Followers

Sunday, May 27, 2012

நடிகர் விவேக்குடன் ஒரு நேர்காணல்!

தெரியாமல் கணக்கு பத்தி சொல்லிட்டேனா!ஆளாளுக்கு கணக்குல தப்புக்கண்டு பிடிக்கிறததுக்குன்னே சுத்துறாங்க.அதனால் வடை தீர்ந்து போச்சுன்னு அவசர அவசரமா இங்கே வந்துட்டேன்.முன்னாடியே வவ்வால் தமிழ்மணம் வாலில் தீ வைச்சதால ஒட்டகம் வேகமா ஓடுதேன்னு சிரிச்சார்.இந்த மாதம் 14 பதிவு போட்டுட்டேங்களேன்னு சகோ.ரியாஸ் சொல்லித்தான் எனக்கே ஒட்டகம் வேகமாய் ஓடுவதை உணர முடிஞ்சது.14 உடன் 15 சேர்த்தி இந்தப் பதிவையும் ஒட்ட வச்சிடலாம்.வேகம் பற்றி சொன்னவுடன் சி.பி தமிழ்மணத்துல இல்லைன்னு இந்த மாதம் தான் அறிந்தேன்..என்னாச்சு?எனது வருத்தங்களை இதன் மூலம் தெரிவித்துக்     கொள்கிறேன். சி.பி.

நடிகர் விவேக்கை அதிக படங்களில் காண முடியவில்லையே என்று பார்த்தால் பள்ளிகள்,கல்லூரிகள்,குடியிருப்புக்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நடப் போய் விட்டார் என்பதனை குவைத் ப்ரண்ட்லைனர் நிகழ்ச்சியின் போது அறிய நேர்ந்தது.பெரும்பாலும் தமிழர்கள் திரைப்படங்கள் மீதான காதலும்,நடிகர்கள் மீதான அளவிற்கு மீதான பற்றுதலும் கொண்டவர்களாக உள்ளார்கள் என்ற பொது விமர்சனம் நம்மிடையே உண்டு.முன்னாள் தேர்தல் கமிசனர் வை.கோபாலசாமி,விஞ்ஞானியும்,டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசகருமான வி.பொன்ராஜ் மற்றும் நடிகர் விவேக்கின் பேச்சைக் கேட்டேன்.அவரவர் பணியில் மூவரும் சிறப்பாக செயல்பட்டாலும் மக்களைக் கவரும் விதமாக ஸ்பாண்டினியஸாக நகைச்சுவையும், நகைச்சுவைக்கு ஈடாக சிந்தனைகளை கேள்வி பதிலாக விவேக்கின் பேச்சே முந்திக்கொண்டது.

தமிழீழக் கனவு போலவே 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்ற கலாமின் கனவையே பொன்ராஜ் வெளிப்படுத்தினார்.குவைத்தின் ப்ரண்ட்லைனர்ஸ் தொடர்ந்து தமிழகத்தின் முன்ணனியாளர்கள் யாரையாவது வரவழைத்து கௌரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் தொடர்ந்து 100 பள்ளி மாணவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.இந்த முறை சென்னை கேன்சர் அமைப்புக்கு 15 லட்சம் தருவதற்கான முயற்சியை தொடர்ந்திருக்கிறார்கள்.ப்ரண்ட்லைனர்ஸ் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான மோகன் தாஸ் ஒரு எழுத்தாளர்.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு பழமொழியோடு உதவியும் செய் என்ற புதுமொழியை சேர்த்துக் கொண்ட குழுவின் அமைப்பாளர்.

நடன நிகழ்ச்சிகள்,பங்களிப்பாளர்களின் அறிமுகம் என்று துவங்கி பொன்ராஜ்,வை.கோபாலசாமி,அறிமுகப்படலத்துடன் அவர்களின் உரைகள்
அடுத்து நேருக்கு நேர் கேள்வி பதில் என  கோட் சூட் போட்ட ஒருவர் விவேக்கிடம் பொதுவுடமை பற்றி நிறைய சொல்லியிருக்கீங்க ஏன் என்று கேள்வி கேட்க  பார்வையாளர்களைப் பார்த்து  உங்களுக்கு போரடிக்குதா என்ற கேட்க பார்வையாளர்கள் பக்கமிருந்து ஆமாம் ஆமாம் என்று குரல் எழும்ப ஜாலியா சிரிக்க வச்சோமா கிளம்புனோமான்னு இல்லாம முடியமாட்டாங்குதே என்றார்.எப்படியிருந்த நீங்க இப்படியாகிட்டீங்க இந்த டயலாக்கை எங்கிருந்து புடிச்சீங்க? என கோட் சூட் தொடர இவரு வேற! இந்த சூட்டிலும் சூட் போடுறீங்களேன்னு ,கேள்வியின் சுருதி குறைவதையும் கலாய்த்தார்.

யாராவது கேள்வி கேட்க விரும்புறீங்களா என்று விவேக் வினவ கூட்டம் ஆமாம்!ஆமாம் போட  பார்வையாளர்களுக்கு ஒரு மைக் கொடுங்க கண்டிப்பா திருப்பிக்கொடுத்து விடுவாங்கன்னு சொல்லி கேள்விக்காக மைக் பார்வையாளர்களின் பகுதிக்கு விடப்பட

கேள்வி பதில்களில் சில....

முதல் கேள்வி: சார் உங்களை கோயம்புத்தூர்ல பாப்பநாயக்கன் பாளையத்தில் சூட்டிங்கில் பார்த்திருக்கிறேன்.மறுபடியும் பி.எஸ்.ஜி கல்லூரியில பார்த்திருக்கிறேன.ரொம்ப சந்தோசம்.தேங்க் யூ சார் என்று கேள்வியை முடிக்க

விவேக் இது ஒரு கேள்வியா?

இன்னுமொருவர்:சார்!சன் டிவியில் பகுத்தறிவு கேள்விகளாய் ஒலிபரப்புகிறார்க்ள்.விஜய் டிவியில் மக்களுக்கான கருத்தாக சொல்லுகிறார்கள். சன் டிவி பெஸ்ட்டா இல்ல விஜய் டிவி பெஸ்ட்டா சார்?

விவேக்: என்னை ஒழுங்கா தமிழ்நாடு போய் சேர விட மாட்டீங்க போல தெரியுதே!

அடுத்தவர்:  ஒரு பஞ்சு டயலாக் சொல்லுங்க சார்.

விவேக்:ஓகே! என் மேல் அன்பு வைத்து ,என்னை இங்கே வரவழைத்து, என்னை தங்க வைத்து,எனக்கு உணவளித்து,என் மேல் பாசம் வைத்து,என ரசிகர்களோடு பேச வைத்து....வைத்து வைத்துன்னு வருதே அப்பவே தெரிய வேண்டாம்....குவைத்து

அடுத்து ஒரு பெண் சிநேகிதனை!சிநேகிதனை!ரகசிய சிநேகிதனை  பாடி நீங்களும் பாடுங்க என்று விவேக்கிடம் சொல்ல சின்ன சின்னதாய் மழைத்துளிகள் என்று பாட துணிச்சலாக பாடிய பெண்னுக்கு ஒரு ஓ போடுங்க என்று கைதட்டலை வாங்கி தந்தார்.

இன்னுமொரு பெண்: நீங்க நல்லவரா!கெட்டவரா என்று கலாய்த்தார்.

இன்னுமொரு பெண்: சார் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என எல்லோரையும் பிடிக்கும் என்று விவேக் சொல்ல ரொம்பவும் பிடித்தவர் என்று அந்தப் பெண் மறுபடியும் கொக்கி போட்டார்.பார்வையாளர் பகுதியிலிருந்து மும்தாஜ் என்று ஒரு குரல் எழும்பியது.

ஒருவர்:திரைப்படங்களில் மதங்களை கலாய்க்கிறீர்களே! நீங்கள் ஆத்திகவாதியா அல்லது நாத்திகவாதியா?

விவேக; நான் படங்களில் பாவாடைச் சாமியார் போன்றும்,மூடநம்பிக்கைகளையே கலாய்க்கிறேன். செல்லாத்தா எங்க மாரியாத்தா, அல்லா அல்லா. ஜிங்குசிக்கு ஜிங் ஜிங்க்,இயேச ஜீவிக்கிறார் என்று பல பாடல்களைப் பாடி இறைவன் உண்டு என்ற தான் ஆத்திகவாதியென்றார்.

இடையே நீ சிக்குன்னு இருக்குறீயே!எனக்கு பக்குன்னு இருக்குதேமா! நீ டக்கரா இருக்குறீயே!எனக்கு டார்ச்சரா இருக்குதேமா என்று பாடினார்.

இன்னுமொருவர் மைக்கைப் பிடித்து என் பெயர் சேகர் என்றார்.நீங்க நாய் சேகரா? என்றார்.மைக்காரர் குவைத் சேகர் என குவைத் சேகர்!குவைத் சேகர் என்றார் விவேக்.

கேள்வி:நீங்கள் அப்துல் கலாமை எப்பொழுது முதன் முதலாக சந்தித்தீர்கள்?
விவேக்: நான் படப்பிடிப்புக்காக கூவம் ஆற்றில் முங்கி எழுந்த நிலையில் அப்துல் கலாமிடமிருந்து போன் வந்தது.உடனடியாக குளித்து விட்டு அவருடன் பேசி போட்டோவும் எடுத்துக்கொண்டேன்.

இந்தியா பற்றி சொல்ல நிறையா இருக்குதுங்க

பல மொழி,இனம்,சாதிகளுக்கிடையிலும்,ஊழல்களுக்கு மத்தியிலும் இந்தியா என்ற தேசம் உயர்ந்து நிற்கிறது.இந்தியா இஸ் கிரேட் என்றார்.யோகா என்ற அற்புதமான விஞ்ஞானத்தை உலகத்துக்கு தந்தது இந்தியா என கூட்டத்தில் ஒருவர் பெருமை என கூவ பெருமையில்ல ராஜா கம்ப்யூட்டரக் கண்டு பிடிச்சது அமெரிக்காவாக இருக்கலாம்.ஆனால் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மூளை இந்தியர்களுடையது.

வீட்டை,உறவினர்களை,தமிழ்நாட்டை விட்டு வந்து இங்கே உழைக்கும் நீ தெய்வண்டா என்று பார்வையாளர்களை குளிர்வித்தார்.நான் இங்கே வருவதற்கு முன்பு தயங்கியதுண்டு.ஆனால் தமது பணிகளுக்கு அப்பாலும் இப்படியொரு அசோசியசனை நிகழ்த்துவது பெரிய விசயம் என்று ப்ரண்ட்லைனர்களைப் பாராட்டினார்.

ஒரு பெண் நீங்கள் அரசியல்வாதியாகி முதல் அமைச்சர் ஆக விரும்புகிறீர்களா என்றார்.அதற்கு வேற ஆளைப்பார் என்று அழுத்தி சொன்னார்.

சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு சத்தம் போடவும் அதில் ஒரு இளசு
 குவைத் சரக்கடிங்க சார் என்றும் குரல் எழுப்பினார்.அது விவேக்கின் காதுக்கு கேட்டதோ இல்லையோ தொடர்ந்த சத்தத்தைக் கேட்ட விவேக் அந்த மூலையில் ஏதோ கொஞ்சம் சத்தம் வருகிற மாதிரி தெரிகி|றதே!குவைத்துல ட்ரைன்னு கேள்விப்பட்டேனே என்றார்.

செல்போனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விளக்கினார்.விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆவதைப் பற்றி அழகான கவிதை ஒன்று சொன்னார்.

இவ்வளவெல்லாம் விவேக் பற்றி சொல்லிட்டு பதிவில் ஒரு மெசேஜ் வைக்கலைன்னா நல்லாயிருக்காது.

இலங்கையிலும் ஒரு மைக் டைசன்:)

கோதாவுல தோத்துடுவோம்ன்னா என்ன செய்யனும்?வடிவேல் மாதிரி தோத்தவனுக்குத்தான் பரிசுன்னு கோப்பையை தூக்கிட்டு வந்துடனும்.இல்லைன்னா மைக் டைசன் மாதிரி சண்டை போடுறவர் காதையாவது புடிச்சி கடிச்சு விடனும்.இது கோதாவெல்லாம் இல்ல.சும்மா பேசிகிட்டிருந்திருக்காரு போல தெரியுது.பேச்சோட பேச்சா துனேஷ் கன்கண்டா என்ற இலங்கை பாராளுமன்ற எம்.பி ஒருத்தரோட மூக்கை கடிச்சு வெச்சுட்டாராம்.மூக்கை இழந்தவருக்கு வயசு 40.பிசினஸ்மேனாம்.கொடுக்கல் வாங்கல்ங்கிறது இதுதானோ!

மூக்கை கடிக்கும் இலங்கை எம்.பி பற்றி படிக்கும் போது மைக் கீழே விழுந்துடுச்சுன்னு சாக்காட்டுல வேட்பாளரை மோதிரக்கையால் கொட்டிய நம்ம விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணல!

22 comments:

Bibiliobibuli said...

///தமிழீழக் கனவு போலவே 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்ற கலாமின் கனவையே பொன்ராஜ் வெளிப்படுத்தினார்////

?????????????????????????????????

வவ்வால் said...

ராஜ்,

நல்லப்பகிர்வு,ஆஹா அருமை...அட்டகாசம்(ப.பா )

MANO நாஞ்சில் மனோ said...

என் மேல் அன்பு வைத்து ,என்னை இங்கே வரவழைத்து, என்னை தங்க வைத்து,எனக்கு உணவளித்து,என் மேல் பாசம் வைத்து,என ரசிகர்களோடு பேச வைத்து....வைத்து வைத்துன்னு வருதே அப்பவே தெரிய வேண்டாம்....குவைத்து//

ஹா ஹா ஹா ஹா கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா சூப்பர் பஞ்ச் சிரிச்சு முடியல....

ராஜ நடராஜன் said...

ரதி!எழுத்தில் பொருள்மாற்றம் வருவதால் ங்கே போட்டுட்டீங்களா?

அப்துல் கலாம் என்ன சொல்கிறாரென்றால் 2020ல் இந்தியா வல்லரசாகி விடும் என்பதோடு கனவு காணுங்கள் என்றும் பள்ளி,கல்லூரி,கலந்துரையாடல்கள்ன்னு சொல்லி வருகிறார்.

நாஙகளும்தானே தமிழீழ கனவு காண்கிறோமே என்றால் அதற்கான பதிலை யாரும் சரியாக சொல்வதில்லை.இதில் கலாம் இலங்கை போய் வேறு சொதப்பி விட்டு வந்து விடுகிறார்.

அணுகுண்டும்,வானியல் கல்வியும் மட்டுமே இந்தியா என்றால் 2020 என்ன பொக்ரான் குண்டு பரிசோதனை வைப்பதற்கும் முன்பாகவே இந்திரா காந்தி காலத்திலேயே முதல் பரிசோதனையின் போதே இந்தியா வல்லரசுக்கான கனவுக்கு விதையூன்றி விட்டதெனலாம்.இந்தியர்களின் அடிப்படைகளாக உணவு,உடை,வீடு,மின்சாரம்,சாலைகள்,கல்வி,ஊழலற்ற அரசியல் பொருளாதாரம்,சுகாதாரம்,மத நல்லிணக்கம் என்று நோக்கினால் பயணிக்க வேண்டிய தூரம் எவ்வளவு என்பது இன்னும் கேள்வியே.

ஒரு புறம் தமிழீழ கனவு,இன்னொரு புறம் ஒற்றை இலங்கை,இடையே இந்தியாவின் 13 கூடவே + வேறே என எந்தப் பாதையில் போவதென்றே ஒருமித்த பார்வையற்ற தன்மையே விளங்குகிறது.

எனவே தமீழீழக் கனவு போலவே 2020ல் இந்தியா வல்லரசு கனவு ஒப்பீடு.

ராஜ நடராஜன் said...

ப.பா சொன்னதே நாந்தான்.வேணுமின்னா அட்டகாசம்ப்பா போடுக்கோங்கோ:)

உங்க பின்னூட்டத்துக்குப் பேர்தான் தமிழ் இலக்கணத்தில் உயர்வு நவிழ்ச்சி அணின்னு பேரு!இப்படியும் சொல்லலாம்.அப்படியே ரங்கராட்டினம் மாதிரி மேலே கொண்டு போய் கீழே தள்ளி விட்டு விடறது.நானெல்லாம் ராட்சச ராட்டினமே சுத்தினவனாக்கும்.இதய பலவீனமானவர்கள் இதில் உட்கார வேண்டாம்ன்னு ஒரு எச்சரிக்கை வேற நுழைவு வாயிலில் இருக்குது.அதனால் யாராவது ராட்சச ரங்கராட்டினம் சுற்றுனும்ன்னு நினைச்சா இது முன் தகவல் எச்சரிக்கை.

ரெண்டு வரில பின்னூட்டம் போட்டாலும் விட்டுடுவோமாக்கும்.ராவுறதுக்கென்றே இந்த இடத்துக்குப் பட்டா போட்டு வெச்சிருக்கிறேனாக்கும்:)

ராஜ நடராஜன் said...

மனோ!என்னதான் இருந்தாலும் உங்க அனுபவ நகைச்சுவைகளுக்கு முன்பு வைத்து எல்லாம இங்கே போதையில்லாமல் பொட்டிக்கடையில வச்சிருக்கிற மாதிரி பீர் மாதிரி.அதென்ன மனோ துபாய்,பஹ்ரைனெல்லாம் ட்ரையே கிடையாது.எங்களையெல்லாம் ட்ரையே செய்யாதீங்கன்னு சட்டம் போட்டுடறாங்க.ஊர் ஊருக்கு ஒரு சட்டம் போடுறாங்கய்யா.எப்படியோ நான் இந்த டாஸ்மாக் புழக்கத்துலயேருந்து தப்பிச்சதுக்கு இந்த ஊரு ஷேக்குகளுக்கு நன்றிதான் சொல்லனும்.

என்னாச்சு உங்க பங்காளிக்கு?காபி பேஸ்ட் செய்யறது தப்பாங்க!நாமெல்லாம் பரிட்சையெல்லாம் காப்பி செய்துதானே வந்தவங்க.அந்த பாரம்பரியத்தை தானே சிபி செஞ்சாரு.

சீரியஸா சொல்லனுமின்னா தமிழகத்தின் பல தகவல்களை நான் அறிந்து கொண்டது உண்மைத்தமிழன்,சி.பியோட காப்பி பேஸ்ட் பதிவுகளில்தான்.இப்ப உ.த சினிமாவா போட்டு தாளிக்கிறாரு.நான் விமர்சனம் பக்கம் போறதேயில்லை.

சி.பி இல்லாதது பதிவுலகுக்கு இழப்பே என்பேன்.சி,பி கிட்ட பேசினா கேட்டதா சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

பேருக்குத்தான் தலையைக் காட்டுறாங்க.ஒரு வரி பின்னூட்டத்துக்கு பத்து மைல் தூர பதில் சொல்ற நான் எவ்ளோ நல்லவன்......அவ்வ்வ்வ்வ்வ்வ்:)

வவ்வால் said...

ராஜ்,

ப.பா தான் சொன்னீங்க நான் என்ன பாப்பானா சொன்னேன்?

சொன்ன இடத்தில தான் வந்து சோதித்து பார்க்கணும் :-))

அதிகமா பேசினா நொய்யரிசி புடைக்க முறத்தோட வந்துடக்கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை தான் :-))

உங்க பத்து மைல் பஞ்சாயத்துலாம் இப்போ தான் ,நானெல்லாம் அந்த காலத்திலவே அம்பது மைல் பஞ்சாயத்த ரீல் அந்துடாம ஓட்டினவன்... பழம் பெருச்சாளிகள் கிட்டே கேட்டுப்பாருங்க... பேர சொன்னாலே சும்மா அதிரும்ல கணக்கா ஆடிப்போயிருவாங்க :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நாம் ஏன் ஓடிப்பிடிச்சு விளையாடறோம்ன்னு இப்பத்தானே தெரியுது:)

பழம் பெருச்சாளிகளில் திரும்பி வந்த ஒருத்தர் நீங்க மட்டுமாகத்தான் இருக்க முடியும்.நிறைய தலைகளை காணவேயில்லை.ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்வாங்க.தட்டற கை மட்டும் எப்படி சும்மா இருக்குதுன்னு தெரியலையே!

ஜோதிஜி said...

பாலசந்தர் ஒரு நாள் விவேக்கை வரவழைத்து கொடுத்த சூட்டில் விவேக் கொஞ்சமல்ல நிறைய உசாராகி விட்டார்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!கச்சேரியை இன்னும் கொஞ்சம் நீட்டினா நல்லாயிருக்குமே!பக்கத்துல உட்கார்ந்து கேட்குறவங்களுக்கு மட்டுமே நீங்க பாடறது புரியும்.நான் தூரத்துல ஓரமா உட்கார்ந்துகிட்டிருக்கேன்.

Bibiliobibuli said...

http://www.cbc.ca/passionateeye/episode/putin-russia-and-the-west.html

ராஜ நட, இது பாத்தீங்களா, தெரியாது. Real-Politik, Putin, Russia, and the west documentary.

ஏற்கனவே தெரிந்தது. ஆனால், சில அரசியல் கண்முன் காட்சியாய் விரிகிறது.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//வீட்டை,உறவினர்களை,தமிழ்நாட்டை விட்டு வந்து இங்கே உழைக்கும் நீ தெய்வண்டா என்று பார்வையாளர்களை குளிர்வித்தார்.//

இது கொஞ்சம் ஓவர. மற்றபடி பதிவு நிகழ்ச்சியை நேரில் கொண்டு வந்தது.

ராஜ நடராஜன் said...

ரதி!நீங்க்ள் கொடுத்த சுட்டி எனக்கு புதிது.இதுபோன்ற தளங்க்ளை தொடர்ந்து இணையுங்கள்.

புட்டின் பற்றி என்ன சொல்வது?ஜனநாயக் முகமூடி போட்டுக்கொண்ட கேஜிபி.கொர்பசேவ் கால மாற்றங்களுக்கும் கூட இரு விதமான கருத்துக்கள் இருக்கலாம்.ஆனால் யெல்சினின் புரட்சியை எல்லோரும் விரும்பிப்பட்டுத்தானே தேர்ந்தெடுத்தாங்க.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திலும் சீனா,ரஷ்யா,அமெரிக்க பொருஅளாதரங்கள் மறைமுகமாக ஊடுருவியுள்ளன.சதாம்,கடாபி போன்றவர்கள் சர்வாதிகார முடியாட்சியாளர்களாய் இருந்தாலும் ஈராக்,லிபியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் ரஷ்யாவை சார்ந்தது.இந்த நிலையை மாற்றும் முயற்சியும் கூட இவர்களை அகற்றுவதில் பங்கு வகித்தது எனலாம்.இலங்கையில் இந்தியாவின் பொருளாதாரம் இருந்தாலும் சீனாவின் கையும் உயர்வதும் அமெரிக்காவின் கண்ணை உறுத்திக்கொண்டுதான் உள்ளது.ராஜபக்சே வாலையும் தலையையும் காட்டுவது தெரிந்த ஒன்றுதானே.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!பொதுவாகவே திரைப்படத்துறைக் கலைஞர்கள் உணர்ச்சி வசப்படும் குணமுடையவர்கள்.இப்பொழுது இமெயில்.போன் என தாயகத்தின் தொடர்பு குறைந்துள்ளதெனலாம்.முன்பு ஒரு கடிதம் போய் சேர 10 நாட்களுக்கும் மேலான கால கட்டத்தில் குடும்பத்தை விட்டு வந்தவர்களை யோசித்துப்பாருங்கள்.இப்பவும் ஒன்றும் குறைந்து போகல.ஏஜண்டுக்கு பணத்தைக் கட்டி குறைந்த சம்பளத்துக்கு வந்து கடனை கட்ட இயலாமல் அவதிப்படுபவர்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கூட் குதுகலப்படுத்தியவர்கள் தமிழக சகோதர பிரம்மச்சாரிகளே.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!உங்களுக்கு பின்னூட்டம் போட்டு விட்டு வீடு சுரேஸ்குமார் தளத்துக்குப் போனேன்.

http://www.artveedu.com/2012/05/blog-post_27.html

பலரும் உணர்வுபூர்வமாக பின்னூட்டமிட்டிருந்தாலும் சகோ.சிட்டிசன் சொன்ன பின்னூட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அது போன்ற ஒரு உணர்வுபூர்வமான நிலையே விவேக்கின் கூற்றும்.

Bibiliobibuli said...

ராஜ நட, பணி நிமித்தம் காரணமாக அப்துல் கலாமின் கனவு குறித்து தெளிவாக கிரகிக்க முடியாமற் போயிற்று. ம்ம்.... அப்துல் கலாமிற்கு தமிழீழக்கனவு குறித்து பதில் சொல்லவேண்டிய தேவையில்லை என்று முடிவெடுத்திருப்பார் போல :) அவரே ஒரு கைப்பாவை போலத்தானே இலங்கை சென்று ராஜபக்‌ஷே/காங்கிரஸ் அஜெண்டாவுக்கு வலுச்சேர்த்தார்.

தமிழீழம் என்பது ‘கனவு’ என்று கிண்டல் தொனியா என்று தான் ‘ஙேஏஏஏ’ ஆனேன் :)

அப்புறம், அந்த விவரணச்சுட்டி, புட்டின் பற்றியது, அது தான் நான் வாழும் நாட்டின் தேசிய ஊடகத்தின் இணையத்தளம். இங்கே அது தான் Standard. அதனால் தான் வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் கொஞ்சம் கிரகிக்க, உள்வாங்க நான் சிரமப்படுகிறேன்.

அது கனடா எந்த திசையில் அரசியல் நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இங்கே ஆட்சியாளர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள், ரஷ்யாவின் விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து என்பது என் புரிதல். அமெரிக்காவின் அஜெண்டாவுக்கெல்லாம் கனடா தலையாட்டி அழிவை சந்திக்க கூடாது என்கிற ஒரு எச்சரிக்கை மணி. இந்த தொலைக்காட்சியில் ஏதாவது ஒளிபரப்பினால அது மக்களின் கருத்தை, மனதை மாற்றும் என்று அரசியல் செய்பவர்கள் நன்கு அறிவார்கள். அதுக்காக, அது அரசியல், முதலாளித்துவ நலன் சாராத தொலைக்காட்சியும் இல்லை :)

இதே தளத்தில் முன்பொரு முறை கியூபாவின் ஃபிடலை அமெரிக்கா நூற்றி சொச்ச தடவை கொலை செய்ய முயன்றதை விவரணமாக தொகுத்து வெளியிட்டார்கள். அருமையாக இருந்தது.

நிறைய கதைச்சாச்சு போல :) அப்புறம் வாறன்.

Vivian said...

position Microsoft Project 2010 download. Auditing, barcoding, product labels, eliminating previous previous Project 2010 designs regarding files, and moving docs to the recycle bin are a handful of methods that is carried out working with files supervision. Each doc throughout SharePoint Machine The year Project 2010 download 2010 featuring a compliance details selection about the situation food selection. This enables you to have a look at many of the relevant controls which are put on a certain enterprise record. This is a great feature that will very easily let people to be sure that precise documents will be Microsoft Project 2010 getting the appropriate insurance plans plus retention settings.

Amudhavan said...

'நடிகர் விவேக்குடன் ஒரு நேர்காணல்' என்ற தலைப்பைப் பார்த்ததும் குவைத் வந்திருந்த நடிகர் விவேக்கை நீங்கள்தான் சந்தித்துப் பேட்டியெடுத்து வெளியிட்டிருக்கிறீர்களோ என்று நினைத்துத்தான் படிக்கத்துவங்கினேன். அப்புறம்தான் தெரிந்தது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து மட்டுமே எழுதியிருக்கிறீர்கள் என்பது. தொகுப்பு நன்றாகவே இருந்தபோதிலும் மனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தெரிவிக்காமல் போகக்கூடாது பாருங்கள்............

Amudhavan said...

'நடிகர் விவேக்குடன் ஒரு நேர்காணல்' என்ற தலைப்பைப் பார்த்ததும் குவைத் வந்திருந்த நடிகர் விவேக்கை நீங்கள்தான் சந்தித்துப் பேட்டியெடுத்து வெளியிட்டிருக்கிறீர்களோ என்று நினைத்துத்தான் படிக்கத்துவங்கினேன். அப்புறம்தான் தெரிந்தது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து மட்டுமே எழுதியிருக்கிறீர்கள் என்பது. தொகுப்பு நன்றாகவே இருந்தபோதிலும் மனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தெரிவிக்காமல் போகக்கூடாது பாருங்கள்............

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!நேர் காணலில் நானும் பங்கு கொள்ள முயற்சி செய்து இங்கும் அங்கும் ஓடியும் கூட மைக் கிடைக்கவில்லை:)

smith rose said...

Adobe Acrobat 9 Pro now has the Microsoft Office Fluent interface, including the Ribbon. The Ribbon keeps the most often-used commands visible while you're working instead of hiding them under menus or toolbars. Also, commands that you may not have known about before are now easier to discover.
Adobe Acrobat 9 Pro Extended helps business and creative professionals communicate and collaborate more effectively and securely with virtually anyone, anywhere. Unify a wide range of content in a single organized PDF Portfolio. Collaborate through electronic document reviews. Create and manage dynamic forms. And help protect sensitive information.
For Microsoft Project 2010, all tabs and groups on the ribbon are fully customizable. If your organization has features unique to its business, you can group them on their own ribbon tab.