Followers

Wednesday, December 30, 2015

தி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை.

வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி நேர்பார்வை பார்த்தால் தி.மு.க வின் செயல் திட்டங்கள் தமிழகத்திற்கு நன்மைகளே.

பெரியார் கொள்கைகள் சில செயல் வடிவம் ஆன போதும் சங்கர மடம் போல் திராவிட கழகமும்,தி.மு.க குடும்ப மடம் ஆகி விட்டன. திராவிட கழகம் சமூகம் சார்ந்து செயல்படுவதால் தமிழகத்தின் இன்னுமொரு வழி என்று பின் தள்ளி விடலாம்.ஆனால் தமிழகத்தின் பொதுமக்கள் அனைவரின் வாழ்க்கை,வீழ்ச்சியை அரச பீடம் நிர்ணயிப்பதால் தி.மு.க பெயருக்கு அரசியலே வாழ்க்கை என்பதால் சில மாறுதல்களை கலைஞர் காலத்திலேயே கொண்டு வந்தால் தி.மு.க வின் பெயர் நீண்டதோர் வரலாற்றை இன்னும் நிறுவும். இந்த கருத்துரை தேர்தலுக்கும் அப்பாலான நீண்ட பார்வை.

குடும்ப ஆட்சி மட்டுமல்ல திரு.ஸ்டாலின் கூட அரச பதவியின் அடுத்த வாரிசு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று. வாரிசு அரசியல் மற்ற மாநிலங்களில் நிகழவில்லையா என்ற எதிர்கேள்விக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழகம்  அல்ல. அரசியலும் திரைப்படங்களும் தமிழகத்தின் வாழ்க்கை நீரோட்டம். இன்னும் சொல்லப் போனால் வாரிசு அரசியலை விட ஜெயலலிதாவின் ஒற்றை ஆட்சி தமிழகத்திற்கு நல்லது.

அரசு பணியில் இருக்கும் சகாயம் கூட தமிழகத்தின் மாற்று என்று மக்கள் கருதும் நிலையில் ஸ்டாலின் தி.மு.கவுக்கான தீர்வு அல்ல. தி.மு.க வில் இன்னும் கூட கட்சி கட்டுப்பாட்டை மதித்து பல பேர் இருக்க கூடும்.அவர்களையெல்லாம் ஏன் தி.மு.க முன் நிறுத்துவதில்லை?

சகாயம் மாற்று என பலர் நினைக்கும் போது வாரிசு அரசியலும் தி.மு.க வின் வீழ்ச்சிக்கான இன்னுமொரு முக்கிய காரணம் என்பதால் ஓரளவுக்கு மக்களுக்கு தெரிந்த திருச்சி சிவா போன்றவர்களை ஏன் தி.மு.க கலைஞருக்கு அடுத்த மாற்றாக கருதுவதில்லை? அரசியலில் ரிமோட் கண்ட்ரோல்களாக பால் தாக்கரே,சோனியா போன்றவர்கள் உதாரணம். அனுபவம் வாய்ந்த கழகத்திற்கு வழியில் போறவனெல்லாம் கருத்து சொல்கிறான் என்று கழக கண்மணிகள் நினைத்தால் கலைஞருக்கு பின்  நிச்சயம் தி.மு.க இல்லை 

இப்பொழுதே  அரசியல் பேரம் பேசும் திறன் இன்றி விஜயகாந்தைக் கூட வரவேற்கும் கட்டெறும்பு நிலை என்பதை விட கலைஞரே சொன்ன கடுகு நிலையில் தி.மு.க இருக்கிறது. கடுகின் காரத்தை விட மிளகாய் காரம் இன்னும் அதிகம். தமிழகம் கடுகு தாளிப்பதோடு மிளகாய் காரத்தை அதிகமாக விரும்புகிறது. .

ஜனநாயக வழியில் கட்சி செயல்பாடுகளை முன்னெடுக்கும் தி.மு.கவிற்கு வாரிசு அரசியல் நல்லதல்ல. கட்சி ஜனநாயகம் தழைக்க திருச்சி சிவா போன்றவர்களை முன்னிறுத்துங்கள்.

கழக கண்மணிகள் கேட்டால் கேளுங்கள்.இல்லையென்றால் பல் போன காலத்தில் வளரும் நிகழ்வுகளை ஒட்டி  பதிவை அசை போடுகிறேன்.

71 comments:

ஜோதிஜி said...

இந்தப் பதிவு நண்பர் நந்தவனம் பார்வையில் பட வேண்டும். அவர் பதில் சொன்ன பிறகு மீண்டும் வருவேன்.

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட...நீங்கள் சொல்லும் இந்தயோசனை கலைஞருக்கு தெரியாமலா இருக்கும்..??!!

திராவிட கழகம் நிலைக்க மற்றவர்களை முன்னிலைப்படுத்த அவருக்கான தடை அவரது குடும்பம்.அவரால் அதை மீறி செயல்படும் நிலையில் இருக்கிறாரா?

? said...

ஏங்க ராசநட, உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் யோசனை ஓடுது? திமுகவுக்கு ஆக்கபூர்வமானது எதுன்னு தோணுறாப் போல தமிழ்நாட்டுக்கு ஆக்கபூர்வமான எது தோணலையா? அது திமுகவையே கலைத்துவிடுவதுதான்!!!

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

இப்படி திருவள்ளுவர் 2000 வருசத்திற்கு முன்னாடியே சொல்லியிருக்கிறாராமே! :))

சரி, பிராக்டிகலாக யோசித்தால் கலைஞரின் அரச குடும்பம் மட்டுமல்லாது பல இடங்களில் இப்படி திமுகவின் குறுநிலமன்னர் குடும்பங்கள்தான் கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. நீங்க உதாரணமாக சொன்ன திருச்சி சிவாவே தன் மகனை திமுகவில் வளர்த்துவிடுகிறார்- ஏற்கனவே அவரது மகன் மீது கொலை முயற்சி கேஸ் எல்லாம் இருக்கிறது (கட்சியில் பெரியாளாகி வருகிறார் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்?).

இதை திமுகவின் குறைபாடு என்பதினை விட, மக்கள் இதையெல்லாம் சகித்துக் கொள்ளவதை தாண்டி, மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் நிலையை தாண்டி, இப்படி செய்யாதவன் பிழைக்க தெரியாத கிறுக்கன் என்கிற நிலைக்கு வந்தடைந்து விட்டார்கள்.இதற்கு காரணம் தமிழ் சமூகத்தின் சிந்தனை வறட்சியோடு பேராசை & சுயநலத்தினை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளவது என்கிற நிலைக்கு போய்விட்டதுதான். இது திமுகவிலும் பிரதிபலிக்கின்றது அவ்வளவுதான்.

ஜோதிஜி அவர்களின் கருத்துக்காக வெயிடிங்!

ராஜ நடராஜன் said...

