Followers

Thursday, June 24, 2010

இதுக்குப்பேரு விளையாட்டு.

இன்றைய தினத்து கால்பந்தாட்டத்தில் D பிரிவில் ஒரு பக்கம் கானாவும் ஜெர்மனியும்,இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவும் செர்பியாவும் ஆட்டத்தை துவங்கினார்கள்.இரண்டு ஆட்டங்கள் ஆடி முடித்திருந்த நிலையில் பிரிவின் வரிசைப்படி

கானா - 4
ஜெர்மனி - 3

செர்பியா - 3
ஆஸ்திரேலியா -1

என்ற நிலவரத்தில் புள்ளிகளை எடுத்திருந்தது.நான்கு பேருக்குமே மூன்றாவது ஆட்டத்தை வெற்றி பெற்றால் மட்டுமே கால் இறுதிக்குள் நுழையும் சாத்தியம் இருந்தது.இரு ஆட்டங்களும் ஒரே நேரத்தில் துவங்கியதால் சேனலை இரண்டு பக்கமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது.இதில் ஆஸ்திரேலியா V செர்பியா துவக்கம் முதலே சூடு பிடித்ததால் எப்படியும் ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் அந்தப் பக்கம் போவதை நிறுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய செர்பிய விளையாட்டில் கவனம் செலுத்தினேன்.ஆட்டத்தின் வேகம்,கோல் போடும் முயற்சியில் இரு அணிகளின் அபாரமான விளையாட்டு What a game man! என கத்தும்படியாக இருந்தது.இரண்டாம் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 கோல்கள் போட்டு கால் இறுதிக்கு தகுதியாகும் போல் இருந்தது.செர்பியா 1 கோல் போட்டு இன்னொரு கோல் போடுவதற்கு முயற்சி செய்து பலனில்லாமல் போனது.

எனவே யார் கால் இறுதிக்குப் போவார்கள் என்று FIFA கிட்ட கேட்டால் ஜெர்மனி V இங்கிலாந்து மோதும் என்றும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியா பின் நிற்பதால் ஆட்டத்தை வென்றும் அடுத்த கட்டத்துக்குப் போக இயலாது என்று சொல்லி விட்டது.பதிலாக கானா V அமெரிக்கா முட்டிக் கொள்ளும் என்று நாட்டாமை தீர்ப்பு சொல்லி விட்டது.

ரிலே பார்க்கும் சந்தர்ப்பம் யாருக்காவது கிடைத்தால் ஆஸ்திரேலியா V செர்பியா ஆட்டத்தை கண்டு களிக்கலாம்.93 நிமிடத்துக்கு ஒரு திகில் படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.ரத்த காட்டேரி எங்கேன்னு நசரேயன் கமெண்ட கூடாது:)

ரெஃப்ரிகளுக்கு நல்லா டோஸ் கிடைச்சிருக்கும் போல இருக்குது,கொஞ்சம் அடக்கு வாசிப்பதாலேயே ஆட்டம் ஆட்டம் போடுகிறது.

8 comments:

ஹேமா said...

சுடச் சுட உதைபந்தாட்டச் செய்திகள்.சொல்பவர் நடா....நடா....நடா !
சொதப்பல் விளையாட்டுக்கு ...!

நசரேயன் said...

நான் ஆட்டைக்கு வரலை

நசரேயன் said...

//சுடச் சுட உதைபந்தாட்டச் செய்திகள்.சொல்பவர் நடா....நடா....நடா !
சொதப்பல் விளையாட்டுக்கு ...!//

இதெல்லாம் போதாது நல்லா திட்டுங்க ஹேமா

Chitra said...

America vs Algeria - Superb match! :-)

ஜோதிஜி said...

இங்கு சில முதலாளிகளின் வீடுகளில் பெரிய திரை வசதி உள்ள தொலைக் காட்சி பெட்டி HOME THEATER வழியாக கால்பந்தாட்டதை பார்க்கும் போது நாமே பந்தாக மாறி விடுவோம் போலிருக்கும். அந்த அளவிற்கு உயிரோட்டமாய் இருக்கிறது. குறிப்பா பச்சை வெளி மைதானம் என்பது கண்களுக்கு குளுமை. உயிர் வெறுத்து ஓடுபவர்களையும் உதைத்து திருப்புவர்களையும் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொள்வதுண்டு.

நட்புக்கு நன்றி நடராஜன்

ராஜ நடராஜன் said...

//சுடச் சுட உதைபந்தாட்டச் செய்திகள்.சொல்பவர் நடா....நடா....நடா !
சொதப்பல் விளையாட்டுக்கு ...!//

எது சொதப்பல் விளையாட்டு?டெஸ்ட் மேட்ச்சு மாதிரி கொட்டாவி விட்டுகிட்டே அமெரிக்கா V இங்கிலாந்து பார்க்கிறதா இல்ல ஜல்லிக்கட்டு மாதிரி பந்து ஒரு இடத்தில் நிற்காம ஆள் மாறி கால் மாறும் செர்பியா V ஆஸ்திரிலேயாவா?ஜெயிக்கிற டீமுக்கு மட்டும் ஜால்ரா போட்டா அது சரியான விமர்சனமாக இருக்குமா:)

ராஜ நடராஜன் said...

//இதெல்லாம் போதாது நல்லா திட்டுங்க ஹேமா//

நசரேயன்!நீங்க ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டு அப்புறமென்ன கோள் மூட்டுற வேலை காண்பிக்கிறீங்க?

ராஜ நடராஜன் said...

//America vs Algeria - Superb match! :-)//

Agreed!
But America VS England Sappa Match:)