பதவி. யார் அமர்ந்தாலும் சாமான்ய இந்தியனுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.

ராஜ நடராஜன் said...

வருண்!வணக்கம்!நலமா?

யாராவது பின்னூட்டத்துக்கு தேறுவாங்களான்னு பார்த்தால் முதல் போணியே நீங்கதான்.நன்றி.கூடவே வலதுபக்க பின்னூட்ட பகுதியில் எனக்கும் மேல் பால்கனியில் உட்கார்ந்துகிட்டு கவிதையெல்லாம் பாடி புகழுறீங்க!போங்க எனக்கு ரொம்ப வெட்கமா இருக்குது:)

உங்களுக்கு ஊர் சுற்ற கஷ்டமாயிருக்கும்ன்னுதானே பதிவர் காவிரி மைந்தன் உங்களுக்க்காகவே பதிவு போட்டிருக்கார்.

http://vimarisanam.wordpress.com/2012/05/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/

காபி பேஸ்ட் எடுத்துட்டு வாங்க.

மீண்டும் நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!ஸலாம் சொல்லிக்கிறேன்.

வருண் நம்ம எதிரணிப் பின்னூட்ட நண்பர்தான்.கருத்து தவிர யாரிடமும் சண்டை போடக்கூடாதென்பது என்னோட இன்சூரன்ஸ் பாலிசி:)

இந்திய ஜனநாயகத்தில் எந்த பதவியும் அலங்காரப் பதவி அல்ல.என்ன இருக்குற எம்பிகள் கூட்டா சேர்ந்து ஜனாதிபதியை அலங்கார பொம்மையா ஆக்கி வச்சுடறாங்க.

டி.என் சேஷன் தேர்தல் ஆணையாளராக வரும் வரை அந்த பதவிக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா என்பதே யாருக்கும் தெரியாது.முக்கியமாக எனக்கு தெரியாது.அவருக்குப் பின்னாடி வந்த தேர்தல் ஆணையாளர்களைப் பாருங்கள்.சும்மா அடிச்சு ஆடுறாங்க அல்லவா?

அப்துல்கலாம் ஜனாதிபதி பதவிக்கு அழகு சேர்த்தார்.பிரதிபா பட்டீல் வந்ததும் அந்த பதவிக்கு மறுபடியும் தூங்குமூஞ்சி வந்துடுச்சு.சபாநாயகர் பதவி காலத்திலேயே பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவர் சங்மா என்பதை நீருபித்திருக்கிறார்.எனவே சில சுயமான முடிவுகளை துணிந்து எடுப்பார் என நம்பலாம்.

அனுபவ ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் சங்மா அல்லது டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்கள்.இருவரும் சாமான்ய இந்தியர்களே.

பிரணாப் காங்கிரஸின்,சோனியா காந்தி எடுப்பார் கைப்பிள்ள தான்.எனவே பிரணாப் எனது தேர்வு அல்ல.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

வலைஞரே!இன்னுமா தேர்தல் பிரச்சாரம் செய்துகிட்டிருக்கீங்க:)

வாரேன்!வாரேன்!என்னதான் செய்றீங்கன்னு பார்க்க வாரேன்.நன்றி.

வருண் said...

அம்மா என்ன சொல்றாங்கனு வாசிச்சேன். அதாவது அவரு ட்ரைபல் இனத்தை சேர்ந்தவராம். அதனால "அரசியல எல்லாம்" அரசியல்வாதிகள் தள்ளி வச்சுப்புட்டு, அவருக்க்கு சப்போர்ட் பண்ணனுமாம். (இவரால ஓ கே ஓ கேக்கு அதுபோல் நடந்து வரிவிலக்கு கொடுக்க முடியலை!!! ) நம்ம எல்லாருமே ட்ரைபல் இனத்திலே இருந்து வந்தவங்கதானே? எல்லாரும் இன்னைக்கு சமம்தானே? அவரு ட்ரைபல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் (அவரை குறைத்து) அவருக்கு சப்போர்ட் பண்னனும்ங்கிறது அவருக்கே பிடிக்கிதோ என்னவோ!

இதேபோல் தமிழ்நாட்டு சி எம் போஸ்டையும் யாராவது அதிமுக ட்ரைபல் எம் எல் ஏ ட்ட இந்தம்மா கொடுக்கலாம்! :)))

ராஜ நடராஜன் said...

வருண்!நாகலாந்து,ஹிமாச்சல்,அருணாச்சல பிரதேச மங்களைப் பற்றி யாராவது சொல்லனுமின்னா அது தமிழ்திரைப்படமாக இருந்தால் உய்யாலோ!உய்யாலோ என்று பாட்டுப் பாடிகிட்டி மூங்கில் குச்சி தாண்டுவதை ட்ரைபல் டான்ஸ்ன்னு காண்பிக்கிறாங்கன்னு பார்த்தா குடியரசு தினத்திலும் கூட அப்படித்தான் அவர்களை உருவகப்படுத்துகிறார்கள்.