காமிரா காதலன் தவறு செயல்படுத்தும் நிலையில் இல்லாவிடில் என்றாவது ஒரு நாள் கடையை இழுத்து பூட்டி விட வேண்டி வரும். 2011 தோல்வியிலேயே தி.மு.க பாடம் கற்றிருக்க வேண்டும்.
பார்க்கலாம் 2016 எப்படி போகிறதென்று.

ராஜ நடராஜன் said...

நந்தவனம்! என் பேச்சை கேட்டால் தி.மு.க வுக்கு நல்லது! இல்லைன்னா உங்க் ஆசை கட்டாயம் நடக்கும்: மூன்றாவது அணியும் தோல்வியை தழுவும் பட்சத்தில் தமிழகத்திற்கு வாச்சது அ.தி.மு.க தான்.

பழகிய செல்வமா அல்லது புழங்கிய செல்வமா? இப்போதைக்கு திருச்சி சிவா போன்றவர்கள் என்றுதான் சொன்னேன். அதற்குள் இன்னுமொரு வாரிசு அரசியல் உருவாகி விட்டதா?அவ்வ்வ்.

//, மக்கள் இதையெல்லாம் சகித்துக் கொள்ளவதை தாண்டி, மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் நிலையை தாண்டி, இப்படி செய்யாதவன் பிழைக்க தெரியாத கிறுக்கன் என்கிற நிலைக்கு வந்தடைந்து விட்டார்கள்.//

இது மெய்யாலுமே உண்மை. பதிவுலகம் விமர்சன மைனாரிட்டிகள்தான். கட்சிகளின் ஆதமா எது நிகழ்ந்தாலும் இவருக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்ற மக்கள் பாசத்திலும்,குடிசைகள் கூவம் ஆற்றின் ஓரங்களிலும் இருக்கிறது. இதுவே ஒவ்வொரு கட்சியின் பலம்.

இனி ஜோதிஜி ஆட்டத்தில் கலந்து கொள்வார்.

ஜோதிஜி said...

இரண்டு தடவை பெரிதாக பதிவு போல எழுதி பிடுங்கிக் கொண்டு போய் விட்டது. நாளை வருகின்றேன்.

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி கருத்தை எதிர்பார்த்தேன் ...காக்க வைத்துவிடுவாரா ராஜநட.

ஜோதிஜி said...

ராஜ நடா மற்றும் நந்தனவனத்திற்கு நன்றி. தவறு அவர்களின் வேண்டுகோளுக்குகிணங்க என் பார்வை.

வருகின்ற தேர்தலை நான் கட்சி ரீதியாக பார்க்கவில்லை. மக்களின் மனவோட்டம் மூலமாக பார்க்க விரும்புகின்றேன்.

சிலவற்றை விரிவாக பார்க்கலாம்.

ஜோதிஜி said...

வளர்ந்த மாநிலம் என்று சொல்லபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் நான் பார்த்தவரையில் அடிப்படை வசதிகள் இன்னமும் சென்று சேராத மாவட்டங்கள் மிக அதிகம்.

நான் பார்த்த திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரமாவட்டம், பல கடற்கரையோர மாவட்டங்கள், ஏராளமான மலை ஓர, காடுகளுக்கு அருகே, மற்றும் முகத்துவராங்களில் வசதிக்கும் தாலூகா என்று பல இடங்களைப் பார்த்துள்ளேன்.

எட்டு கோடி ஜனத்தொகை கொண்ட தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் பாதிக்குப் பாதி அளவு ஓட்டுப் போட வருவார்களா? அப்படியென்றால் நான்கு கோடி மக்கள் தேர்ந்து எடுத்து நமக்கு முதல் அமைச்சர் கிடைக்கின்றார். இப்படி வாழ்பவர்கள் உத்தேசமாக ஒரு கோடி மக்களாவது இருப்பார்கள். இவர்களுக்கு அருகே உள்ள மாவட்டத்தில் என்ன நடக்கின்றது கூட தெரியாது என்பது தான் இதில் முக்கியம். வாழ்வதற்காக ஏதோவொரு உழைப்பு. அதன் மூலம் கிடைக்கும் சிறிதளவு வருமானம். ஆசைகள் இல்லா வாழ்க்கை. மொத்தத்தில் வாழ்க்கை முழுக்க போராடிக் கொண்டே ஏன் போராடுகின்றோம் என்று தெரியாமல் எதையும் தெரிந்து கொள்ள முடியாமலே இறந்து போய் விடுகின்றார்கள். இவர்களின் தலைமுறையும் இப்படியே வாழையடி வாழை போல. எந்த மாற்றமும் இல்லை. இவர்கள் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்மும் இன்று வரையிலும் இல்லை

ஜோதிஜி said...

இரண்டாவது நிலையில் வருபவர்கள்

உள்ளடங்கிய கிராமங்கள். இப்போது கடலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் இப்படி உள்ள கிராமங்களில் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும். அடிப்படைய வசதிகளான நல்ல பள்ளிக்கூடம், கழிபப்றை வசதிகள், போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் முழுமையில்லாத நிலை. இது தவிர ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களின் மோசமான வாழ்நிலை. இவர்களின் வாழ்க்கையில் செய்தித்தாள்கள் முதல் இணையம் வரைக்கும் உள்ள எந்தவித தொடர்புச் சாதனங்களும் தொடர்பில் இருக்காது. ஆட்சி, அதிகாரம் போன்ற முன்பின் சமாச்சாரங்கள் அதன் காரண காரியங்கள் எதுவும் புரியாது. புரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் யாரோ ஒருவரின் ஆதிக்கம் அல்லது பண உதவி, அல்லது மற்ற நலத்திட்டங்கள் ஏதோவொன்றின் மூலம் இவர்களின் ஓட்டு பறிக்கப்படுகின்றது. அதன் மதிப்போ அதனால் உருவாகும் விளைவோ எதைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது.

ஜோதிஜி said...

மூன்றாவது நிலையில் வருபவர்கள்

சற்று வளர்ந்த கிராமமும் இல்லாமல் நகரமும்இல்லாத நிலையில் புது மனைவி ஆசை போல எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்ற அறைகுறை மக்கள். அடிப்படை வசதிகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். ஆனால் எதிலும் முழுமை இருக்காது. வாழ்வதற்கான சூழ்நிலை நிச்சயம் மெச்சத் தகுந்தாக இருக்கும். இவர்களுக்கும் தொலைக்காட்சி விவாதமோ, பத்திரிக்கையில் வரக்கூடிய ஊழல் குறித்த கட்டுரைகளோ, எதிலும் ஆர்வமில்லாமல் வாங்கிய அல்லது இலவசமாக கிடைத்த தொலைக்காட்சியில் திரைப்படங்கள் தொடர்பான செய்திகள் தான் இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். நவீனத்திற்கு மாற்றம் என்பது இவரகள் அத்தனை பேர்களும் உடை, உணவு, வாங்கும் சொத்துக்கள், சேர்க்கும் பணம் என்பதிலேயே முடிந்து விடும. தேர்தல் சமயத்தில் இந்த வர்க்கத்தில உள்ள பாதிக்கு பாதி அப்போதையே மனோநிலையில் ஓட்டளித்து விடுகின்றனர். அப்போது திடீரென ஒருவர் இறந்து விட்டால் அனுதாப ஓட்டுக்கள் இந்த வர்க்க மக்களிடம் இருந்து தான் பீறீட்டு வெளியே வரும். குறிப்பாக ஜெ வுக்கு கிடைத்த ராஜீவ் மரணம்.

