சென்ற முறை சேனல் 4 காணொளியையும்,ஐ.நா மூவர் குழு அறிக்கையையும் ராஜதந்திர ரீதியாகவும்,தூதரக கடித பரிவர்த்தனைகள் மூலமாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் அதே போல் இந்த முறையும் வெற்றி கொள்வோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.இது ஓரளவுக்கு உண்மையாக கூட இருக்கலாம்.காரணம் ஐ.நா வாக்கெடுப்பில் சீனா,ரஷ்யா, இந்தியா இன்னும் பல நாடுகளின் உதவியோடு வாக்கெடுபபு இலங்கைக்கு சாதகமாகவே மாற்ற முடிந்தது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை என்று ஒப்புக்கு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி ஐ.நா.மூவர் குழு அறிக்கையை பின் தள்ளியது என்பதும் உண்மை.
சென்ற முறை ரஷ்யா,சீனாவின் வீடோ அதிகாரத்தின் மூலம் தன்னை பாதுகாத்துக் கொண்டது போல இந்த முறை ஐ.நா மனித உரிமைக்குழுக்களின் கூட்டம் மூலமாக வெற்றி கொள்வதற்கான சூழல்கள் இல்லை என்பதற்கான இரண்டு காரணங்கள் உண்டு.முதலாவதாக சேன 4 காணொளியும் இரண்டாவதாக இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி இலங்கை மீதான தீர்மானம்.
இந்த முறை சேனல் முக்கிய மனித உரிமை மீறல்கள் என்று இலங்கை அரசை நேரடியாகவே போர்க்குற்றம் சுமத்துகிறது சேனல் 4.. விவரிப்பாளர் ஜான் சுனோவின் ஆங்கில மொழி நடைக்கும்,காணொளிக்கும் சவால் விடுகிறேன் என இலங்கை அரசு மாலினி என்ற பெண்ணின் ஆங்கில வர்ணனையோடு Lies agreed upon என்ற காணொளியை வெளியிடுகிறது.மனித உரிமை மீறல்கள் எதுவும் நிகழவில்லையென போரில் தப்பித்த தமிழ்ப் பெண்கள் சிலரின் வாக்குமூலமாக இலங்கை ராணுவத்தினர்கள் தேவதூதர்கள் எனகின்ற மாதிரியும்,சேனல் 4 ன் முதல் காணொளியில் சாட்சியம் தந்த வாணி குமார் பற்றி முன்னாள் போராளி என்ற சகோதர இளைஞர் ஒருவர் கருத்தும்,கிறுஸ்தவ ஆலயத்தை விடுதலைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்று ஒரு இளம்பெண்ணும் சொல்வதை எதிர் வாதமாக இலங்கை அரசு முன் வைத்தது.விவரணையாளர் மாலினி சேனல் 4 ன் சாட்சியங்களின் முகம்,இடம்,குரல் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்கிறார்.அதற்கான காரணம் என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை/ஏனென்றால் இலங்கையின் வெள்ளை வேன் கலாச்சாரம்,மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் முதன்மையான இடம் இலங்கைக்கு என்று என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை தொடர்ந்த தமிழக கட்சிகளின் ஒன்றுபட்ட குரல்களையும்,பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்த தி.மு.க,அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்தனர்.
இந்த முறை அ.தி.மு.க ஒரு பக்கம்,தி.மு.க மறுபக்கம் மற்றும் திருமாவளவன், தனி மனிதனாக என்று பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்யுமளவுக்கு ஈழப்பிரச்சினையைக் கையாண்டார்கள் என்ற போதிலும்,கலைஞர் கருணாநிதியும பதவி விலகல்,மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல், உண்ணாவிரதம் போன்ற அழுத்தங்கள் கொடுக்க தயாரானது I am still in the game என்பதையே உணர்த்துகிறது.
இவை அனைத்தும் தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் செயல் என்றாலும் நிகழ்ந்தவைகளை விமர்சனம் செய்யவோ,சூதுகள்,இழப்புக்கள்,நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகளை நம்மால் இனி ஒன்றும் செய்து விட முடியாது.மாறாக இனி வரும் நிகழ்வுகளை மாற்றும் சக்தி அல்லது இன்னும் இயலாமை என்ற நிலையில் மட்டுமே இனி நாம் செயல்பட முடியும்.தவறுக்கு பிராயச்சித்தம் என்கிற சொற்பதங்கள் எல்லாம் இது மாதிரியே உருவாகியிருக்குமோ?
இனி அமெரிக்காவின் இலங்கை நிலைப்பாடு என்ன என்பதை இலங்கையின் அமெரிக்க தூதர் Patricia Butenis என்ன சொல்கிறார் என்பதை கூர்ந்து கவனித்தால் இலங்கை மீதான அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கை என்ன என்பதை உணர முடியும்.
http://dbsjeyaraj.com/dbsj/archives/4610
இந்த பதிவை வெளியிடும் இந்த தருணத்தில இலங்கையின் மங்கள சமரவீர தனது உரையை முடித்துக்கொண்ட பின் ஈகுவேடர், ரஷ்யா, உருகுவே, தாய்லாந்து,நைஜீரியா,பிலிப்பைன்ஸ்,உகாண்டா,மால்தீவுகள்,இந்தோனேசியா,பங்களாதேஷ்,மெக்சிகோ,அங்கோலா என தீர்மானம் குறித்த தமது கருத்தை முன் வைத்தன.இவைகளில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் அணிசேரா நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையை ஆதரிக்கின்றன.பிடல் காஸ்ட்ரோ என்றும், செகுவாரா என்றும் தேச எல்லைகள் கடந்து புரட்சிகளில் பெருமிதம் பட்டுக்கொண்ட நாம் கியூபாவின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக இலங்கை சார்பாக செயல்படும் விதமாக இலங்கை தனது நண்பன் என்றும் தீர்மான வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறும் வேண்டுகோளை விடுக்கிறது.
தேர்வு சுற்றுக்கு விடப்பட்ட அறிக்கையின் படி
அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு 24
இலங்கைக்கு ஆதரவாக 15
மதில் மேல் பூனை 8
பதிவின் அவசரம் கருதி இத்துடன் முடித்துக்கொண்டு இனி இலங்கை என்ன செய்யலாம் என்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை அடுத்து காணலாம்.