ஒருவேளை ஜெயலலிதாவின் கண் டெல்லி மேல் இருந்தால் சிறுபான்மையினர் ஆதரவு பெருகும் சாத்தியத்தை முன் வைத்தும் கூட இந்த கணையை தேர்ந்தெடுத்திருக்கலாம்.அதனை விட நேரடியாக பார்த்தால் கலைஞர் கருணாநிதியின் பிரணாப் ஆதரவுக்கு வைத்த செக் என்பதே சரியாக இருக்கும்.

ஒருவேளை அந்தம்மா டெல்லிக்குப் போயிட்டா சி.எம் போஸ்ட்டையும் கையோடவா எடுத்துட்டுப் போகப் போறாங்க?கூட இருக்குற ஆட்கள் குப்புற குனியறதுக்கு அந்தம்மா என்ன செய்யும்:)

குனியறதைப் பற்றி சொன்னதும் இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்து விட்டது.நான் காவிரி மைந்தன் தொடுப்பு கொடுத்தேனே பார்த்தீங்களா?பார்க்கலைன்னா இந்தப் பின்னூட்டம் படிச்சிட்டு மறுபடியும் ஒரு முறை போயிட்டு வந்துடுங்க.

ஒரு விதத்தில் பார்த்தால் அதிமுகவுக்கு கிடைத்த அடிமைகள் நேர்மையானவர்கள் என்பேன்.காமிரா,வீடியோ முன்னாடியே துணிந்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடுகிறார்கள்.ஆனால் நம்ம தளபதி ஸ்டாலின் போன்ற பகுத்தறிவு பாசறைகள் என்ன செய்கிறார்கள்ன்னு பார்த்தால் தமிழக பத்திரிகைகளுக்கே டிமிக்கி கொடுத்து விட்டு சாய்பாபா ஆசீர்வாதத்திற்கு குனிந்து விடுகிறார்கள்.இந்தி படிக்காதேன்னு நம்பள்கி சொல்லிட்டு பேரனுங்களுக்கு இந்தியும் தொந்தியும்.கோயிலில் தீ மிதிக்கும் கண்மணிக்கு கண்டனம் சொல்லி விட்டு மஞ்சள் துண்டு மகிமையும்,சாய்பாபா கொடுமையும்.இதையெல்லாம் கூட்டத்தோடு சேர்ந்து நானும் கோயிந்தா போட்டால் எனக்கும் திருநீறு பூசி விடுகிறீர்கள் நீங்கள்:)

ராஜ நடராஜன் said...

வருண்!ஒரு கல் ஒரு கண்ணாடியைத்தான் ஓகே!ஓகேன்னு சொல்றாங்க என்பதை உங்க நண்பர் வவ்வால் சொல்லித்தான் எனக்கே தெரியும்.இந்த சொல் சுருக்கத்துக்கே அந்தப் படத்துக்கு வரி விலக்கு கொடுக்காமல் இருந்தது சரியென்பேன்.

நான் திருட்டு வீடியோவில் கூட இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.

வருண் said...

***இந்த சொல் சுருக்கத்துக்கே அந்தப் படத்துக்கு வரி விலக்கு கொடுக்காமல் இருந்தது சரியென்பேன். ***

OK, RN! அந்த அம்மாக்குக்கூட கொஞ்சம் தவறுனு தோண வாய்ப்பிருக்கு. ஆனால் உங்களுக்கு தப்பாவே தோணல போல! LOL

ஆமா, உங்க நியாயத்தில் உள்ள காமெடி என்னனா, "3" படத்தை உங்களையும் சேர்த்து எல்லாருமே "த்ரீ"னுதான் சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க! ஆனால் அதுக்கு வரிவிலக்கு கொடுத்தது சரி என்பீர்கள்னு நெனைக்கிறேன்!

ஆமா, "த்ரீ"க்கு எதுக்குங்க வரிவிலக்கு??? LOL

வருண் said...

***ஒருவேளை அந்தம்மா டெல்லிக்குப் போயிட்டா சி.எம் போஸ்ட்டையும் கையோடவா எடுத்துட்டுப் போகப் போறாங்க?***

டெல்லிக்கா? எதுக்கு? சுத்திப் பார்க்கவா? LOL

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம "அம்மா"வை அங்கே உக்கார வச்சா நல்லா இருக்குமோன்னு தோணுது, ஒரு மம்மி டம்மி ஆன கதைன்னு ஒரு நாலஞ்சி பதிவையும் தேத்திப்புடலாம்..!!!

-------சிறப்பான அலசல்-------

ராஜ நடராஜன் said...

வருண்!என்னோட விவாதத்தில் என்ன நக்கீரனைக் கண்டீர்கள்:)தமிழ்ப்பெயர்கள் தமிழ்ப்படங்களுக்கு வைத்தால்தான் வரிவிலக்குன்னு உதயநிதியோட தாத்தாதானே சட்டம் கொண்டு வந்தார்?இல்ல முன்னாடி பின்னூட்டத்துல நான் சொன்ன இந்தி ஊர் உபதேசம் மாதிரி ஊருக்குத்தான் தமிழ்ப்பட பெயர்ன்னு அவங்க ஆமோதித்தால் நான் என்னோட மறுமொழியை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

என்னது!3 யா?த்ரியா? எனக்கு திரி வைக்கிறதுக்குன்னே நீங்க பின்னூட்டம் போடுறீங்களாக்கும்:)
நான் இதுவரை லேஸ் இந்த கல்லி வல்லி கல்லி வல்லி பற்றித்தான் பதிவு போட்டிருக்கிறேன்.அந்தப் பாடல் த்ரி பற்றி நான் எங்கே சொல்லியுள்ளேன் என்று சொல்ல முடியுமா உங்களால்?

மேலும் நீங்க வவ்வாலுக்கு தங்கிலீஷ் உபதேசம் செய்து விட்டு நீங்களும் அங்கிலிஷ் பேசுவதை முன்னாடியே சுட்டிக்காட்ட நினைத்தேன்.பதிவு நீயா?நானாவா இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்:)

சூர்யாவை நீங்க கிள்ளும்போதும் கூட பதிவுக்கு சம்பந்தமில்லாததுதானே என்று விட்டு விட்டேன்.இப்ப நீங்களே வந்து தலையைக் கொடுத்தா கொட்டாமல் விட்டு விடுவேனா என்ன:)

த்ரிக்குமா வரி விலக்கு?அவ்வ்வ்வ்வ்!

பதிவர்கள் விமர்சனம் சொல்லி விட்டதால் 3க்கும் எஸ்கேப் ஆகிவிட்டேன்.

சரி!போணியாகாத படங்களை பற்றி விமர்சிப்பதை விட்டு விட்டு பதிவு போடனுமின்னு நினைச்சிட்டிருந்த ஒரு படத்தை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.Outsourced.

படம் பார்த்துட்டு நீங்க முந்தி பதிவு போட்டாலும் சரி இல்ல நான் முந்திகிட்டாலும் சரி.மாட்டுப்பசங்க ஸ்டைல (அட என்னை சொல்லலீங்க....the true cowboys style)யார் முந்திக்கிறாங்கன்னு பார்க்கலாம்.உங்களுக்கு தட்டச்சு துப்பாக்கிக்கு ஒரு வார கால கெடு:)

நண்பர்களே!தப்பித்தவறி யாராவது இந்தப் பின்னூட்ட பக்கம் வந்தீங்கன்னா படிக்கிறது சங்மாவை இடிக்கிறது சினிமாவைன்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

பின்னூட்ட லயனத்துக்கே நான் நடனமாடுகிறேன்:)

ராஜ நடராஜன் said...

வருண்!விடாம பின்னூட்டம் போட்டாலும் அசராம பதில் கொடுக்கிற கூட்டமாக்கும் நாங்க!அது என்ன நாங்கன்னு உங்களுக்கு சொல்லி விளக்க வைக்க வேண்டியதில்லை:)

அந்தம்மாவாவது ஊர் சுத்துறேன் பேர்வழின்னு டெல்லி ரோடுகள்,உட்காரும் கார் சீட்டு தாங்குமா?யார் எப்படின்னு நோட்டம் பார்க்க போறாங்க.தாத்தா என்ன செய்தாரு? தமிழன் பிரச்சினைக்கு கடிதம்,தமையன் பிரச்சினைக்கு விமானம் என்றுதானே இருந்தார்?

சரி!சரி!பழசையெல்லாம் கிளப்பாதீங்க.இவங்க இரண்டு பேராலும் எனக்கு ஒரு தமிழீழம் சாதிக்க வேண்டியதாயிருக்குது.

எனக்கு பிரதமர் நாற்காலி கொடுத்தால்தான் தமிழீழம் வாங்கித் தருவேன் என்கிறார் ஜெயலலிதா.

எனக்கு பிரதமர் சீட்டெல்லாம் வேண்டாம்.நாற்பது எம்பிகள் கொடுத்தாலே போதும்ன்னுதான் டெசோவையே தூக்கினேன் என்கிறார் கலைஞர் கருணாநிதி.

இருவருக்கு எது கிடைக்கிறதோ எனக்கு தமிழீழம் கிடைத்தால் போதும்.

நான் அப்புறமா கண்டுக்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

மனோ!என்ன பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டிருக்கீங்க?இன்னும் விரதம் தீரலையா?வந்து ஜோதில கலந்துகிட்டாத்தானே ஆட்டம் கலகலப்பாக இருக்கும்.

பிரதமர் மன்மோகன் சிங் எப்ப ஆளை விடுவாங்களோ வீட்டுல காலாற உட்காரலமோன்னு காத்துகிட்டிருக்கார்.இன்னுமொரு முறை காங்கிரஸ் தேறாது என்பது காங்கிரஸுக்கே தெரியும்.எனவே மூன்றாம் அணி அமையாத பட்சத்தில் பிஜேபிக்கான வாய்ப்புக்கள் அதிகம்.அப்படியான சூழல் இருக்கும் போது பிரதமர் பதவிக்கு நிச்சயமா இந்த முறை வாஜ்பாய் இல்லை என்பதும் தெரிந்த ஒன்றே.நேரடிப் போட்டின்னா மோடி,அத்வானியோடு கூட்டணியில் தமிழகத்திலிருந்து அதிமுக 40ல 35 தேறினால் கூட நானும் போட்டியில் இருக்கிறேனாக்கும் என்று ஜெயலலிதா மல்லுக்கு நிற்பார்.

இப்படியான சூழல் உருவாகினால் என்னவாகும் என்பதையும் கொஞ்சம் நீட்டி முழக்கி விடலாமே.காசா பணமா:)

மோடிக்கு நல்ல நிர்வாகி என்ற பெயர் இருந்தாலும் குஜராத் கலவரம் மற்றும் அமெரிக்க விசா தடை போன்ற வில்லங்கம் இருக்கிறது.அத்வானிக்கு பிரதமர் கனவு இருந்தாலும் பாபர் மசூதி கோபம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இருக்கிறது.ஜெயலலிதாவிற்கு ஹிலாரி சந்திப்பு போன்ற அனுகூலங்கள் மூன்றாம் இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் எம்.பிகள் கொடுக்கல் வாங்கலில் ஜெயலலிதாவிற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.மூவருடனும் கலந்து இதையெல்லாம் சரியாக கணிக்கும் ராஜகுரு மூச்சடைப்புன்னு படுத்துகிட்டதால் கிளிஜோஸ்யத்தை இன்னும் வரும் நகர்வுகள் கணித்து கணிப்போம்.

நமக்கு ஆகவேண்டியது என்னன்னா இலங்கை குறித்த பிஜேபியின் நிலைப்பாடு சுஸ்மா சுவராஜ் பயணத்திலேயே தெரிந்து விட்டது என்பதால் காங்கிரஸ் மாதிரியே பிஜேபியின் மதில்மேல் பூனை நிலைப்பாடாக இருக்குமென்பதால் நொண்டிக்குதிரையாக இருந்தாலும் தமிழீழம் என்ற ஜாக்பாட்டை கொண்டு வருமா என்று பரிசோதனை செய்ய மோடி,அத்வானி தவிர்த்து ஜெயலலிதா குதிரை மீது பந்தயம் கட்டலாம்.

இன்னும் யாராவது தேறுவாங்களான்னு பார்க்கிறேன் மனோ.நன்றி.

வருண் said...

***த்ரிக்குமா வரி விலக்கு?அவ்வ்வ்வ்வ்!

பதிவர்கள் விமர்சனம் சொல்லி விட்டதால் 3க்கும் எஸ்கேப் ஆகிவிட்டேன்.***

நீங்க ஒரு கல் ஒரு கண்ணாடி OK OK ஆனதால, வரிவிலக்கு கெடையாது எனப்து சரியாந்தே ஜஸ்டிஃபை பண்ணினீங்க.

3 படத்தை எல்லாருமே த்ரீ ஆக்கிப்புட்டாங்க.. அதுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டதுனு ஞாபகம் வந்தது. அம்புட்டுத்தான்.

I am not a fan of udayanidhi. Neither am I a fan of Dhanush & family either!

நியாயம்னு ஒண்ணு இருக்கனும். நீங்க நியாயப்படுத்துவதுபோல, ஆத்தா பெரிய நியாயாதிபதி எல்லாம் கெடையாது. She takes issues personally. That's all!

ராஜ நடராஜன் said...

asiantamil...thanks for your comment.We are here to rock but problem is missing drums and trumpets:)

By the way you ought to be kidding.Among the whole lot which link do you want me to follow:)

ராஜ நடராஜன் said...

Varun! I can understand your point of view and argument on politics,udayanidhi etc.

I want to emphasize once again my anger on M.K is just on Eelam approach during his gala days. Otherwise I respect him of his Ilakkiya proficiency.

Also I simply agree with you Jayalalitha takes issues personally.There is no doubt about it.

உண்மையை உண்மைன்னு ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனையே இல்லை.விவாதத்தோடு மல்லுக்கட்டுவதிலும் அப்படியே:)