ஜோதிஜி said...

அடுத்த நிலை

அரசு மற்றும் தனியாக ஊழியர்கள், பெருநகரங்கள், அடிப்படை வசதிகள் கிடைத்தவர்கள்.

வாழ்க்கை என்பது கொண்டாட்டமாக வாழ்வதேற்கே என்று சொல்லிக் கொண்டே பணம் சம்பாரிக்க என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்று வாழ்பவர்கள். அரசியல்வாதிகளிடம் மாற்றத்தை எதிர்பார்த்து நான் மட்டும் மாற மாட்டேன் என்று சபதம் எடுத்து வாழ்பவர்கள். பாதிக்கு பாதி பேர்கள் ஒட்டுப் போடும் நாளில் டிவிக்கு முன்னால் அல்லது சுற்றுலாவில் இருப்பார்கள்.

ஜோதிஜி said...

கடைசியாக வருபவர்கள் தான் சிறு குறு மற்றும் பெரிய தொழில் அதிபர்கள். எந்தக் காலத்தில் லாப நஷ்டங்களால் பாதிக்கப்படாதவர்கள். தான் வளர அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள். எந்தக் கட்சியையும் சங்கடப்படுத்தாமல் எப்படியெல்லாம் காரியம் சாதிப்பது என்பதையே கொள்கையாக கொண்டவர்கள்.

ஜோதிஜி said...

இப்போது யோசித்துப் பாருங்க. நம்முடைய தேர்தல் என்பது என்ன? ஏன் இத்தனை வீழ்ச்சி? ஊழல் என்பதை தற்போது பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று சர்வசாதாரணமாக ஒவ்வொரும் பேசத் தொடங்கியதன் புள்ளி எங்கிருந்து தொடங்கி இருக்கும் என்பதை யோசிக்க முடிகின்றதா?

ஜோதிஜி said...

கடந்த வாரத்தில் பழைய நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன கருத்து தான் என் கருத்தும். இங்கே தேர்தல் என்பதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவொரு கொண்டாட்டம் போலத்தான். இதை வேறொரு பாஷையில் சொன்னால் வாய்ப்பு இருப்பவர்கள் இப்போது கொள்ளையடிக்கின்றார்கள். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அவர்கள் முறைக்காக காத்திருக்கின்றார்கள். அவர் நல்லவரா? இவர் நல்லவரா? என்பதெல்லாம் பழங்கதை. பூமிக்கும் நிலத்துக்கும் இடையே இருக்கும் அத்தனை விசயங்களிலும் அரசியல் இருக்கினற்து. அது மாநில மத்திய, சர்வதேச அரசியல் என்கிற ரீதியாகத்தான் பிரிந்து உள்ளது.

ஜோதிஜி said...

ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நீங்களும் நானும் நந்தவனமும் காலை முதல் மாலை வரை மாங்கு மாங்குவென்று உழைத்தாலும் வேலை முடிவதில்லை. வேலைகள் நெட்டித்தள்ளுகின்றது. ஒரு அமைச்சர், முதல் அமைச்சருக்கு மாநிலம் முழுக்க அத்தனை விசயங்களையும் கோப்பு வழியாக பார்த்து, சம்மந்தப்பட்டவர்களை வேலை வாங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் அளித்து அந்த வட்டம் பூர்த்தியடைய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 14 மணி நேரம் தொடர்ந்து உழைக்க வேண்டும். யாரையாவது நீங்க சுட்டிக் காட்ட முடியுமா?

ஜோதிஜி said...

http://tamilebookscollection.blogspot.co.uk/2016/01/mandiri-tandiri-admk-2011.html

வாய்ப்பு கிடைக்கும் போது இந்த மின் நூலை நிதானமாக படித்துப் பார்க்கவும். தமிழ்நாட்டின் தற்போதைய மந்திரிகளின் மொத்த தகுதியும் உள்ளது. இதே போல திமுக வில் இருந்த மந்திரிகளின் தரம் தனியாக மற்றொரு பாகம் உள்ளது.

இப்போது சொல்லுங்க நீங்க யாரை ஆதரிப்பீங்க.

ஜோதிஜி said...

நந்தவனம் தொடர்ந்தால் தொடர்கின்றேன். நன்றி.

Unknown said...

Hello dears
I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)

Unknown said...

Hello dears
I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)

? said...

@ஜோதிஜி, உங்க பின்னூட்டம் ரொம்பவும் லேட். ராசநட மிஸ் பண்ணிவிட்டார் போலிருக்கே.

ஆள் பதிவுலகத்திலிருந்து காணாமல் போய் இரண்டொரு மாதமாகத்தான் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.அதற்குள் இப்படி ஆகிவிட்டதே,சே. ஆனாலும் திரு. செல்வராஜின் பின்னூட்டம் fakeக்காக இருக்க வேண்டும் என்றுதான் மனது வேண்டுகிறது.

http://thavaru.blogspot.com/ said...

சே...அதற்குள் இப்படி ஆகிவிட்டதே...ராஜநட கருத்து சொல்லவருவாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்துகொண்டுதா்ன் இருக்கும்.

ஜோதிஜி said...

நந்தவனம்

கோவை மற்றும் அவர் மாமாவுடன் பேசி விட்டேன். செய்தி உண்மை தான். நாளை அவர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். நாளை காலை ஆறு மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு உடல் வருகின்றது. தனிப்பட்ட தொடர்பு உள்ளவர். மிக மிக வருத்தமாக உள்ளது.

உங்கள் ஃபேஸ்புக் முகவரி இருந்தால் இந்த மின் அஞ்சலில் பகிர்ந்து கொள்க.

texlords@gmail.com

Amudhavan said...

ஒவ்வொரு பதிவிலும் ஆகட்டும், வந்து போடும் கமெண்டுகளிலும் ஆகட்டும் லேசாக வம்பு வளர்த்துக்கொள்வதுபோல் தொடர்வது அவரது பாணி. இனி இந்தப் பாணி இணைய உலகில் அறுபடுகிறது, மேலே உள்ளதுதான் அவர் போட்ட கடைசிப் பதிவு என்பதை நினைக்கும்போது துக்கம் அடைக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

தி.தமிழ் இளங்கோ said...

