தற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.
இதே ஆட்சி இனி தொடர்ந்தாலும் மக்கள் மாற்றங்களை இனி விரும்பினாலும் ஆளும் அரசு 2016ல் எப்படி செயல்படலாமென்ற இலவச ஆலோசனை இது.
தற்போதைய நிவாரண உதவியாக ஐந்தாயிரம்,பத்தாயிரம்,கோழிக்கு கூட நூறு ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்திருந்ததை அறிந்தேன்.
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதோடு ஒரு அரசு நிர்வாகமும் பொதுமக்கள் நலன் என்ற நோக்கோடு ஒரு நிறுவனம் செயல்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புக்களை கொண்டது.திராவிட கழகங்களின் ஆட்சியில் தமிழகம் நிர்வாக கட்டமைப்புக்களை முடிந்தவரை கட்டமைத்துள்ளது ப்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.ஆனால் அதனை நிர்வாகிக்கும் திறனில் குளறுபடிகள் வந்து விடுவதாலும் புறக்காரணிகள் சிலவற்றாலும் திரும்ப திரும்ப ஆட்சி மாற்றங்கள் வந்து விடுகின்றன.
.தமிழக் அரசு தரும் குறைந்த பண உதவியும் கமல் கேள்வி கேட்ட வரிப்பணத்திலிருந்துதான் செலவாகிறது.இந்த சிறு உதவி டாஸ்மாக்கில் கூட ஒரு சிறு பகுதி செலவழிக்கும் தற்காலிக வலி நிவாரணியே தவிர நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தாது.ஒரு புறம் அரசின் பெரும் சுமை என்ற போதிலும் மறு புறம் இயலாத வயதானவர்கள்,விதவை தாய்மார்கள்,ஏழைப் பட்டியலில் இன்னும் தள்ளாடுவோர் என பலருக்கும் தினசரி பசியை நீக்குகிறது.இலவசம் என்பதை விட குறைந்த விலை உணவு பங்கீடு மட்டுமே அரசாங்கத்தின் செலவை ஓரளவு குறைக்கும்.
அரசாங்கத்தால் தரப்படும் பண உதவிகள் கூட முதியோர்,விதவைகள் போன்றோர் நேரடியாக பெறுவதில்லை.இடைத்தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவரிடமிருந்து அவரது கமிசன் போக பெற்றுக்கொள்ளும் முறையை கிராமத்து பெண் ஒருவர் சொன்னார்.
பொருளாதாரத்தின் அடிப்படை எதுவுமே இலவசமல்ல. அரசு நிர்வகிக்கும் வரிப்பணத்தின் கணக்கை இடம் மாற்றும் ஜிகினா வேலைப்பாடே இலவசம். பழைய காலத்து கணக்கில் ஆயிரம் ரூபாய் கைவசமிருந்தால் வீட்டு வாடகை,அரிசி மளிகை சாமான்,பால்,காய்கறி,பள்ளி குழந்தைகள் செலவு போக ஓட்டலுக்கு ஒரு நாள்,சினிமாவுக்கு ஒரு நாள் என்ற சுகமே ஒரு அரசின் இலவசங்கள் அறிவிப்பு. எப்படியிருந்த போதிலும் ஆயிரம் ரூபாய்க்குள் வாழ்க்கை வண்டி ஓட வேண்டும்.
உலக பொருளாதார மாற்றங்களில் பைக் வாங்கனும்,கார் வாங்கனும்,வீடு கட்டனும்,கட்டுன வீட்டுல குட்டி சினிமா தியேட்டர் நினைப்பில் சினிமா பார்க்கனும் என்று ஏகப்பட்ட கனவுகளில் பணக்காகிதங்கள் அச்சடிக்கும் கொள்ளளவு அதிகரித்து ஆயிரம் லட்சமாகி இப்ப கோடியாகி விட்டன. நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து விட்டது. லஞ்சம் கொடுக்கல் வாஙகல் சுருட்டல் போக கனவில் ஓரளவு தன்னிறைவும் தமிழகம் கண்டதை பொறுக்காத மழை, ஒருத்தன் ரெய்ன் ரெயின் கோ அவே என்கிறான்.இன்னொருத்தன் வா வான்னு பூசை போடுறான்.இதுல வேற தஸ் புஸ்ன்னு டாஸ்மாக் காத்து என்னையும் தாக்கிய மப்பில் பெய்து விட்டேன்கிறது.
எய்தவர்களாய் அமெரிக்க,சீனா,இந்தியாவாக இருக்க என்னை வந்து கும்மினால் எப்படி என்ற புலம்பலில் இன்னும் தூறுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அழைத்த மாநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது இப்பொழுதும் இனியுமான அரசின் கடமை.
