தெரியாமல் கணக்கு பத்தி சொல்லிட்டேனா!ஆளாளுக்கு கணக்குல தப்புக்கண்டு பிடிக்கிறததுக்குன்னே சுத்துறாங்க.அதனால் வடை தீர்ந்து போச்சுன்னு அவசர அவசரமா இங்கே வந்துட்டேன்.முன்னாடியே வவ்வால் தமிழ்மணம் வாலில் தீ வைச்சதால ஒட்டகம் வேகமா ஓடுதேன்னு சிரிச்சார்.இந்த மாதம் 14 பதிவு போட்டுட்டேங்களேன்னு சகோ.ரியாஸ் சொல்லித்தான் எனக்கே ஒட்டகம் வேகமாய் ஓடுவதை உணர முடிஞ்சது.14 உடன் 15 சேர்த்தி இந்தப் பதிவையும் ஒட்ட வச்சிடலாம்.வேகம் பற்றி சொன்னவுடன் சி.பி தமிழ்மணத்துல இல்லைன்னு இந்த மாதம் தான் அறிந்தேன்..என்னாச்சு?எனது வருத்தங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். சி.பி.
நடிகர் விவேக்கை அதிக படங்களில் காண முடியவில்லையே என்று பார்த்தால் பள்ளிகள்,கல்லூரிகள்,குடியிருப்புக்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நடப் போய் விட்டார் என்பதனை குவைத் ப்ரண்ட்லைனர் நிகழ்ச்சியின் போது அறிய நேர்ந்தது.பெரும்பாலும் தமிழர்கள் திரைப்படங்கள் மீதான காதலும்,நடிகர்கள் மீதான அளவிற்கு மீதான பற்றுதலும் கொண்டவர்களாக உள்ளார்கள் என்ற பொது விமர்சனம் நம்மிடையே உண்டு.முன்னாள் தேர்தல் கமிசனர் வை.கோபாலசாமி,விஞ்ஞானியும்,டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசகருமான வி.பொன்ராஜ் மற்றும் நடிகர் விவேக்கின் பேச்சைக் கேட்டேன்.அவரவர் பணியில் மூவரும் சிறப்பாக செயல்பட்டாலும் மக்களைக் கவரும் விதமாக ஸ்பாண்டினியஸாக நகைச்சுவையும், நகைச்சுவைக்கு ஈடாக சிந்தனைகளை கேள்வி பதிலாக விவேக்கின் பேச்சே முந்திக்கொண்டது.
தமிழீழக் கனவு போலவே 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்ற கலாமின் கனவையே பொன்ராஜ் வெளிப்படுத்தினார்.குவைத்தின் ப்ரண்ட்லைனர்ஸ் தொடர்ந்து தமிழகத்தின் முன்ணனியாளர்கள் யாரையாவது வரவழைத்து கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் தொடர்ந்து 100 பள்ளி மாணவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.இந்த முறை சென்னை கேன்சர் அமைப்புக்கு 15 லட்சம் தருவதற்கான முயற்சியை தொடர்ந்திருக்கிறார்கள்.ப்ரண்ட்லைனர்ஸ் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான மோகன் தாஸ் ஒரு எழுத்தாளர்.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு பழமொழியோடு உதவியும் செய் என்ற புதுமொழியை சேர்த்துக் கொண்ட குழுவின் அமைப்பாளர்.
நடன நிகழ்ச்சிகள்,பங்களிப்பாளர்களின் அறிமுகம் என்று துவங்கி பொன்ராஜ்,வை.கோபாலசாமி,அறிமுகப்படலத்துடன் அவர்களின் உரைகள்
அடுத்து நேருக்கு நேர் கேள்வி பதில் என கோட் சூட் போட்ட ஒருவர் விவேக்கிடம் பொதுவுடமை பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க ஏன் என்று கேள்வி கேட்க பார்வையாளர்களைப் பார்த்து உங்களுக்கு போரடிக்குதா என்ற கேட்க பார்வையாளர்கள் பக்கமிருந்து ஆமாம் ஆமாம் என்று குரல் எழும்ப ஜாலியா சிரிக்க வச்சோமா கிளம்புனோமான்னு இல்லாம முடியமாட்டாங்குதே என்றார்.எப்படியிருந்த நீங்க இப்படியாகிட்டீங்க இந்த டயலாக்கை எங்கிருந்து புடிச்சீங்க? என கோட் சூட் தொடர இவரு வேற! இந்த சூட்டிலும் சூட் போடுறீங்களேன்னு ,கேள்வியின் சுருதி குறைவதையும் கலாய்த்தார்.