என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய “ஆரவல்லி சூரவல்லி கதை - இலக்கியமும் சினிமாவும்” என்ற எனது பதிவினில் அவர் கடைசியாக கீழ்க்கண்ட கருத்துரையை எழுதி இருந்தார். அவர் கருத்துரையும், எனது மறுமொழியும் கீழே.

////

ராஜ நடராஜன்Sunday, January 03, 2016 1:52:00 am
நீங்களும் பதிவர் அமுதவனும் கூட்டு சேர்ந்தா பதிவுலகம் கொஞ்சம் கலை கட்டும் போல தெரியுதே! பகிர்வுக்கு நன்றி. புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்.
Reply / Replies
தி.தமிழ் இளங்கோSunday, January 03, 2016 9:08:00 pm
சகோதரர் ராஜ நடராஜன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! நடிகர் சிவகுமார் போன்ற பிரபலமானவர்களுடன் நட்பு உள்ளவரான, என்னில் மூத்த, அனுபவம் மிக்க, மூத்த எழுத்தாளரான அமுதவன் அய்யாவோடு என்னை இணைத்துப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் எங்கே? நான் எங்கே? எனக்குத் தெரிந்த, நான் பார்த்த சினிமாவோடு, நான் படித்த தமிழ் இலக்கியத்தோடு கலந்து எனக்குத் தெரிந்த நடையில் எழுதுகிறேன். அவ்வளவுதான். ////

அவரது மறுமொழியை எதிர்பார்த்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டது. (நம்பள்கி அவர்களது பதிவின் மூலம், சகோதரர் ராஜ நடராஜன் அவர்களது மறைவுச் செய்தியை தெரிந்து கொண்டேன்.) சகோதரர் ராஜ நடராஜன் அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும்.

? said...

@ஜோதிஜி,

நன்றி, திரு.செல்வராஜின் தகவலை உறுதிப்படுத்தியதற்கு. மனிசன் இந்த வருடம் இந்தியா திரும்ப இருப்பதாக எழுதியிருந்தார், இப்படியா திரும்பனும்.. எவ்வளவு நிலையற்றது இந்த வாழ்வு!

நான் இதுவரை ஃபேஸ்புக்கில் நுழையவில்லை. இப்போதைக்கு உங்க மின்அஞ்சலை குறிச்சுவைச்சுக்கிறேன்.

சார்வாகன் said...

சகோ இராஜ நடராஜன் மறைவுக்கு அஞ்சலி,

boopathy perumal said...

இராஜ நடராஜன் மறைவுக்கு அஞ்சலி

Anonymous said...

இராஜ நடராஜன் மறைவுக்கு அஞ்சலி

Seshan/dubai

வேகநரி said...

கொடுமையான செய்தி.

ஜோதிஜி said...

நண்பர்களுக்கு

இப்போது ராஜநடராஜன் இறுதி அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொண்டு மயானம் வரைக்கும் சென்று காரியங்கள் முடிந்த பிறகு திருப்பூர் வந்து சேர்ந்துள்ளேன். இது குறித்த விபரங்களை விரைவில் இதே தளத்தில் எழுதி வைக்கின்றேன்.

reverienreality said...

RIP dear friend...You will be missed...

ராமலக்ஷ்மி said...

வருத்தம் அளிக்கும் செய்தி. ஆழ்ந்த அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்!

உண்மைத்தமிழன் said...

மிகவும் வருந்துகிறேன். இப்போதுதான் வருண் மூலமாகச் செய்தியை அறிந்தேன். ஆரம்பக் காலத்தில் நான் எழுதும் ஒவ்வொரு அரசியல் பதிவுக்கும் வந்து பின்னூட்டம் இடுவார். அரசியல் பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம்.. பேசியிருக்கிறோம்.. என்னை உற்சாகமூட்டியவர்.. கடைசிவரையிலும் முகத்தைக்கூட காட்டாமல் போய்விட்டாரே..?

அவருடைய குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்..!

யூர்கன் க்ருகியர் said...

மிக மிக அதிர்ச்சியான செய்தி ... ரொம்பவே வேதனையாய உள்ளது

யூர்கன் க்ருகியர் said...

மிக மிக அதிர்ச்சியான செய்தி ... ரொம்பவே வேதனையாய உள்ளது

ஜோதிஜி said...

எழுத்துலகத்தில் இருந்து சிறிது காலம் என்னை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கடந்த ஒரு வருடமாக எழுத்து, இணையம் என்று எதிலும் அதிகபட்ச கவனம் செலுத்துவதில்லை. தேவையான சமயங்களில் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகிறேன்.


ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜநடராஜன் மறைவு உருவாக்கிய தாக்கத்தைவிட அவர் வாழ்ந்த வாழ்க்கையை உறவினர்கள் மூலம் தெரிந்த போது நிச்சயம் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.


பதிவுலகத்தில் பட்டாபட்டி என்பவர் இறந்த போது (சிங்கப்பூர்) அவருக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர் ரோஸ்விக் (தற்போது அமெரிக்காவில் உள்ளார்) இதே கோவையில் பட்டாபட்டியில் இறுதி நிகழ்வுக்காகச் சென்று வந்தார். அப்போது அவர் சொன்னதை வைத்து என் பதிவில் ஒரு அஞ்சலிக் கட்டுரையை பட்டாபட்டி அவர்களுக்காக எழுதினேன். http://deviyar-illam.blogspot.com/2013/05/blog-post_15.html

அதற்குப் பிறகு ராஜநடராஜன் குறித்து எழுதுகிறேன்.


என் வலைப்பூவில் எழுதுவதை விட இங்கே பின்னூட்டம் வாயிலாக எழுதி வைப்பதே சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். காரணம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து கூட ராஜநடராஜன் மேல் அன்பு கொண்ட பலரும் ஏதோவொரு காரணத்துக்காக இந்தத் தளத்திற்கு வரக்கூடும். அப்போது அவர்களின் இந்தத் தகவல்கள் சென்று சேர்ந்தால் போதுமானது என்பதற்காக மட்டுமே.

ஜோதிஜி said...

நண்பர் ராஜநடராஜனும் பதிவுலகில் பட்டாபட்டியைப் போலத் தன்னை கடைசி வரைக்கும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர். கடைசி சமயத்தில் அதுவும் இறந்த பின்பு தான் பட்டாபட்டியின் முகம் அனைவருக்கும் தெரிந்தது.


ராச நடராஜனும் தன்னைப் பற்றி, தன் வாழ்க்கை குறித்து எந்த இடத்திலும் எழுதியதில்லை. அவர் முகம் கூட எப்படி இருக்கும் பெரும்பாலான நண்பர்களுக்குத் தெரியாது. எழுதுவது மட்டுமே எனது குறிக்கோள் என்பதாக ராஜநடா வாழ்ந்து முடிந்தாலும் இவரின் மறைவை இன்னமும் சிலரால் நம்ப முடியாததாக இருப்பதாலும் ராஜநடராஜன் என்பவர் யார்? இறுதி அஞ்சலி நிகழ்வில் நான் உணர்ந்து கொண்ட பல விசயங்களை இங்கே எழுதி வைப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.