கோவையில் கலெக்டர் அலுவலகம் சிறப்பாக மக்கள் குறைதீர்ப்பு நாளை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்துவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.இதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள ஆசைப்படும் இந்த அரசோ அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கும் அரசோ யாராகிலும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.வாக்காளர் அட்டைக்கு பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி செய்கிறார்கள்.ஆனால் திட்டமிடுதல் இன்னும் மேம்படுத்தப் படவேண்டும்.
ஏற்றுமதி,இறக்குமதி ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார தூண். நம்மிடம் ஏற்கனவே சென்னை துறைமுகம்,தூத்துக்குடி துறைமுகம் உள்ளன.கோவை தொழில் நகரமென்பதோடு அருகில் கொச்சின் துறைமுகம் இருப்பது தமிழ்நாட்டுக்கு சாதகமானது.இன்னும் ஒரு துறைமுக முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இருப்பதாக செய்திகள்.
விவசாய ஏற்றுமதிக்கான வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தும் சிலருக்கு ஏற்றுமதி செய்யவேண்டுமென்ற ஆவல் இருந்தும் எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை.தெரிந்தவர்கள் சிலர் ரிஸ்க் எதற்கு எடுக்க வேண்டும் என்று நினைப்பதால் இடைததரகர்களிடம் தாரை வார்த்து விடுகிறார்கள். கோவை,ஈரோடு,திருப்பூர் பகுதி விவசாயிகள் சிலர் சந்தைக்கு பொருளை கொண்டு போய் வியாபாரம் செய்வதற்கே சங்கடப்படுவதால் காசு கையில் இருக்கும் சேட்டன்கள் ஊர் கடந்து வந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி,பொருளை பேக்கிங் செய்வது முதல்,கப்பல் செலவு,வண்டி கூலி,தனது நிகர லாபம் என கணக்கிட்டு வளைகுடா சேட்டன்களுக்கு விற்று விடுகிறார்கள். தமிழகம் ஏற்றுமதி கெடுபிடிகளை குறைத்தால் கொச்சின் போகும் பொருட்களை தமிழகம் சார்ந்த துறைமுகங்களில் தமிழர்களுக்கு வருமானம் கிடைக்கும் படி செய்து விடலாம்.
ஏ.டி.எம் முறையில் வங்கிகள் சிறப்பாக செயலடுகின்றன.ஏ.டி.எம் கார்டுகளை வங்கிகளை தவிர்த்தும் வியாபார தளங்களில் வங்கி கணக்கோடு இணையும் இயந்திரத்தில் வரவு செலவை கணக்கை அளவிடும் உபயோகிக்கும் முறை வந்து பரிசோதனை செய்யப்பட்டு வளைகுடா நாடுகளிலும்,மேற்கத்திய நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன.முன்பு கிரடிட் கார்டுன்னாலே களவானி பயம் போய் இப்பொழுது கிரடிட் கார்டு இருந்தால்தான் பண பரிவர்த்தனை முறை இணையத்தில் வந்து விட்டது.
வளைகுடா நாடுகளிலிருந்து எங்கே பணம் செல்கிறதோ அத்தனையும் வங்கி,வங்கி இணைப்புடன் மத்திய வங்கி என நெட்வொர்க்கிங் வெற்றிகரமாகி விட்டன.இது வரை கடத்திய கறுப்பு பணமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை என்ற வளர்ச்சியிருந்தும் இந்தியாவில் அவை செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
இப்பொழுதுள்ள மழையிலே தெரியும்,மழை பேரிடர் வந்தால் எங்கே நீர் நிற்கும் எங்கே ஓடும் எங்கே திரும்ப வந்து வீட்டுக்குள் புகுந்து விடுமென்று. அத்து மீறி கட்டிய வீட்டு நிலங்களை அரசு கையகப் படுத்திக்கொண்டு அங்கே வாழ்ந்த மக்களுக்கு மாற்று வீடுகள் தருவது கட்டாயமானதும் முதல் கட்ட நடவடிக்கையாகும்.
