Followers

Friday, June 18, 2010

நோஞ்சாண் அணி அமெரிக்கா

இதுவரையில் ஆடிய அணிகளில் வெற்றிக்காக கோல் போடவில்லையென்றாலும் பெரும்பாலாண அணிகள் அதற்கான முயற்சியோடு ஆட்டத்தின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்தே ஆடுகிறார்கள்.

குட்டி நாடான ஸ்லோவேனியாவும்,பெரிய நாடான அமெரிக்காவும் மோதி கோலியாத்தை சாம்சன் வீழ்த்துற மாதிரி ஸ்லோவேனியா முதல் பாதியிலேயே இரண்டு கோல் போட்டு அமெரிக்காவுக்கு தண்ணீர் காட்டுகிறது.இரண்டாம் பகுதியின் முதல் பத்து நிமிடங்களில் பழரசம்,பெப்சி குடித்த உற்சாகத்தில் அமெரிக்கா 1 கோல் போட்டு 2-1 என்ற நிலையில் ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த ஆட்டத்தையும்,அடுத்த ஆட்டத்தையும் வென்றால் மட்டுமே கால் இறுதிக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தகுதி பெறும்.

கைபந்து,அமெரிக்க கில்லி,ரக்பியெல்லாம் ஓரம் கட்டாவிட்டாலும் கூட கால்பந்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது அமெரிக்காவிற்கு பெருமை சேர்க்கும்.முன்பு பெக்கன்பெர் பயிற்சியாளாராக்கியும் கூட முன்னேறங்கள் அதே நிலையிலேயே இருக்கின்றது.

ரஷ்யா,யூகேஸ்லேவியா என்ற வட்டத்துக்கு வெளியே வந்து செர்பியா,ஸ்லோவேனியா போன்றவை களைகட்டுகின்றன.புதிய நாடுகள் தோன்றுவதின் திறன்கள் வெளிப்படுவதற்கு சான்றாக இவை திக்ழ்கின்றன.

9 comments:

vasu balaji said...

மேட்ச் பார்த்துண்டே இடுகையா:))

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

வானம்பாடிகள் said...

மேட்ச் பார்த்துண்டே இடுகையா:))

... :-)

ராஜ நடராஜன் said...

//மேட்ச் பார்த்துண்டே இடுகையா:))//

லைவ்!

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...

மேட்ச் பார்த்துண்டே இடுகையா:))//

2-2 சமன்பாட்டில் அமெரிக்காவின் மூஞ்சி தப்பித்தது.

ஹேமா said...

விடுமுறை நாளும் அதுவுமா விளையாட்டு நல்லா இல்லன்னு சொல்றது கேக்குது நடா.
இன்னும் இருக்குத்தானே !

ராஜ நடராஜன் said...

//விடுமுறை நாளும் அதுவுமா விளையாட்டு நல்லா இல்லன்னு சொல்றது கேக்குது நடா.
இன்னும் இருக்குத்தானே !//

இப்ப 1,இங்கிலாந்துடன் 1 என இரண்டு மார்க்.அடுத்த ஆட்டம்,குழு எண்ணிக்கையின் நிலை பொறுத்தே அமெரிக்காவுக்கு கால் இறுதி சந்தர்ப்பம்.
உங்களுக்கு ஆதரவா ஒரு டிப்ஸ்.

இதுவரை விளையாடிய அணிகளில் Foul play அதிகம் இல்லாமல் ஆடியதற்கு அமெரிக்காவுக்கு பாராட்டு.

Anonymous said...

நைஜிரியா தோத்தது ரொம்பவே கவலையா இருக்கு. நான் நைஜிரியன் டீமுக்கு சப்போட் பண்ணவில்லை என்றாலும் அந்த கோல் கீப்பருக்காகவாது நைஜீரியா வெல்லனும்னு நினைத்தேன். இரண்டு புறமும் டைவடிச்சு டைவடிச்சு தடுத்தது இன்னும் கண்ணில் நிக்கறது. எப்படித் தான் ஒரு பக்கம் பாய்ந்து தடுத்தவர் உடனேயே மறுபுறமும் பாய்ந்து தடுக்க முயற்சி செய்த வேகம். அப்பப்பா. கண்ணில் நிக்கறது. இன்னைக்கு வந்த ரெப்ரி சரியே இல்லை. ஒரு சிவப்பு 6 மஞ்சள் கார்ட் முதல் பாதி ஆட்டத்திலேயே காட்டிட்டார். வீட்ல பிரச்சினைன்னா கிரவுண்டல காட்டுவாங்களா? சைன்னு ஆச்சு.

ராஜ நடராஜன் said...

//நைஜிரியா தோத்தது ரொம்பவே கவலையா இருக்கு. நான் நைஜிரியன் டீமுக்கு சப்போட் பண்ணவில்லை என்றாலும் அந்த கோல் கீப்பருக்காகவாது நைஜீரியா வெல்லனும்னு நினைத்தேன். இரண்டு புறமும் டைவடிச்சு டைவடிச்சு தடுத்தது இன்னும் கண்ணில் நிக்கறது. எப்படித் தான் ஒரு பக்கம் பாய்ந்து தடுத்தவர் உடனேயே மறுபுறமும் பாய்ந்து தடுக்க முயற்சி செய்த வேகம். அப்பப்பா. கண்ணில் நிக்கறது. இன்னைக்கு வந்த ரெப்ரி சரியே இல்லை. ஒரு சிவப்பு 6 மஞ்சள் கார்ட் முதல் பாதி ஆட்டத்திலேயே காட்டிட்டார். வீட்ல பிரச்சினைன்னா கிரவுண்டல காட்டுவாங்களா? சைன்னு ஆச்சு.//

//வீட்ல பிரச்சினைன்னா கிரவுண்டல காட்டுவாங்களா? சைன்னு ஆச்சு.//

அனாமிகா!இப்படியும் இருக்குமோ:)
வீட்டுல இருக்கிற கோபத்தை வாத்தியார் மாணவர்கள் மீது காட்டுவாரே!