சில இடங்களில் அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில விசயங்களை எழுத விரும்புகிறேன். இது ஏன்? தேவையில்லையே? என்று நீங்கள் நினைக்கக்கூடும். நிச்சயம் அது அவசியம் என்று எனக்குத் தோன்றுகின்றது. அதை முழுமையாகப் படித்து முடியும் போது உங்களுக்கு அதன் காரண காரியம் விளங்கக்கூடும்? இப்படியும் ஒருவரால் வாழ முடியுமா? என்று எண்ணக்கூடும்.

ஜோதிஜி said...

2009 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நான் வேர்ட்ப்ரஸ் வாயிலாக எழுதத் தொடங்கிய போதும், அதனைத் தொடர்ந்த சில மாதங்கள் வரைக்கும் மற்றவர்களும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தளத்திற்கும் நாம் செல்ல முடியும் என்பதே எனக்குத் தெரியாமல் இருந்தது. நண்பர் நாகா மூலம் ப்ளாக்கர் அறிமுகமான பின்பு அதில் எழுதத் தொடங்கியதும் 2010 ஆண்டு தான் மற்ற தளத்திற்கும் அதிக அளவு செல்ல முடிந்தது.
படிப்படியாகக் காத்திரமான விசயங்கள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் குறிப்பாக ஈழம் சார்ந்த வரலாறு, அரசியல் என்று எழுதி மற்றவர்களைக் கவனிக்க வைத்த போது தான் பல நண்பர்கள் அறிமுகமானார்கள். ஒவ்வொருவரும் இயல்பாக உள்ளே வந்தவர்கள். அதில் ஒருவர் தான் ராஜநடராஜன்.


அடுத்தடுத்த வருடங்களில் தனிப்பட்ட மின் அஞ்சல்கள் மூலம் பலரையும் போலவே அவரும் என் உள்வட்டத்தில் இருக்கக்கூடிய நண்பராக இருந்தார். அலைபேசி வாயிலாகப் பலமுறை பேசியுள்ளார். ஒரு முறை வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று கூட அவர் இறந்த தகவலைச் சொன்ன போது குழந்தைகள் சரியாக குவைத்தில் இருந்து சாக்லேட் கொண்டு வந்தாரே? அவரா? என்றனர்.


காரணம் இவர்களைப் பொறுத்தவரையில் கனடா, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் என்று அந்தந்த நாட்டு சாக்லெட் வைத்து என் வலைப்பதிவு நண்பர்களை அடையாளம் வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு வெளிநாட்டு நண்பர்கள் யாரோ ஒருவர் எங்கள் வீட்டுக்குத் தேடி வந்து கொண்டே இருந்துள்ளனர்.


ராஜநடராஜன் வீட்டுக்கு வந்த மூன்று நிமிடங்கள் கூட தங்கவில்லை. பொருட்களைக் கொடுத்து விட்டு திருப்பூரில் இருந்த உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். அதன் பிறகு பலமுறை பேசியுள்ளார். பல மின் அஞ்சல் வாயிலாக பலதரப்பட்ட தொழில் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்த தகவல்கள் மற்றும் ஆர்வம்.

ஜோதிஜி said...

இவரின் சொந்த ஊர் கோவை என்பதும் வாழ்வது குவைத்தில் என்கிற அளவுக்கு மட்டுமே தெரியும். அவரின் தனிப்பட்ட விசயங்களைப் பகிர்ந்ததும் இல்லை. நானும் கேட்டதும் இல்லை. அவரின் உருவம் என் அனுமானப்படி 45 வயதுக்கு அருகே இருக்கும் என்றே கணித்து வைத்திருந்தேன்.

சிலமுறை குவைத்தில் இருந்து பேசும் போது பசங்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. இருங்க நான் என் அறைக்கு வந்து பேசுகிறேன் என்று சொல்லியுள்ளார். எத்தனை பசங்க? என்று நான் கேட்டதில்லை.

ஆனால் ராஜநடராஜனின் வயது 63 என்பதே மயானத்தில் அவர் தங்கையின் கணவர் சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. யோகா, உடற்பயிற்சி மூலம் தனது ஆரோக்கியத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு மாரடைப்பு என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஜோதிஜி said...

சாவு என்பது எனக்குப் புதிதல்ல. நேற்று நிறுவனத்தில் பேசிக் கொண்டிருந்தவர் இன்று இறந்து விட்டார் என்பதில் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு முன் பேசி விட்டுச் சென்றவன் விபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே இறந்து விட்டான் என்பது வரைக்கும் பல நூற்றுக் கணக்கான மரணங்களை நேரிடையாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் ஒரு உரையாடல் முடிவடைவதற்குள் பதிவுலகில் ஒருவர் இறந்து விட்டார் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நந்தவனத்தான் சொன்ன நிலையாமை தத்துவம் தான் நினைவில் வந்து போனது.

ஜோதிஜி said...

2015 டிசம்பர் 30ந் தேதி மதியம் 11 மணிவாக்கில் அவரின் கடைசி பதிவு என் கண்ணில் எதார்த்தமாகப் பட, குறிப்பாக அரசியல் பதிவாக இருக்க உரையாடலை வளர்க்க நண்பர் நந்தவனத்தை அழைத்தேன். மின் அஞ்சல் வாயிலாக வருகின்ற விமர்சனங்களை வரவழைக்க மறந்த காரணத்தால் இரண்டு நாள் கழித்து என்ன யாருமே வரலையா? என்று வர அங்கு அதகளம் ஆரம்பித்து இருந்தது.

இரண்டு முறை பதிவு போல எழுதிப் போட முயற்சிக்க என்ன காரணத்தினாலோ அதை ஏற்றுக் கொள்ள மறுக்க எழுதியதும் காணாமல் போய்விட்டது. பிறகு எழுதுவோம் என்று அமைதியாய் இருந்து விட திடீரென்று ராஜநடராஜனின் உறவினர் பையன் பின்னூட்டத்தில் தெரிவித்த தகவல் நெஞ்சில் குத்தீட்டியாய் இறங்கியது. தகவலை உறுதிப்படுத்த அழைத்த எண் அவரின் தங்கை கணவர் மூலம் உண்மை என்று தெரிந்தது.

ஜோதிஜி said...

2016 ஜனவரி 2ந் தேதி தற்போது பணியில் இருக்கும் நிறுவனத்தில் காலை 11 மணி அளவில் ராஜநடராஜனுக்கு மாரடைப்பு வந்துள்ளது. அலுவலகத்தில் இருந்து மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அதன் பிறகு அவசரமாக (நிலைமை மோசமாக இருந்தகாரணத்தால்) அறுவை சிகிச்சையை தொடங்கியுள்ளனர். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது மூளையின் செயல்பாட்டில் பிரச்சனை தொடங்கியுள்ளது. மேலும் தடுமாற்றம் உருவானது. அது பக்கவாதமாக மாறி மூளை செயல்பாடு கோமா நிலைக்குக் கொண்டு சேர்த்துள்ளது. சரியாக குவைத் நேரப்படி டிசம்பர் 02 11 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது.

ஜோதிஜி said...

ராஜநடராஜன் அப்பா ராஜமாணிக்கம் வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றியவர். அங்கே தான் இவர் பிறந்தார். தொடக்கப்பள்ளி படிப்பை அங்கே முடித்து விட்டு மேல்நிலைப் பள்ளி படிப்பை தாராபுரம் அருகே உள்ள அம்பலிக்கை என்ற இடத்தில் விடுதியில் தங்கி படித்துள்ளார். இளங்கலை கேட்டரிங் படிப்பைச் சென்னையில் முடித்தவுடன் சென்னையில் உள்ள கன்னிமாரா நட்சத்திர உணவுவிடுதியில் தனது பணியைத் தொடங்கியுள்ளார். அவர் உழைப்பு பம்பாயில் உள்ள கன்னிமாராவிற்கு நகர்த்தி உள்ளது. அங்கே இருந்து குவைத்திற்கு (1987)கொண்டு வந்து சேர்த்துள்ளது.

ஜோதிஜி said...

இதில் ஆச்சரியப்படக்கூடிய விசயம் என்னவென்றார் குவைத்தில் போர் நடந்து கொண்டிருந்த போது நாட்டுக்குத் திரும்பாமல் நிர்வாகம் எதிர்பார்த்தபடி பாதாள அறையில் ஆறு மாதங்கள் உறவுகள் தொடர்பின்றி ராணுவத்திற்கு என்ற செய்ய வேண்டிய கடமைகளை துணிச்சலாகச் செய்து உள்ளார்.

இரண்டு குழந்தைகளுடன் விவகாரத்து பெற்ற கேரள பெண்மணி (இவர் அங்கே அழகுக்கலை சார்ந்த பியூட்டி பார்லர் தொழில் இருக்கின்றார்) யை மணந்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் ராஜநடராஜனை மருத்துவமனையில் சேர்த்தது முதல் ஒவ்வொரு நிகழ்வையும் மனைவி வாட்ஸ் அப் மூலம்இங்குள்ள உறவுகளுக்குத் தொடர்ச்சியாக தெரியப்படுத்திக் கொண்டே இருந்துள்ளார். மனைவியின் குழந்தைகளையே கடைசிவரைக்கும் தன் குழந்தை போலவே பார்த்து வந்துள்ளார்.

ஜோதிஜி said...

தன் உழைப்பு தன் வருமானம் என் அனைத்தையும் உறவுகள் சார்ந்த அனைவருக்கும் பாரபட்சம் இன்றி செலவளித்து அனைவரையும் சந்தோஷப்படுத்தியதை ஒவ்வொருவரும் மயானத்தில் வைத்து சொன்னதைக் கேட்ட போது வியப்பாகவே இருந்தது.


எழுத்தில் முற்போக்குவாதியாய் இருப்பது எளிது. ஆனால் இவர் வாழ்க்கை முழுக்க தான் நினைத்தபடியே முற்போக்கு வாதியாகவே வாழ்ந்துள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லை. எவ்விதமான கெட்டபழக்கமும் இல்லை. ஆடம்பரம் என்பது அறவே இல்லை. எப்படியாகினும் சொந்த தொழில் மூலம் இந்தியாவில் குறிப்பாக சென்னை அல்லது கோவையில் இறுதிக்காலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்கை மகன் மூலம் பல காரியங்கள் செய்து வந்துள்ளார்.

ஜோதிஜி said...

கேட்டரிங் துறையில் இருந்த போதிலும் தன்முனைப்புடன் கணினி சார்ந்த தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டு தோஷிபா நிறுவனத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். அங்கு பணிஓய்வு பெற்றதும் (ஒரு வருடத்திற்குப் பிறகுதான் )இப்போது எண்ணெய் வர்த்தகம் தொடர்பான நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக மார்க்கெட்டிங் பரிவில் பணியாற்றி வந்துள்ளார். ஆங்கிலம், ஹிந்தி, அரபி, உருது மொழியைப் பேச கற்றதோடு கடைசி நாள் வரைக்கும் உழைப்பு ஒன்றையே தனது ஆயுதமாகக் கொண்டவருக்கு தன் உடல் நலம் குறித்த அக்கறையைத் தள்ளி வைத்தது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஜோதிஜி said...

காரணம் சென்ற வருடம் மருத்துவர் இவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதயம் சார்ந்த நோய்கள் தாக்கக்கூடும். கவனமாக இருங்கள் என்பது தான். அப்போது கூட 70 வயது வரைக்கும் இருந்தால் போதுமானது தான் என்ற நம்பிக்கையுடன் அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த அது கடைசியில் இப்படிக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

ஜோதிஜி said...

ஜனவரி 7 2016 காலை 4.10 மணிஅளவில் கோவை விமான நிலையத்தில் அவர் உடல் வந்து சேர்ந்தது. ஏறக்குறைய ஐந்து நாட்கள் பதப்படுத்த உடல். மயானத்தில் வைத்து அவர் முகத்தைப் பார்த்த போது எந்தச் சலனமும் இல்லை. தூங்குவது போலத்தான் இருந்தார். அந்த அளவுக்கு குவைத் அரசாங்கம் நேர்த்தியாக தங்கள் கடமையைச் செய்து உள்ளனர்.
இதனைப் பற்றி அவர் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளார்.

http://parvaiyil.blogspot.in/2012/08/blog-post.html

ராஜநடராஜனின் மருத்துவமனை முழு அறிக்கையை உறவினர்கள் வாயிலாக தெரிந்து கொண்ட போது இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பதும் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருந்தது.

ஜோதிஜி said...

இத்தனை தாமதத்திற்குக் காரணம் அவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க நண்பர் அலுவலகத்தில் கொடுத்த விசயத்தை மனைவியிடம் சொல்லவில்லை. இதன் காரணமாக அரசாங்க நடைமுறைகள் தாமதம் ஆகி உள்ளது. அதன் பிறகு அவர் அலைபேசியில் தேடிப்பார்த்த போது அதுவும் கடவுச்சொல் மூலம் மூடி வைக்கப்பட்டு இருக்கக் கடைசியாக தொழில்நுட்ப நண்பர்கள் மூலம் அதை உடைத்துக் குறிப்பிட்ட நண்பரை அடையாளம் கண்டு இவரின் கடவுச்சீட்டை பெற்று உள்ளனர். அதன் பிறகே அரசாங்க நடைமுறைகள் தொடங்கியுள்ளது.

ஜோதிஜி said...

கோவைக்கு நான் போய்ச் சேர்ந்த போது காலை 9.30 மணி. காந்திபுரத்தில் இருந்து அவர் வீடு இருக்கும் இடமான கணபதி மாநகர் போய்ச் சேர்வதற்குள் நாலைந்து முறை அழைப்பு வந்த போது எனக்குப் புரிந்து விட்டது. நிச்சயம் முகத்தைப் பார்க்க முடியாது என்றே நினைத்தேன். அதற்குள் அவர் தங்கை கணவர் இடையில் இறங்கச் சொல்லி பைக் அனுப்பி சுடுகாட்டுக்கு வரவழைத்தார். ராஜநடராஜன் விருப்பப்படியே அவர் அம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே புதைக்கச் சொல்லி இருக்க அதன்படியே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனவரி 7 2016 காலை 10.30 to 11.00 மணி

ஜோதிஜி said...

அவரிடம் ஒரு முறைபோராடி புகைப்படம் வாங்கி அவர் பதிவை திருப்பூரில் இருந்து செயல்பட்ட தொழிற்களம் என்ற அமைப்பின் மூலம் அறிமுகம் செய்து வைத்தேன். அவரின் முகம் பார்க்க இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.

http://thozhirkalamseo.blogspot.in/2012/09/blog-post_4573.html

ஜோதிஜி said...

கடைசி வரை துளி அதிர்ஷ்டம் கூட எந்த இடத்திலும் இவர் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கவில்லை. கடைசி வரையிலும் தன் உழைப்பின் மூலம் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்துள்ளார். எவர் மீதும் கடைசி வரைக்கும் வெறுப்பைக் காட்டியதே இல்லை. குடும்ப சொத்து காரணமாக உருவான பிரச்சனையில் உள்ள மூத்த சகோதரரை எளிதில் மன்னித்து இயல்பாக எடுத்துக் கொண்டுள்ளார். தன் உழைப்பு, கிடைத்த பலன் அனைத்தையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கே கடைசி வரைக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். நடந்த பல சம்பவங்கள் மூலம் மதம், சாதி, கடவுள் போன்ற மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பித்துக்களை கடந்து நேசிப்பு ஒன்றையே தன் வாழ்நாள் தத்துவமாக கொண்டு வாழ்ந்துள்ளார். இவருக்கு என் கண்ணீர் அஞ்சலி என்பதை விட கம்பீரமான அஞ்சலியைத் செலுத்துகிறேன்.

ஊமைக்கனவுகள் said...

வணக்கம்.
ஒரு நல்ல மனிதரின் அறிமுகம் அவர் இறப்பில் மூலம் கிடைப்பது என்பது எத்துணை துயரமானது..?

அன்பின் தொடுதல்கள் வழிகின்ற எழுத்தில், அவர் பதிவுகளில் இருக்கும் அவரைத் தொடர்கிறேன்.

நன்றி திரு. வருண் அவர்களுக்கும், திரு. ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கும்!

வருண் said...

Lots of surprises, I should say. I must confess I estimated his age correctly in the beginning but later for some reason I thought was younger that what he really was. I never thought he never revealed himself to anybody carefully and purposefully! He had a completely different "image" in the blog world. Well..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜோதிஜி சார் ராஜ நடராஜனின் வலைப்பக்கம் அதிகம் சென்றதில்லை.வவ்வால் வலைப்பதிவில் பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.ஒரிரு முறை என் வலைபதிவுக்கு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் மனதை உருக வைக்கிறது. அவர மீதான மரியாதையை அதிகரித்துள்ளது.
ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்கிறேன்.

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி மற்றும் வருண் அவர்கட்கு எனது வணக்கங்கள். வலையுலகில் எப்பொழுதாவது சந்தித்துவிடவேண்டும் என்று ஆவல்கொண்ட நபர்களில் ராஜநடராஜனும் உண்டு.

அவருடைய பதிவுகள் தொடர்ச்சியாக அவருடைய வலைதளத்தில் வெளிவந்தபொழுது என்ன..வழக்கத்திற்கும் மீறி அடித்து ஆடுகிறாரே என்று நினைக்கத்தோன்றியது.

அது இதற்காகதான் போல...

அவருடைய எழுத்துகளின் மூலமே எனக்கு அறிமுகம்.எல்லோரும் அவரை இழந்தாலும் அவரது எழுத்துகள் அவரை வாழவைக்கும்.

Amudhavan said...

ஜோதிஜியின் முழுத் தகவல்களையும் படித்த பிறகு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு பெருமூச்சுதான் பதிலாக வருகிறது. போய் வாருங்கள் ராஜ நடராஜன், பை!

செங்கோவி said...

பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க, மனது கனக்கிறது.

ஜோதிஜி said...

சரியாக குவைத் நேரப்படி டிசம்பர் 02 11 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது.

நண்பர்கள் வாசிக்கும் போது ஜனவரி 02 2016 இரவு 11 மணிஅளவில் உயிர் பிரிந்துள்ளது என்பதாக புரிந்து கொள்ளவும்.

Angel said...

மனம் கனத்து போனது :( .. என்ன சொல்வதென்றே தெரியலை சகோ ஜோதிஜி ...இத்தனை நாட்கள் ஒரு நல்ல மனிதருடன் பழகாமல் விட்டோமே என்று வருத்தமாக இருக்கு .ஒரு சிறு அருமை பகிர்வுக்கு நன்றி என்ற வார்த்தைகள் கூட அவருக்கு பின்னூட்டத்தில் தரவில்லையே நான் :(
செங்கோவி ரெவரி வவ்வால் வருண் அனைவர் பின்னூட்டத்திலும் பார்த்திருக்கிறேன் இவரை ..இவரது அருணாசலம் முருகானந்தம் பதிவை பற்றி வாசித்து சிலாகித்திருக்கேன் ..
மிக அருமையான மனிதரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தர இறைவனிடம் பிரார்த்திப்போம் .

வேகநரி said...

தவறுவின் வலைதளத்தில் எனக்கு 2016 புத்தாண்டு வாழ்த்துக்கள் இரண்டு வேறு பதிவுகளில் ராஜநடராஜன் சொன்னார்.
மகிழச்சியாக விளையாட்டு அரங்கம் நோக்கி விளையாட வரும் ஒரு சர்வதேச விளையாட்டு வீரன் போல் தான் ராஜநடராஜன், பதிவு எழுதும் போதும் சரி, பின்னோட்டத்திற்கு பதில் தரும்போதும் சரி வருவார். தேர்தல் வருவதால் பல சுவையான பதிவுகள் இந்த வருடம் எழுதுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.
திரு.ஜோதிஜி திருப்பூர் சொன்ன மாதிரி நேசிப்பு ஒன்றையே தன் வாழ்நாள் தத்துவமாக கொண்டு வாழ்ந்தவர் ராஜநடை.ஜாதி வெறுப்பு ராஜநடையிடம் கிடையாது. உண்மையான பகுத்தறிவாளாரக வாழ்ந்தார். மற்றவர்கள் சொல்லும் தனது எதிரான கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் உண்மையான ஜனநாயகவாதிக வாழ்ந்தார் ராஜநடை.வவ்வாலும் தனது பதிவில் பின்னோட்டமிட வரவேண்டும் என்று மிகவும் விரும்பினார்.
தகவல்களுக்கு திருஜோதிஜிக்கு நன்றி.

