Followers

Tuesday, May 8, 2012

எனக்குப் பிடித்த ஜர்னலிஸத்துக்கும் தடா!

முன்பு இரண்டு பதிவுகளில் கொலம்போ டெலகிராஃப் பற்றி சொல்லியிருந்தேன்.ஒன்று கவிஞர் தாமரையின் காணொளி. இன்னொன்று IPKF காலத்தில் ராஜபக்சேவின் கருத்து.யாராவது படிச்சீங்களான்னு தெரியல.முன்பு ராஜபக்சே அரசை விமர்சித்த லசந்த விக்ரமசிங்கேயின் சண்டே லீடர மாதிரி  இலங்கையின் உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஜர்னலிஸ்டிக் கண்ணோட்டம் கொண்ட இன்னுமொரு தளம் கொலம்போ டெலகிராஃப் இலங்கையில் தடா!

ஐ.நா மனித உரிமைக் குழுவின் அமெரிக்க தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்ததை தொடர்ந்து நம்மூர்ல தண்ணியில்லாத காட்டுக்கு பதவி புரொமோசன் செய்கிற மாதிரி தாமராவுக்கு கியுபாவா? பிரேசிலா என்ற பெருசின் கேள்விக்கு போக மாட்டேன் போ என்ற  தாமராவின் மறுப்பு, நம்மூர் நித்யானந்தா மாதிரி பாலியல் குற்றத்துக்கு தண்டனை பெற்ற புத்த பிக்கு தேரா போன்ற செய்திகளையெல்லாம் கொலம்போ டெலகிராஃப் வெளிக்கொண்டு வருகிறது.இதையெல்லாம் விட பின்னூட்டங்களின் பரிமாணம் இன்னும் பல உண்மைகளையும்,விவாதங்களையும் துணிவுடன் முன் வைக்கிறது.

ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்குத்தான் விமர்சனங்கள் பிடிக்காத ஒன்றாயிற்றே!இலங்கை மக்கள் கிணற்று தவளையாக இருக்க வேண்டும், கூடவே பத்திரிகைகள் அரசு ஊதுகுழலாக செய்திக|ள் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் ஜி.எல்.பெருசு! நாட்டில் மும்மாரி பொழிகிறதல்லவா என கேட்க இயலும்.

முந்தைய தொடுப்புக்கள்.

http://www.colombotelegraph.com/index.php/thamarai-on-un-resolution-against-sri-lanka/.


http://www.parvaiyil.blogspot.com/2012/04/blog-post.html


13 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
முன்பெல்லாம் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் பாணி பிரச்சாரம் வில்லன்களால் பயன்படுத்தப்பட்டது.

இபோது தகவல் தொழில் நுட்பத்தில் உண்மையை முர்று முழுதாக் மறைக்க முடியாது என்பதால் பொய் கலந்த் உண்மை,உண்மை கலந்த பொய் என்ற உழப்பும் பிரச்சாரமே எடுபடும்.பெரும்பாலான கான்ஸ்பைரேசி பிரசாரங்கள் இந்த பாண்யில்தான் இருக்கும் ,இதில் உண்மையை பிரித்தெடுப்பது மிக கடினம்.

இன்னும் இராஜபக்சே & கோ இணைய தளத்தை தடை செய்தால் பலன் அளிக்கும் என‌ நம்புவது வேடிக்கைதான்!!!!!!!!!.

அந்த இணைய தளம் அதிக புகழ் பெறும்,நிறையப் பேர் தேடி தேடி அனானி சர்வரில் புகுந்தாவது படிபார்கள். அவ்வளவுதான்.நன்றி

James Anand said...

90களின் ஆரம்பத்தில் உங்களின் தலைவர் என்ன சொன்னார் தெரியுமா?

சிங்களவரும் நாங்களும் சகோதரர்கள், எங்கள் பிரச்சனையை நாங்களே தீர்த்து கொள்வோம். இந்தியா இதில் தலையட கூடாது.

பின் அவரே தந்தை நாடு என்று ஜல்லி அடித்தது வேறு கதை.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!நான் கூட தடுமாறுவேன்.ஆனால் நீங்க தட்டச்சில் எப்பவும் தடுமாறி நான் பார்த்ததேயில்லையே!

நீங்க சொல்வதைத்தான் டெலகிராஃப் தளமும் சொல்கிறது.முகநூல்,Proxy server போன்றவைகளை தடை செய்ய முடியாது.ஆனால் இந்தியாவில் ஹிமாசல பிரதேசத்தில் உபயோகிக்கும் கணினி சதவீதம் கூட தமிழகத்தின் கிராமப்புறங்களில் இல்லை.இப்படியிருக்க இலங்கை பற்றி சொல்லவா வேண்டும்?

ராஜபக்சே காட்டுல மழைதான்:)

ராஜ நடராஜன் said...

எனக்கு கலைஞரைத்தான் தெரியும்!யாருங்க நீங்க வலைஞர்:)

இன்னும் கொஞ்சம் பதிவுகள் தேத்தலாமே?

ராஜ நடராஜன் said...

வாங்க சகோ!ஜேம்ஸ் ஆனந்த்.நலமாய் இருக்கிறீர்களா?

ஜேம்ஸ்!முதலாவதாக நான் தமிழகத்தில் கூட யாருக்கும் தலைவர் என்று சாசனம் எழுதிக்கொடுக்காத நிகழ்வுகளை விமர்சிக்கும் சுதந்திர விமர்சகன் மட்டுமே.1990ம் வருட கட்டத்தில் பிரபாகரன் குறித்த விமர்சனங்கள் எனக்கும் இருந்தன.ஆனால் இப்பொழுது இல்லை.இதனை மனமாற்றம் என்றோ,அல்லது புரிதல்களின் பரிணாம வளர்ச்சியென்றோ கொள்ளலாம்.இல்லை கோத்தபய மொழியில் தமிழன் எல்லாம் புலி சார்பாளன் என்றும் கூட கொள்ளலாம்:)

நீங்கள் ஐந்தாம் வகுப்பிலே அணிந்த உடையையே பருவ வயது வந்த பின்பும் அணிய விரும்புகிறீர்கள்.சரி அப்படியே உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் முந்தைய முறுக்கலான ராஜபக்சேவின் குரலுக்கான கருத்தை பதிவு செய்ய ஏன் மறுக்கிறீர்கள்?

பிரபாகரன் ஜல்லியா கில்லியா என்பது பார்ப்பவர்கள் பார்வையைப் பொறுத்தது.விமர்சனங்களையும் தாண்டி பிரபாகரனின் பெயர் நிலைக்கும்.கூடவே மொழியும்.

அடிக்கடி வாங்க!இன்னும் விவாதம் செய்வோம்.நன்றி.

rajamelaiyur said...

//ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்குத்தான் விமர்சனங்கள் பிடிக்காத ஒன்றாயிற்றே
//

இது உலக பொதுமறை ... ஆட்சி இல்லையனில் இவர்கள் மற்றவர்களை விமர்சிப்பார்கள்

rajamelaiyur said...

இன்று

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1

ராஜ நடராஜன் said...

ராஜா!உங்களுக்கு இன்று முதல் இணைப்பரசன் என்ற பட்டத்தை வழங்கலாமா என நினைக்கின்றேன்.நிறைய தொடுப்பு கொடுக்கிறீங்க.மிகவும் நன்றி.

உலக பொதுமறை திருக்குறளாக இருக்கட்டும்.உலக பொதுகுறை ஆட்சிக்கட்டிலில் அமர்பவர்களாக இருக்கட்டும்.

மம்தா கூட மாறிட்டாங்க தெரியுமா!

தனிமரம் said...

இனவாதம் பேசும் தலைவர்கள் எப்போதும் தான் கடந்த காலத்தில் பேசியதை திரும்பிப்பார்த்த்தில்லை.அது அம்மையார் சந்திரிக்காவுக்கும் பொருந்தும் ராஜபக்சவுக்கும் பொறுந்தும் நாடா அண்ணா.

தனிமரம் said...

ஊர் வாயைவிட் உலையை மூடினால் போதும் என்று ஊட்க்த்தை மூடுகின்றார்க்ள் ஆட்சியாளர்கள்.

ஹேமா said...

நடா...இதுக்கெல்லாம் சரியான கருத்துச் சொல்ல ரதி வந்தால் நல்லாயிருக்கும்.ஆளையே காணேல்ல இப்ப கொஞ்ச நாளா !

ராஜ நடராஜன் said...

வாங்க சகோ.தனிமரம்!நீங்க,துஷ்யந்தன்,மதுரன்,நிரூ,மணி எல்லோரும் சூடாக விவாதம் நிகழ்த்திக்கொண்டிருந்ததால் யாருக்கும் பின்னூட்டங்கள் இடவில்லை.காரணம் தம்புள்ள பிரச்சினையைக் கூட தமிழர்களுக்கு சாதகமாக உருவாக்காமல் மதம் என்ற கோணத்தில் மட்டுமே அனைவரும் பேசுகிறீர்கள்.பதிவுகள் உங்கள் கருத்துக்களை வலியுறுத்தினாலும் பின்னூட்டங்களில் அனைவரும் போட்டு தாளிச்சு விடுகிறீர்கள்.அதிக சூட்டுல கருகுவதை மட்டுமே மிச்சம்.தனியாக ஒதுங்கி நின்று நாட்டாமை செய்து கொண்டிருந்த என்னையும் சந்தேக கேசுல தடாவுல தூக்கிப் போட்டுட்டாங்க:)

இனப்படுகொலையையும்,கலாச்சார அழிவுகளையும் நிகழ்த்திய இலங்கை அரசு இன்று LLRC என்ற முகமூடி போட்டுக்கொண்டு அனைத்தையும் மறந்து விடுவோம் என்கிறது.ஆனால் நமது இஸ்லாமிய சகோதரர்களோ ஒரு துயர நிகழ்வின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்.எனக்கு ஒரு கண்ணுதானே போனது உனக்கு இரண்டு கண்ணும் போய்விட்டதே என்றும் கூட சில மத அடிப்படைவாதிகள் குதுகலிப்பது அவர்கள் இடும் பதிவுகளில் பிரதிபலிக்கிறது.இன்னும் சொன்னால் மதம் பேசுகிறேன் என்று என்னை போலிசு மறுபடியும் பிடிக்குமோ என்ற பயத்தில் எஸ்கேப்:)

இணைய கருத்துக்கள் பரவலாக வருவதற்கு முன்பு என்னோடு பணிபுரிந்த ஈழத்து மண்ணின் வாரிசு மைந்தர்கள் இலங்கையின் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களில் புத்த பிக்குகளின் அரசியல் தலையீடும் ஒன்று என்றார்கள்.பௌத்த மதம் மற்றும் சிங்கள மேன்மை என்ற இரண்டு அடிப்படையில் மட்டுமே சந்திரிகா,ராஜபக்சே அனைவரும் ஆட்சிக்கட்டிலில் உட்கார வேண்டிய அவசியம் இருக்கிறது.இந்த கட்டமைப்பை விமர்சனம் செய்யும் சண்டே லீடர்,கொலம்போ டெலகிராஃப்,ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் ஒன்றாக இணைவோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

ஹேமா!நானும் ஓரிரு முறை எங்கே ரதியை காணோமே என்று நினைத்தேன்.மெயில் ஐடி அறிந்தால் நீங்க தனி மடல் நலம் விசாரிக்கலாம்.