எந்த கடனும் வங்கி மூலமாகவே பெறப்பட வேண்டும். கடனை கட்டவில்லையென்ற பேச்சுக்க்கே தமிழக்த்தில் பேச்சுக்கு இடமில்லை. முதலாவது தங்கம்,இரண்டாவதாக அசையாப் பொருட்கள்,மூன்றாவதாக ஆட்டைய போட மாட்டார் என இருவர் வக்காலத்து. கட்டவில்லையென்றால் குடும்பம் பொறுப்பு ஏற்க வேண்டும் அல்லது வக்காலத்து கியாரண்டி கையெழுத்து போட்டவர் பொறுப்பு. இதையும் மீறி தவிர்க்க முடியாத நிலையில் காந்தி கணக்கு என ரைட் ஆஃப் செய்து விடலாம்.நான் இந்த ஐடியா கொடுக்கும் போதே கையை எங்கே வைக்கலாம் என சில கண்மணி பிறப்புக்கள் கற்பனை செய்யக்கூடும்:)
மீதி இடங்களில் மழையில் வீடுகள் தானே சேதாரமாகி விட்டது. இருக்குமிடத்தில் புதிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.காசுக்கு எங்கே போறதுன்னா அதுக்கு அரசு நீண்டகால கடன் உதவி செய்ய வேண்டும்.காசு கொடுத்தா திரும்ப கட்டமாட்டேங்கிறாங்கப்பா எனும் வங்கிகளுக்கு எல்லோரும் அப்படியென்று சொல்ல முடியாது.ஆட்டைய போட்டு விடலாம் என்ற சில விதிவிலக்குகள் இருக்கும்.அப்படி பட்டவர்களுக்காக வேண்டியே கடனை திருப்ப கட்ட முயலுபவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் படியான சட்டங்கள் என்னவென்றால் நகை மீது கடன். அஞ்சு வட்டிக்காரன்கிட்ட போய் மாட்டிக்கொள்ளும் நகை வ்ங்கியில்தான் பாதுகாப்பாக இருக்கட்டுமே.
அரசு பணியாளர்கள் ஏற்கனவே அரசு உதவிகளை அனுபவிக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் கடன் கொடுத்தால் ரிட்டயர்டு ஆவதற்குள் கடனை கட்டி விடுவார்கள்.இல்லையென்றாலும் காப்புறுதி பணம் அரசின் கைவசமிருக்கிறது பாதுகாப்பாக.கொடுத்த பணத்துக்கு காசு வந்து விடும்.
வியாபாரிகளை நம்பி கடன் கொடுங்கள்.அவர்கள் தின சேமிப்பாளர்கள்.கடனை திருப்பி விடுவார்கள்.பொருளாதாரத்தின் அடிப்படை செலவு செய்தல்.அதற்கென்று விஜய் மல்லய்யா மாதிரி ஆடம்பரம் செய்தால் விமானம் தரை தட்டி விடும்.எந்த அளவுக்கு மக்கள் செலவு செய்கிறார்களோ அந்தளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்.
தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் கோட் சூட்காரர் ஒருவர் நகரமயமாக்கலே மழை பேரிடருக்கு காரணமென்றார். அப்படியில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சியில் நகரமயமாக்கல் இன்றியமையாதது.அதுவும் பக்கத்து மாநிலக்காரர்கள் தண்ணீர் தர மறுக்க இரு கழகங்களும் நகர் மயமாக்கல் முயற்சியில் இறங்கியது பாராட்டப் படவேண்டிய சிந்தனைதான். கடற்புற நாடுகளே வியாபாரத்தை பெருக்குகின்றன.
எதிர்காலத்தில் பெட்ரோல் இல்லாமல் போனாலோ அல்லது அமெரிக்கா மாற்று எரிபொருளை கண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற நோக்கில் எண்ணை பொருளாதாரம் இல்லாமல் போனாலும் மேற்கத்திய நாடுகளையும்,ஆசியாவையும் இணைக்கும் பாலமாக துபாய் திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் விளையும் மாம்பழம் டெல்லிக்கு ஏற்றுமதியாகி அங்கே ஒரு நிறுவனம் தோலிருக்க சுளை முழுங்கி மாதிரி மாம்பழ சாறை மட்டும் எடுத்து ட்ரம்களில் நிறைத்து வளைகுடாவுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறது. தமிழகம்,கேரளாவில் விளையும் தேங்காய் சோப்பு கலவையாகவும்,மூஞ்சி பூசிகளாகவும் மறுவடிவமாக ஒய்யாரமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் உட்கார்ந்து கொள்கிறது.நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்ன்னு ஒரு விளம்பரம் வந்த மாதிரி தேங்காய் எண்ணை அப்படியே வடித்து வந்து விடுகிறது.தமிழ் நாட்டில் பருப்பு விலையேறினாலும் மார்க்கெட்டில் விலையேற்றமில்லாமல் பொருட்களின் வைப்பு வைக்கப்படுகிறது.
முன்னவை நகர்வதும் புதியவை வந்து உட்கார்ந்து கொள்வதும் (First in First out ன்னு தமிழில் ) பொருட் கிடங்கின் வியாபார அடிப்படை. பேரிடர் மேலாண்மையென்ற சொல்லையே இப்பொழுதுதான் நான் கற்றேன்.(நன்றி பொள்ளாச்சி புரபசர்.) பேரிடர் மேலாண்மையின் முதல் அடிப்படையே உணவு சேகரிப்பும் பங்கீடும்தான்.ஒரு நாள் குளிக்காமல் கூட இருந்து விடலாம்.உணவு கட்டாயம்.மாவட்டம் தோறும் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு பழுதென்றாலும் இன்னொன்று கைகொடுக்கும்.
சதாம் உசைனின் ஆக்கிரமிப்பின் பின் கூட குவைத் தனது நாட்டின் தகவல் சார்ந்த செய்திகளை இழக்கவில்லை. தனது நாட்டில் ஒரு காப்பியும்,மாஸ்டர் காபி என லண்டன்,அமெரிக்கா என ஐந்து இடங்களில் வைத்திருந்தது. எனவே நாடு குறித்த அனைத்தையும் மீள் கட்டமைக்க முடிந்தது. முன்பு காகிதம் மட்டுமே உதவியென்ற நிலை போய் இப்பொழுது காகித ஆவணத்தோடு கம்ப்பூட்டர் தகவல்கள் அதுவும் எளிதாக சேகரிக்கும் வசதிகளில் அரசு தகவல்கள் மீட்கொணர்வு பிரச்சினையே இல்லை.காகிதத்தையும் நம்பாதே!கணினியையும் நம்பாதே புதுமொழி இந்த மழைக்கு மிகவும் பொருந்துமென்றாலும் நகல்கள் ஓரளவு தகவல்களை தக்க வைக்கும்.மத்திய மாநில இணைப்புக்கள் அவசியம்.
அரசுப் பணியாளர்கள் ரிலாக்ஸாக பணி புரியுங்கள். அரசுப் பேருந்து வாகன நடத்துனர்களைப் பாருங்கள்.அடுத்த இடம் வருவதற்குள் டிக்க்ட்டும் கொடுத்து கணக்கும் எழுதிக்கொள்கிறார்.இறுக முகம் வைக்காதீர்கள். ஹலோ சொல்லிப் பழகுங்கள்.முகத்தில் சிரிப்பு காட்டுங்கள்.மன அழுத்தம் குறையும். இம்புட்டு வேலையில் யாருக்கய்யா சிரிப்பு வரும்னு எதிர்க் கேள்வி போட்டால் குறைந்த பட்சம் கொஞ்சம் மூச்சை இழுது விட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். வங்கி,நீர் வரி,நில வரிக்காரர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.காசைப் பார்த்துக்கொண்டே இருப்பதால்தானோ!
சிடு மூஞ்சிகளாய்,வரிசையில் நில்லுன்னு தாசில்தார்,போலிஸ் நிலையம் குறைந்த பட்சம் பெஞ்சு போட்டு வைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. வருமான வரி கணக்கு அட்டைக்காரர்கள் ஒரு விண்ணப்பம்,ஒரு போட்டோ ஒரு வார் காலத்திற்குள் வீடு தேடி கணினி தகவல் அட்டை வந்து விடுகிறது. தற்போதைய நிலையில் ஒரு தேசிய அட்டை,ஒரு வங்கி அட்டை,ஒரு கிரடிட் கார்டு போதுமானது.
எத்தனை ஆவணத் தேவைகள்?
பள்ளி,கல்லூரி சான்றிதழ்
ரேசன் கார்டு
பாஸ்போர்ட் காப்பி
வீட்டு வரி / நீர் வரி / மின் வரி
இருப்பிட சான்றிதழ்
வாக்காளர் அட்டை
புதிதாக வந்திருக்கும் கண்,கை ரேகை
12/14 இலக்க எண்,பெயர்,படம் தவிர வேறு தகவல் இல்லாத தேசிய அட்டை
இத்தனையையும் ஒரே ஒரு டாடா கார்டு பதித்த தகவல் சேமிப்பு தேசிய அட்டை செய்து விடும்.ஒரே எண் அனைத்து துறைகளுக்கும் வங்கி உட்பட.அப்படித்தான் தேசிய அட்டைகள் அச்சடிக்கப் படுகின்றன.
மழை கடவுள் கொடுத்த நன்கொடையா!
தின வாழ்வை கெடுத்த மின் தடையா!
மழை கூட புதுப்பித்தலே!புதியவர்களாவோம்.