யாழ் Yazh said...

மனம் கனத்து போனது,ஆழ்ந்த இரங்கல்கள்!

reverienreality said...

Thanks Jothiji...He was always positive and had immense confidence in his ability to come out unscathed in any adverse situation...May his soul rest in peace...

boopathy perumal said...

பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க, மனது கனக்கிறது.

இரா. செல்வராசு (R. Selvaraj) said...

வருத்தும் செய்தி. திரு. ராஜ நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி. அண்மையில் தொடர்பிலில்லை எனினும் நான்கைந்து ஆண்டுகள் முன் பதிவுகள் பின்னூட்டங்கள் வாயிலாய்ச் சில முறை உரையாடியிருக்கிறோம். அவரது இழப்பில் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்.

? said...

வவ்வாலுக்கும் ராசநட அவர்களுக்கும் நடந்த உரையாடல்களை கொண்டு ராசநடவுக்கு 40 வயதுக்கும் குறைவு என்றுதான் எண்ணியிருந்தேன், ம். பார்ப்பனியத்தை எதிர்த்து முக்கி முக்கி இணையத்தில் எழுதிவிட்டு உண்மையில் சுயசாதி வெறியராக இருப்போர் மத்தியில் உண்மையான முற்போக்குவாதியாக வாழ்ந்தே இருக்கிறார். இதற்காகவே அவர் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர். யாரையும் காயப்படுத்த மாட்டார். சில முரட்டு பதிவர்கள் அவரை கடித்து வைத்த போதிலும், வருத்தப்படுவாரே ஒழிய, குழாயடி டைப் சண்டையில் இறங்க மாட்டார். மேலும் அவருக்கு இருந்த கருந்து சுதந்திரம் மீதான அசாத்திய நம்பிக்கை காரணமாகத்தான் இந்த பின்னூட்டங்களையே போட முடிகிறது. இந்த அற்புதமான மனிதருக்கு அஞ்சலி பின்னூட்டங்கள் எழுதிய அன்பர் ஜோதிஜிக்கு மிகவும் நன்றி.

எனது நெருங்கிய உறவினர் இறந்த போது ஏற்படாத ஒரு துக்கம் முன்பின் சந்தித்திராத ராசநடவின் மரணத்தில் ஏற்பட்டது ஏன் என யோசித்திருந்தேன். ஜோதிஜி அவர்களின் பின்னூட்டம் படித்த பின்பு விளங்கியது. நாங்கள் மூவரும் உரையாடிக்கொண்டிருந்த போது தீடீரென மறைந்து ஒரு தீராத வடுவை ஏற்படுத்திவிட்டார். பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

வருண் said...

RAJA nATARAJAN had written this in this blog..

****தமிழக பயணித்தின் போது பதிவுலகில் பவனி வரும் பதிவர்களை ஒரே இடத்தில் பதிவர்கள் கருத்தரங்கம் மாதிரி எங்காவது சந்தித்து விட இயலுமா என்று எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஈரோடு சங்கமம் பற்றி பதிவர் பழமைபேசி குறிப்பிட்டும் 26 ஜனவரி நிகழ்ந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதபடி 27ம் தேதி ஜனவரி பயணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை.இருந்தும் கிடைத்த நேரம்,சமூக பார்வையாளர்கள் என்ற ரீதியில் பதிவர் வானம்பாடிகள் பாலா, செந்தில், கும்மி, உண்மைத்தமிழன், வால்பையன், ஜோதிஜி என சில பேரை சந்திக்க முடிந்தது.****

****உண்மைத்தமிழன் said...

மிகவும் வருந்துகிறேன். இப்போதுதான் வருண் மூலமாகச் செய்தியை அறிந்தேன். ஆரம்பக் காலத்தில் நான் எழுதும் ஒவ்வொரு அரசியல் பதிவுக்கும் வந்து பின்னூட்டம் இடுவார். அரசியல் பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம்.. பேசியிருக்கிறோம்.. என்னை உற்சாகமூட்டியவர்.. கடைசிவரையிலும் முகத்தைக்கூட காட்டாமல் போய்விட்டாரே..?

அவருடைய குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்..!

January 8, 2016 at 8:42 PM***

He forgot that he met him or what! Many of these guys he met did not even show up to say few words about him?? Beats me!!!

வருண் said...

Sunday, June 12, 2011
தமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்
அப்பா பெயரின் துவக்கமும் எனது பெயரும் இணைந்தே ராஜ நடராஜன் என தமிழ் மணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எழுதி வருகிறேன்.பதிவின் எண்ணிக்கைகளையும்,ஹிட்,பின்னூட்டங்கள் என்றில்லாமல் நட்புடன் கருத்துரையாடல் என்ற நிலையிலே பதிவுகளை இட்டு வருகிறேன்.நான் தற்போது குவைத்தில் பணி நிமித்தமாக தொசிபா மடிக்கணினி விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.பதிவுகளை விட வாசிப்பிலும்,பின்னூட்டங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால் பதிவுகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.யாதும் பதிவே!யாவரும் கருத்துரிமையாளர்களே என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்ற போதிலும் மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். எனது பதிவின் பார்வையாக கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும் என சுருக்கமாக முகப்பில் சொல்லியிருக்கிறேன்.
(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))

http://parvaiyil.blogspot.com/2011/06/blog-post.html

ஏகாந்தன் ! said...

பதிவர்கள் டி.என்.முரளிதரன், வருண் ஆகியோரின் பக்கங்களின் மூலமாக திரு. ராஜநடராஜன் அவர்களின் மறைவு பற்றி அறிந்தேன் இன்று. அவரது `பார்வையில்`பக்கம் சென்று அவரது சில முந்தைய பதிவுகளை முதன்முறையாகப் படித்தேன். தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை, நன்றாக அவதானித்து எழுதியுள்ளார். மிகவும் உத்வேகத்துடன் எழுதிய பதிவராக, தனிக்கருத்துடையவராகத் தோன்றுகிறார். இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருந்து எழுதியிருக்கமாட்டாரா என எண்ணத்தோன்றும் எழுத்து.

இறைவன் அருளால், அன்னாரின் ஆத்மா சாந்தி அடையுமாக. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-ஏகாந்தன், டெல்லி.

suvanappiriyan said...

எனது பழைய பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு கருத்துக்களை பதிந்து வருவார். அவரது எழுத்தை வைத்து அவர் மென்மையானவர் என்று ஊகித்திருந்தேன். ஜோதிஜி திருப்பூர் அவர்களின் பின்னூட்டம் மூலம் அதை உறுதி செய்து கொண்டேன்.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.