யாராவது கேள்வி கேட்க விரும்புறீங்களா என்று விவேக் வினவ கூட்டம் ஆமாம்!ஆமாம் போட பார்வையாளர்களுக்கு ஒரு மைக் கொடுங்க கண்டிப்பா திருப்பிக்கொடுத்து விடுவாங்கன்னு சொல்லி கேள்விக்காக மைக் பார்வையாளர்களின் பகுதிக்கு விடப்பட
கேள்வி பதில்களில் சில....
முதல் கேள்வி: சார் உங்களை கோயம்புத்தூர்ல பாப்பநாயக்கன் பாளையத்தில் சூட்டிங்கில் பார்த்திருக்கிறேன்.மறுபடியும் பி.எஸ்.ஜி கல்லூரியில பார்த்திருக்கிறேன.ரொம்ப சந்தோசம்.தேங்க் யூ சார் என்று கேள்வியை முடிக்க
விவேக் இது ஒரு கேள்வியா?
இன்னுமொருவர்:சார்!சன் டிவியில் பகுத்தறிவு கேள்விகளாய் ஒலிபரப்புகிறார்க்ள்.விஜய் டிவியில் மக்களுக்கான கருத்தாக சொல்லுகிறார்கள். சன் டிவி பெஸ்ட்டா இல்ல விஜய் டிவி பெஸ்ட்டா சார்?
விவேக்: என்னை ஒழுங்கா தமிழ்நாடு போய் சேர விட மாட்டீங்க போல தெரியுதே!
அடுத்தவர்: ஒரு பஞ்சு டயலாக் சொல்லுங்க சார்.
விவேக்:ஓகே! என் மேல் அன்பு வைத்து ,என்னை இங்கே வரவழைத்து, என்னை தங்க வைத்து,எனக்கு உணவளித்து,என் மேல் பாசம் வைத்து,என ரசிகர்களோடு பேச வைத்து....வைத்து வைத்துன்னு வருதே அப்பவே தெரிய வேண்டாம்....குவைத்து
அடுத்து ஒரு பெண் சிநேகிதனை!சிநேகிதனை!ரகசிய சிநேகிதனை பாடி நீங்களும் பாடுங்க என்று விவேக்கிடம் சொல்ல சின்ன சின்னதாய் மழைத்துளிகள் என்று பாட துணிச்சலாக பாடிய பெண்னுக்கு ஒரு ஓ போடுங்க என்று கைதட்டலை வாங்கி தந்தார்.
இன்னுமொரு பெண்: நீங்க நல்லவரா!கெட்டவரா என்று கலாய்த்தார்.
இன்னுமொரு பெண்: சார் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என எல்லோரையும் பிடிக்கும் என்று விவேக் சொல்ல ரொம்பவும் பிடித்தவர் என்று அந்தப் பெண் மறுபடியும் கொக்கி போட்டார்.பார்வையாளர் பகுதியிலிருந்து மும்தாஜ் என்று ஒரு குரல் எழும்பியது.
ஒருவர்:திரைப்படங்களில் மதங்களை கலாய்க்கிறீர்களே! நீங்கள் ஆத்திகவாதியா அல்லது நாத்திகவாதியா?
விவேக; நான் படங்களில் பாவாடைச் சாமியார் போன்றும்,மூடநம்பிக்கைகளையே கலாய்க்கிறேன். செல்லாத்தா எங்க மாரியாத்தா, அல்லா அல்லா. ஜிங்குசிக்கு ஜிங் ஜிங்க்,இயேச ஜீவிக்கிறார் என்று பல பாடல்களைப் பாடி இறைவன் உண்டு என்ற தான் ஆத்திகவாதியென்றார்.
இடையே நீ சிக்குன்னு இருக்குறீயே!எனக்கு பக்குன்னு இருக்குதேமா! நீ டக்கரா இருக்குறீயே!எனக்கு டார்ச்சரா இருக்குதேமா என்று பாடினார்.
இன்னுமொருவர் மைக்கைப் பிடித்து என் பெயர் சேகர் என்றார்.நீங்க நாய் சேகரா? என்றார்.மைக்காரர் குவைத் சேகர் என குவைத் சேகர்!குவைத் சேகர் என்றார் விவேக்.
கேள்வி:நீங்கள் அப்துல் கலாமை எப்பொழுது முதன் முதலாக சந்தித்தீர்கள்?
விவேக்: நான் படப்பிடிப்புக்காக கூவம் ஆற்றில் முங்கி எழுந்த நிலையில் அப்துல் கலாமிடமிருந்து போன் வந்தது.உடனடியாக குளித்து விட்டு அவருடன் பேசி போட்டோவும் எடுத்துக்கொண்டேன்.
இந்தியா பற்றி சொல்ல நிறையா இருக்குதுங்க
பல மொழி,இனம்,சாதிகளுக்கிடையிலும்,ஊழல்களுக்கு மத்தியிலும் இந்தியா என்ற தேசம் உயர்ந்து நிற்கிறது.இந்தியா இஸ் கிரேட் என்றார்.யோகா என்ற அற்புதமான விஞ்ஞானத்தை உலகத்துக்கு தந்தது இந்தியா என கூட்டத்தில் ஒருவர் பெருமை என கூவ பெருமையில்ல ராஜா கம்ப்யூட்டரக் கண்டு பிடிச்சது அமெரிக்காவாக இருக்கலாம்.ஆனால் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மூளை இந்தியர்களுடையது.
வீட்டை,உறவினர்களை,தமிழ்நாட்டை விட்டு வந்து இங்கே உழைக்கும் நீ தெய்வண்டா என்று பார்வையாளர்களை குளிர்வித்தார்.நான் இங்கே வருவதற்கு முன்பு தயங்கியதுண்டு.ஆனால் தமது பணிகளுக்கு அப்பாலும் இப்படியொரு அசோசியசனை நிகழ்த்துவது பெரிய விசயம் என்று ப்ரண்ட்லைனர்களைப் பாராட்டினார்.
ஒரு பெண் நீங்கள் அரசியல்வாதியாகி முதல் அமைச்சர் ஆக விரும்புகிறீர்களா என்றார்.அதற்கு வேற ஆளைப்பார் என்று அழுத்தி சொன்னார்.
சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு சத்தம் போடவும் அதில் ஒரு இளசு
குவைத் சரக்கடிங்க சார் என்றும் குரல் எழுப்பினார்.அது விவேக்கின் காதுக்கு கேட்டதோ இல்லையோ தொடர்ந்த சத்தத்தைக் கேட்ட விவேக் அந்த மூலையில் ஏதோ கொஞ்சம் சத்தம் வருகிற மாதிரி தெரிகி|றதே!குவைத்துல ட்ரைன்னு கேள்விப்பட்டேனே என்றார்.
செல்போனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விளக்கினார்.விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆவதைப் பற்றி அழகான கவிதை ஒன்று சொன்னார்.
இவ்வளவெல்லாம் விவேக் பற்றி சொல்லிட்டு பதிவில் ஒரு மெசேஜ் வைக்கலைன்னா நல்லாயிருக்காது.
இலங்கையிலும் ஒரு மைக் டைசன்:)
கோதாவுல தோத்துடுவோம்ன்னா என்ன செய்யனும்?வடிவேல் மாதிரி தோத்தவனுக்குத்தான் பரிசுன்னு கோப்பையை தூக்கிட்டு வந்துடனும்.இல்லைன்னா மைக் டைசன் மாதிரி சண்டை போடுறவர் காதையாவது புடிச்சி கடிச்சு விடனும்.இது கோதாவெல்லாம் இல்ல.சும்மா பேசிகிட்டிருந்திருக்காரு போல தெரியுது.பேச்சோட பேச்சா துனேஷ் கன்கண்டா என்ற இலங்கை பாராளுமன்ற எம்.பி ஒருத்தரோட மூக்கை கடிச்சு வெச்சுட்டாராம்.மூக்கை இழந்தவருக்கு வயசு 40.பிசினஸ்மேனாம்.கொடுக்கல் வாங்கல்ங்கிறது இதுதானோ!
மூக்கை கடிக்கும் இலங்கை எம்.பி பற்றி படிக்கும் போது மைக் கீழே விழுந்துடுச்சுன்னு சாக்காட்டுல வேட்பாளரை மோதிரக்கையால் கொட்டிய நம்ம விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணல!